This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
முன்பு மன்மதன் தன் மீது புஷ்பபாணத்தை ப்ரயோகம்
செய்ய எத்தனித்தபோது அதற்கு இடங்கொடாமல் தன் நேத்தி
ராக்னியினால் அவனை எரித்த பரமசிவனானவர் அம்பிகையின்
ஸௌந்தர்யத்தில் ஈடுபட்டு மனத்தளர்ச்சியடைந்து மோஹ
மடைந்ததை 'சிதிலித பரமசிவ தைர்ய மஹிமானம்
என்று
இங்கு சொல்லப்பட்டது.
 
14
 
आहतकाञ्चीनिलयां आद्यामारूढयौवनाटोपाम् ।
 
आगमवतंसकलिकां आनन्दाद्वैतकन्दली वन्दे ॥ ९ ॥
 
ஆத்ருத காஞ்சீ நிலயாம் ஆத்யாம் ஆரூட
(யௌவனாடோபாம்।
ஆகமவதம்ஸ கலிகாம் ஆனந்தாத்வைதகந்தலீம்
 
[வந்தே !!
 
ஆத்ருத காஞ்சீ நிலயாம் - காஞ்சீபுரியை வாஸஸ்தானமாகக்
கொண்டிருப்பவளும், ஆத்யாம் -ப்ரபஞ்சத்திற்கெல்லாம் ஆதி
யாய் இருப்பவளும், ஆரூட யௌவனாடோபாம் - யௌவனத்தின்
ஆடம்பரத்தோடு நிறைந்தவளும்,ஆகவதம்ஸகலிகாம் - வேதங்
களின் சிரோபாகத்திற்கு பூஷணமான மொக்குப்போலிருப்பவ
ளும், ஆனந்தாத்வைதகந்தலீம் - ஆனந்தத்திற்கு ஒரே துளிர்
போலிருப்பவளுமான (ஸ்ரீ காமாக்ஷியை), வந்தே -நமஸ்கரிக்
 
கிறேன்.
 
1. அவதம்ஸமென்றால் சிரோபூஷணமென்று அர்த்தம்.
கலிகா என்றால் மொக்கு (மொட்டு) என்று அர்த்தம். கிரீடத்தில்
மொக்கை அலங்காரமாக தரிப்பது வழக்கம்.
 
உதாஹரணமாக
"முகுளித கரோத்தம்ஸ மகுடா:
என்றும் "கோத்ராதரபதி
குலோத்தம்ஸகலிகே என்றும் "ஸௌந்தர்யலஹரி "யில் வர்
ணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அம்பிகையை " ஆகமவதம்ஸக
லிகா' என்பதினால் வேதங்களின் சிரோபகமான உபநிஷத்துக்
களுக்கு முடிவான தாத்பர்யமாக இருப்பது சொல்லப்பட்டது.
 
2. "அத்வைதானந்தகலீம்' என்றும் சொல்லலாம். அத்
வைதானந்தம் என்றால் ஜகத்தும் ப்ரம்ஹமும் ஒன்று என்பதான
அறிவு ஏற்படும்போது உண்டாகும் ஆனந்தம் என்று அர்த்தம்.
 
तुङ्गाभिरामकुचभर शृङ्गारितमाश्रयामि काञ्चिगतम् ।
गङ्गाधरपरतन्त्रंशृङ्गाराद्वैततन्त्रसिद्धान्तम् ॥ १० ॥