This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
13
 
2. பரமசிவனுக்கு இருப்பதுபோல் அம்பிகைக்கும் சிரஸில்
சந்த்ரகலை உண்டு.
 
3. வேதசிரோபாகங்களான உபநிஷத்துக்களில் அம்பிகை
பாதிபாதிக்கப்படுவது.
 
'ச்ருதிஸீமந்த திஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா ।
ஸகலாகம ஸந்தோஹ சுக்தி ஸம்புட மௌக்திகா ॥'
என்று 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும்
 
"ச்ருதினாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகதரயா
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ ।
என்று 'ஸௌந்தர்யலஹரி'யிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
 
4. அம்பிகையினால் தான் பரமசிவனுக்கு ஸகல ஐச்வர்ய
மும் ஏற்பட்டிருக்கிறது என்பது 'சிவ: சக்த்யா யுக்தோ' என்ற
ஸௌந்தர்யலஹரி சலோகத்தில் சொல்லப்பட்டிருப்பதுடன்
 
'அக்ஞாதஸம்பவம் அனாகலிதான்வவரயம்
பிக்ஷும் கபாலினம் அவாஸஸம் அத்விதீயம் ।
பூர்வம் கரக்ரஹண மங்களதோ பவத்யா:
சம்பும் க ஏவ புபுதே கிரிராஜகன்யே !!'
என்பதாக 'அம்பாஸ்துதி'யில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
 
श्रितकसीमानं शिथिलितपरमशिवधैर्यमहिमानम् ।
 
कलये पाटलिमान कंचन कञ्चकितभुवनभूमानम् ॥ ८ ॥
ச்ரிதகம்பா ஸீமானம் சிதிலித பரமசிவ
 
[தைர்ய மஹிமானம்
கலயே பாடலிமானம் கஞ்சன கஞ்சுகித
 
[புவன பூமானம் !!
 
சரிதகம்பாஸீமானம் - கம்பாநதியின் கரையிலிருப்பதும், பரம
சிவ தைாய - பரமசிவனுடைய தைர்யத்தை (மன உறுதியை),
சிதிலித-நழுவச் செய்ததான (கைவிடும்படிச் செய்ததான) மஹி
மானம் - மஹிமையோடு கூடியதும், கஞ்சுகிதபுவனபூமானம் - ஸகல
புவனங்களையும் கஞ்சுகம்போல் தரித்திருப்பதும், பாடலிமானம்-
வெண்சிவப்பு நிறத்தோடு கூடியதுமான,கஞ்சன-ஒரு வஸ்து
வை (மூர்த்தியை) கலயே - த்யானிக்கிறேன்.