ஸ்ரீ காமாக்ஷயை நம: मुककवि प्रणीत ॥ आर्या க7/1 மஹானான் முக கவி இயற்றிய ஆர்யா சதகம். (J.க பஞ்சசதியின் முதல் பாகம்) மூலம் நாகரத்திலும் தமிழிலும் " ஸௌந்நர்ய லஹர் " "ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் இவற்றை மொழிபெயர்த்த G.V. கணேச அய்யர், B.A., B.L.. எழுதிய பதவுரை, விசேஷக் குறிப்புகளுடன் கூடியது. All Rights Reserved. Printed & Published by S. KALYANASUNDARAM, The Sri Janardana Printing Works Limited Town High School Road, Kumbakonam, ஸ்ரீ காமாக்ஷக்ஷ்யை நம: அவதாரிகை. அம்பிகையைப்பற்றிய ஸ்தோத்திரங்களைச் செய்தவர்களில் ஸ்ரீமதாசார்யாள் முதன்மையானவர்களென்று சொல்வதில் யாதொரு ஆக்ஷேபமுமிருக்காது. அவருக்கு அடுத்த படியிலி ருப்பவராக மூக கவியைச் சொல்லவேண்டும். அதாவது மூக கவியை விடச் சிறந்த வாக் விசேஷத்தையுடைய ஐவி யாரென்று கேட்டால் நமது ஆசார்யாளைச் சொல்லவேண்டுமே தவிர வேறு ஒருவரையும் சொல்லமுடியாது. ஊமை மூகருடைய ஜீவிய சரித்திரத்தைப்பற்றி அதிகமாகத் தெரிந் துகொள்வதற்கு நமக்கு ஆதாரங்கள் யாதொன்றுமில்லை. யொருவர் காஞ்சீபுரத்தில் ஸ்ரீ காமாக்ஷியின் ஸன்னிதியிலிருந்து கொண்டு அம்பிகையை உபாஸித்துவந்தாரென்றும், அப்போது ப்ரஸன்னமான அம்பிகையின் உச்சிஷ்டம் தெறித்து அந்த உச் சிஷ்டமே அம்ருதரூபமாக ஏற்பட்டு அவருக்கு உயர்ந்த வாக்கை உண்டாக்கவும் அவர் மஹா கவியாக ஆனாரென்றும் தற்காலம் காமகோடி பீடத்தில் விளங்கிவரும் ஸ்ரீ சங்கராசார்யாள் சொல்லி யிருக்கிறார்கள். (நன்மொழிகள் பக்கம் 103). தவிர, காஞ்சீ ஸ்ரீ காமகோடி பீடத்திய குரு பரம்பரையில் (இரண்டாவது) வித்யாகனர் என்பவருக்கு அடுத்தாற்போல் வந்த (நான்காவது) சங்கரர் என்பவர்தான் மூக கவியென்பதாக ஒரு அபிப்பிராயமும் உண்டு. இவர் ஆதியில் ஊமையாக இருந்ததாக வும் ஸ்ரீ வித்யாகனேந்த்ர ஸரஸ்வதியவர்களுடைய அனுக்ரஹத் தினால் அவ்விதக் குறை நீங்கப்பெற்று மஹா கவியாக மாறி அவ ருக்கு அடுத்தாற்போல் காமகோடி பீடத்திலும் இருந்து விளங்கி னாரென்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இவருடைய பெயர் மூக சங்கரரென்றும் சொல்லப்படும். இவர் A. 0.398-ல் பீடா ரோஹணம் செய்து A.D.437-ல் ஸித்தியடைந்ததாகவும் நிர்ண யிக்கப்பட்டிருக்கிறது. மூகபஞ்சசதீ மூகரால் இயற்றப்பட்ட ஐந்நூறு (ச்லோகங்கள்) என்பதாக இவருடைய ஸ்தோத்திரத்தை "மூகபஞ்சசதீ" என்று ஆதி காலம் முதல் நாள் வரை ரயில் சொல்வது வழக்கமே தவிர, ஸ்தோத்திரத்திற்கு வேறு பெயர் கிடையாது. இது நூறு நூறு சலோகங்கள் கொண்டதாக ஐந்து சதகங்கள் அடங்கியது. அவற் றின் பெயர்கள் ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், மந்தஸ்மித சதகம், கடாக்ஷ சதகம், ஸ்துதி சதகம் என்பவை. முதலாவதும் கடைசியதும் ஸ்ரீ காமாக்ஷியைப் பொதுவாக ஸ்தோத்திரம் செய் கையில், பாக்கி மூன்றையும் முறையே ஸ்ரீ காமாக்ஷியினுடைய பாதாரவிந்தத்தையும், புன்சிரிப்பையும், கடாக்ஷத்தையும் வர்ணிக் கின்றன. ச்லோகங்களின் வருத்தங்களும் ஒவ்வொரு சதகத் திற்கும் வெவ்வேறாக அமைந்திருக்கின்றன. 2 மூக கவியினுடைய வாக்கின் மாதுர்யமானது சலோகங் களின் மூலத்தை வாசித்து அறிகின்றவர்களுக்குத் தான் தெரிய வரும். பதங்களெல்லாம் ஜிலுஜிலென்று மிகவும் லலிதமாயும் காதுக்கு இனிமையாயும் அமைந்திருப்பதுடன் அர்த்த பாவ மானது பக்தியைப் பெருகச்செய்து அம்பிகையின் மனதிலுள்ள கருணைக்கடலை கொந்தளிக்கும்படியாகச் செய்யக்கூடிய விதமா யிருக்கிறது. ஒவ்வொரு சலோகத்திலும் ஸ்ரீ காமாக்ஷி, காம கோடிபீடம், ஏகாம்ர நாதர், காஞ்சீ, கம்பாநதீ இம்மாதிரியான காஞ்சீபுரத்தைப்பற்றிய அம்சங்கள் ஒன்றாவது சொல்லப்பட் டிருப்பது இந்த ஸ்தோத்திரத்தின் அழகுகளில் ஒன்றாகும். இந்த ஸ்தோத்திரத்தில் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீ காமாக்ஷி தேவியானவள் ஸ்ரீ லலிதாம்பிகையே. பச்சாத் சதுர்புஜா ஜாதா ஸா பராத்ரிபுராருணா பாசாங்குசே- கோதண்ட பஞ்சபாண லஸத்கரா । லலிதா ஸைவ காமாக்ஷி காஞ்ச்யாம் க்யாதிமுபாகதா ]] மற்ற சதகங்களும் மொழிபெயர்ப்புடன் கூடிய அர்த்த வியாக்யானங்களுடனும் வெளிவந்திருக்கிறது. இந்த ஐந்து சத கங்களுடைய ஸ்தோத்திரம் மட்டும் நாகர லிபியில் வெளிவந்து இருக்கிறது. ஆர்யா சதகம் பக்தர்களுடைய காமங்களையெல்லாம் தன் த்ருஷ்டி பட்ட மாத்திரத்திலேயே பூர்த்தி செய்விப்பதால் லலிதாம்பிகைக்கு காமாக்ஷக்ஷி என்ற பெயர் ஏற்பட்டது. 'யத் யத் வாஞ்சந்தி தத்ரஸ்த்தா: மனஸைவ மஹாஜனா: । ஸர்வக்ஞா ஸாக்ஷிபாதேன தத்தத் காமான் அபூரயத் ]] தத் த்ருஷ்ட்வா சரிதம் தேவ்யா: ப்ரம்ஹா லோகபிதாமஹ: காமாக்ஷிதி ததாபிக்யாம் ததௌ காமேச்வரீதி ச ] (லலிதோபாக்யானம்) காஞ்சீ க்ஷேத்ரத்தின் மஹிமையானது வர்ணனையிலடங்காதது. 'நேத்ரத்வயம் மஹேசஸ்ய காசீ காஞ்சீ புரீத்வயம் . 3 ப்ரளயகாலத்திலும் அழிவில்லாதது. ஸ்ரீசக்ராகாரமாக அமைக் பதியான கப்பெற்றது. ஸ்ரீ காமாக்ஷியானவள் அங்கு காமகோடி பீடத் தில் வீற்றிருந்து பக்தானுக்ரஹம் செய்துகொண்டிருக்கிறாள். அம்பிகையின் காமேச்வரரானவர் அங்கு ஏகாம் நாதர் என்ற பெயருடன் விளங்கிக்கொண்டிருக்கிறார். ஈச்வர னுடைய பெயரில் குறிக்கப்பட்ட ஏகாம்ரமானது (ஒற்றை மாம ரமானது) இன்னமிருந்துகொண்டிருக்கிறது. இந்த ஆம்ரத்தின் ஸ்வரூபமானது. 'சிவபீஜ ஸமுத்பூதம் வேதசாகாபிருஜ்வலம் ம்ருகண்டு தனியாதாரம் ரஸாலம் தம் நமாம்யஹம் ]1. என்றபடி வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அம்பாளுடைய ஸ்ரீ க்ரு ஹத்தின் வாயுபாகத்தில் ருத்ரகோடியில் ஸ்ரீ ஏகாம்ரநாதருடைய ஆலயமும் ஏகாமரமும், ஆக்னேய பாகத்தில் ஸ்ரீ புண்யகோடி யில் ஸ்ரீ வரதராஜருடைய ஆலயமும் அமைக்கப்பெற்றிருக்கின் றன். தி ஸ்ரீமந்திரஸ்யாஸ்ய வாயுபாகே மஹேசிது: । விஸ்த்ருதம் புவனச்ரேஷ்டம் கல்பிதம் பரமேஷ்டினா ஸ்ரீக்ருஹஸ்யாக்னிபாகே து விசித்ரம் விஷ்ணுமந்திரம் II பரப்ரம்ஹஸ்வரூபிணியான மஹா காமேச்வரியானவள் ஸ்ரீ காமா க்ஷியாகவும்,(ஸ்ரீ ஏகாம்ரநாதரென்ற) ஸ்ரீ மஹா காமேசஸ்வரூபி மூகபஞ்சசதீ ணியாகவும்,(ஸ்ரீ வரதராஜசென்ற) ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூபிணி யாயுமிருப்பதுடன் ஸ்ரீ காமகோடியில் ஸ்ரீ காமராஜ பீடத்தில் பிலாகாச ரூபிணியாயும் விளங்கிக்கொண்டிருக்கிறாள். இந்த மஹாபிலமானது நாதபிந்து யுக்தமான பரமாகாச ஸ்வரூபமென்றும், ப்ரம்ஹ சரீரமென்றும், ஜகத்காமகலாகார மென்றும் பலவிதமான பெயர்களால் குறிக்கப்படும். அம்பாள் பிலாகாச ஸ்வரூபிணியாயிருக்கையில் லோககண்டகனான பந்த காஸ ரன் என்பவனை ஸம்ஹரிப்பதற்காக கன்யகாரூபமாய் வெளியில் வந்ததும், அவனுடைய ஸம்ஹாரமானபிறகு அம்பிகை யின் கட்டளையால் அந்த மஹாபிலத்தின் த்வாரத்தின் பேரில் காயத்ரீ ஸ்வரூபமான மண்டபமானது தேவதைகளால் கட்டப் பட்டு பிலத்திற்கு மறைவிடமாயிருப்பதும், மற்ற விஷயங்களும் 'ஸ்ரீ காமாக்ஷி விலாஸ த்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 'காயத்ரீ மண்டபாதாரம் நாபிஸ்தானம் புவ: பரம் । புருஷார்த்தப்ரதம் சம்போ: பிலப்ராந்தம் நமாம்யஹம் ]1' இந்த பிலத்தில் ஆகாசரூபிணியாயிருந்த அம்பாளுடைய உக்ரஸ்வரூபத்தை சமனம் செய்வதற்காக ஸ்ரீமதாசார்யா ளால் ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டாபனம் செய்யப்பட்டு அம்பாள் அவ் விடத்தில் ஆகர்ஷணம் செய்யப்பட்டு அங்கு ஸான்னித்யத்தோ டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் கைலாஸத்தில் அம்பிகையானவள் லீலையாகத் தன் பதியின் நேத்திரங்களைத் தன் கைகளால் மறைக் கவும், அந்த ஒரு க்ஷணத்தில் லோகங்களிலெல்லாம் அந்தகார மேற்பட்டு தத்தளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த பரமசிவன் அம்பிகையின் மீது கோபிக்கவும், அதற்கு விமோசனமாக காஞ்சீ புரியில் தன்னைக்குறித்து தவம் செய்து மீண்டும் தன்னை அடையு மாறு சொல்லப்பட்ட தேவியானவள் அவ்விதம் காஞ்சிக்கு வந்து கடினமான நியமத்தோடு ஆம்ர மாத்தினடியில் மணலைக்கொண்டு லிங்க மூர்த்தியைக் கல்பித்து கடுந்தவமியற்றுகையில் அம்பிகை யின் ப்ரேமாதிசயத்தின் அளவைக்கண்டானந்திக்க எண்ணங் கொண்ட பரமேச்வசன் கங்கையையழைத்து ப்ரவாஹரூபமாய் ஆர்யா சதகம் அம்பிகையின் தவத்திற்கு இடையூறு செய்யும்படிச் சொல்லவும், அப்படியே கங்கையானவள் பயங்கரமான ப்ரவாஹமாய் வந்து அம்பிகை தவம் செய்யுமிடத்தை நெருங்கவும் அம்பாள் லிங்க ரூபமாயிருக்கும் தன்பதிக்கு ஆபத்து நேரிடுமோவென்று பயந்து கலங்கி வேறொன்றும் செய்வதற்குத்தோன்றாமல் தன் கைவளை கள் பதியவும் இரு ஸ்தனங்கள் குழையவும் தன் பதியைக் கட்டி ஆலிங்கனம் செய்தவுடன் அதினால் பரமானந்தமடைந்த பரமேச் வரன் ப்ரஸன்னமாகி ப்ரவாஹத்தைத்தடுத்து அம்பிகையின் அபீ ஷ்டத்தைக் கொடுத்ததாகவும் சொல்லப்படும். (இந்த நதியினால் அம்பிகைக்கு கம்பம் (நடுக்கம்) உண்டான காரணத்தைக் கொண்டு அதற்கு கம்பா என்று பெயர் ஏற்பட்டது.) 5 இங்குள்ள பரமசிவனுடைய லிங்க மூர்த்தியானது அம்பா ளால் ஆலிங்கனம் செய்யப்பட்டபோது அம்பாளுடைய ஸ்தன, கங்கணங்கள் அழுந்தியதினால் ஏற்பட்ட அடையாளங்களோ டிருப்பதாகச் சொல்லப்படும். 'உமாலிங்கன ஸங்க்ராந்த குசகங்கணமுத்ரிதம் । லிங்கம் ஏகாம்ரநாதஸ்ய ஸைகதம் ஸமுபாஸ்மஹே 11' உபயை இவ்விதமான லீலைகள் நடந்த புண்யக்ஷேத்ரமாகிய காஞ்சி யில், பக்தகோடிகளுக்கு ஸமஸ்தமான காமங்களையும் கொடுக்கும் கருணா ரூபிணியான ஜகன்மாதாவானவள் ஸ்ரீ காமாக்ஷி என்ற அஸாதாரணமான நாமத்துடன் பக்தானுக்ரஹார்த்தமாக விளங் கிக் கொண்டிருக்கிறாள். அப்பேர்ப்பட்ட பரதேவதையின் க்ரு அடைவதற்கு மூக கவியால் அருளிச் செய்யப்பட்ட இந்த 'பஞ்சசதீ' என்ற ஸ்தோத்ரமானது முக்யமான ஸாதன மாகும். வாசிக்க வாசிக்க ஆனந்தத்தையும் அம்பிகையினிடம் பக்தியையும் பெருகச்செய்யும் இந்ததிவ்யமான ஸ்தோத்திரத்தை யாவரும் எளிதிலறியும் விதமாக தமிழில் மொழி பெயர்த்து இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பக்தர்களனைவரும் இதை வாசித்து மூககவியினுடைய பேருபகாரத்தினால் ஸ்ரீலலிதா மஹா த்ரிபுரஸு வந்தரியாகிய ஸ்ரீ காமாக்ஷியின் ஸ்வரூப ஞானமடைந் ந்திது மூகபஞ்சசதீ அவளுடைய க்ருபைக்குப் பாத்ரர்களாக வேண்டுமென்று கோ டுக்கொள்ளுகிறேன். இக்ஷு கோதண்ட புஷ்பேஷ பாசாங்குச லஸத்கராம்। உத்யத்ஸூர்ய நிபாம் வந்தே மஹாத்ரிபுரஸுந்தரீம் 11 விச்வகாரண நேத்ராட்யாம் மஹாத்ரிபுரஸுந்தரீம் பந்தகாஸுர ஸம்ஹர்த்ரீம் காமாக்ஷம் தாமஹம் பஜே 11 ஸ்வர்ணாங்கீம் ரத்னபூஷாட்யாம் சுகஹஸ்தாம் சுசிஸ்மிதாம்] காஞ்சீ நிவாஸினீம் வந்தே காமாக்ஷும் காமிதார்த்ததாம் ]] G.V.G. ஸ்ரீ காமாக்ஷ்யை நம: மூகபஞ்சசதி 99 ஆர்யா சதகம். कारणपरचिद्रूपा काञ्चीपुरसीनि कामपीठगता । काचन विहरति करुणा काश्मीरस्तबककोमलाङ्गलता ॥ १ ॥ காரண பரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா காசன விஹரதி கருணா காச்மீர ஸ்தபக கோமளாங் [கலதா II காரண பரசித்ரூபா -காரணபரசித் ரூபிணியும், காஞ்சீபுர ஸீமனி - காஞ்சீபுரத்தின் எல்லைக்குள் (காஞ்சீபுரத்தில் இருக்கும்) காமபீடகதா - காமகோடி பீடத்திலிருப்பவளும், காச்மீரஸ்தபக கோமளாங்கலதா - குங்குமப்பூவின் கொத்துபோல் ம்ருதுவான சரீரத்தையுடையவளுமான, காசன்-ஏதோ ஒரு (வர்ணனையிலடங் காத), கருணா -கருணா ரூபியானவள், விஹரதி - விளையாடிக் கொண்டிருக்கிறாள். 1. சித் என்றால் ஞானம், உணர்ச்சி என்றர்த்தம். 2. நிஷ்களமும் நிருபாதிகமுமான பரப்ரம்ஹமானது பரா ஸம்வித்ரூபமானது. இதையே தான் பரசித்ரூபமென்று சொல் லப்படும். இப்படியிருக்கும்போது அது யாதொரு விதமான உணர்ச்சியாவது நினைவாவது இல்லாத நிலையோடிருக்கும். அதற்கு அஹம் (நான்) என்றாவது, இதம் (இது, அதாவது தன்னை தவிர்த்ததான ஒன்று) என்றாவது பாவங்கள் தனியாக அப்போது கிடையாது. அதாவது, அவ்விரண்டு பாவங்களும் இரண்டறக் கலந்து அவற்றுள் பாகுபாடில்லாமல் இருப்பது (நிர்குண) பர ப்ரம்ஹத்தின் ஸ்வரூபம். 3. இதையே தான் சிவசக்தி ஸாமரஸ்யமான ரூபமென்று சொல்லப்படும். இவையிரண்டில் சிவனென்பது பரப்ரம்ஹத்தின் மூகபஞ்சசதீ ப்ரகாசாம்சமென்றும், சக்தியென்பது விமர்சாம்சமென்றும் சொல்லப்படும். திரும்பவும் சித் என்பதே சிவனென்றும் ப்ரகா சாம்சமென்றும் சொல்லப்படும். விமர்சாம்சமான சக்திய யானது இருவகைப்பட்டது. பரப்ரம்ஹத்தில் சிவனோடு ஆமாசமாக (இரண்டற) கலந்திருக்கும்போது அது ஸூக்ஷ்மமான ரூபத் தோடிருக்கிறது. அப்போது அதை சித்ரூபிணீ, சைதன்யரூபா என்று சொல்லப்படும். (ரூபமென்ற பதத்தின் விசேஷமென்ன வென்றால் சித்தாக இருந்தபோதிலும் (பிறகு ஜகத்தாகப்பரிண மிப்பதால்) அதினின்றும் வெறுபட்டது போன்றது என்பது தாத்பர்யம்] ஆகவே சிவனை சித் என்றும், சக்தியை சித்ரூபிணி யென்றும் சொல்லப்படும். இவ்விரண்டும் பரப்ரம்ஹத்தில் தனித் தனியாக இராமல் சேர்ந்திருப்பதால் பரப்ரம்ஹத்தை ப்ரகாச விமர்ச ஸாமரஸ்ய ரூபமென்று சொல்லப்படும். 8 4. ப்ரளயகாலத்தில் ஸகல ஜகத்தும் நசித்துப்போய் ப்ரம் ஹம் மட்டும் எஞ்சியிருக்கும்போது அதற்கு வேறு வஸ்துக்கள் தேவையில்லாமல் தன்னை மறந்து ஸ்வாத்மாராமமாய் நிருபாதிக ஸம்வித் ரூபமாயிருக்கிறது. பிறகு ப்ராணிகளுடைய பூர்வ கர் மாக்களின் விசேஷத்தினால் ஸ்ருஷ்டி ஏற்படவேண்டிய ஸமயம வரும்போது ப்ரம்ஹத்திற்கு ஒருவிதமான ஸ்ருஷ்டியோன்முக மான உணர்ச்சி உண்டாகி (முந்தி இரண்டறக்கலந்திருந்த) அதி னுடைய ப்ரகாச, விமர்சாம்சங்கள் எழுச்சியடைகின்றன. அப் போது ப்ரகாசாம்சமானது அனன்யோன்முகமான அஹம் என்ற பாவத்தோடிருக்கையில் விமர்சாம்சமான சக்தியானது இதம் என்று சொல்லப்படுவதான ஜகத்திற்குக் காரணமாயிருந்து அவ் வித ஜகத்தாகவும் பரிணமிக்கிறது. அதாவது சக்தியானவள் ஸூக்ஷ்மரூபத்தில் விக்வோத்தீர்ணையாக (ஜகத்தை கடந்தவளாக) பரப்ரம்ஹத்தில் சித்ரூயிணியாயிருந்தவள், ஸ்ருஷ்டி காலத்தில் ஸ்தூல ரூபத்தில் விச்வாத்மிகையாக (ஜகத்தாக) தோன்றுகிறாள். இப்படி, ப்ரம்ஹமானது ஸ்ருஷ்டியோன்முகமாகி ப்பாவருத்திப் பதும்,அஹம், இதம் என்ற பாவங்கள் தனிப்பட்டு அதினால் இதம் என்று குறிப்பிடப்படும் ஜகத்தானது உண்டாவதும், பரப் ரம்ஹத்தின் விமர்சாம்சத்தின் செயல்கள். 1. 5. இவ்விதம் ஜகத்திற்குக்காரணமும்,பராஸம்வித்(பாசித்) ஸ்வரூபமான பரப்ரம்ஹத்தின் விமர்சாம்சமுமான சக்தியாக ஆர்யா சதகம் அம்பிகை இருப்பதை இங்கு காரண பரசித்ரூபா என்று சொல்லப் பட்டது. [இவ்வித விமர்சாம்சமானது ப்ரகாசாம்சமான பரம சிவனுடன் ஸாமாஸ்யமடைவதின்பேரில் ஜகத்தானது உண்டா கிறதே தவிர கேவலம் சிவனாலாவது சக்தியினாலாவது ஜகத் ஸ்ருஷ்டி ஏற்படுவதில்லை என்பது ஸித்தாந்தம்.] 6. அம்பிகையின் பீடங்கள் ஐம்பத்தியொன்று என்று சொல்லப்படுகையில் அவற்றில் முக்கியமானவை ஒட்யாண, ஜாலந்தர,பூர்ணகிரி,காமராஜ பீடங்களென்றும், அவற்றிலும் காமரரஜ பீடமென்பது தான் முக்யமானதென்றும் சொல்லப் படும். அந்த பீடமானது காஞ்சியிலிருப்பதாகவும் அதின் மத்தி யில் அம்பிகை இருப்பதாகவும் இங்கு சொல்லப்பட்டது. இதையே காமபீடமென்றும் காமகோடி பீடமென்றும் சொல் லப்படும். 7. அம்பிகையானவள் தன் குழந்தைகளான நம்மிடம் பரமகருணையோடிருப்பது இந்த ஸ்தோத்ரத்திலும் இதர ஸ்தோ த்ரங்களிலும் விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. कंचन काञ्चीनिलये करघृतकोदण्डबाणसृणिपाशम् । कठिनस्तनपरन कैवल्यानन्दकन्दमवलम्बे ॥ २ ॥ கஞ்சன காஞ்சீ நிலயம் கரத்ருத கோதண்டபாண் ஸ்ருணி பாசம்। கடினஸ்தனபர நம்ரம் கைவல்யானந்த கந்தம் அவலம்பே !! காஞ்சீ நிலயம் - காஞ்சியை வாசஸ்தானமா மாயுடையதும், கரத்ருத கோதண்ட பாண ஸ்ருணி பாசம் - கைகளில் தரித்த (இக்ஷு) கோதண்ட, (புஷ்ப) பாண, அங்குச, பாசங்களோடு கூடியதும், கடினஸ்தனபர நம்ரம் - உறுதியான ஸ்தனபாரத் தினால் வளைந்திருப்பதும், கைவல்யானந்தகந்தம் - கைவல்ய மென்ற மோக்ஷத்தின் ஆனந்தத்திற்கு வித்தாகியிருப்பதுமான, கஞ்சன - ஓரானொரு பரம்பொருளை, அவலம்பே - சரணமடை கிறேன். 2 மூகபஞ்சசதீ 1. ஸ்ரீ லலிதாம்பிகையே ஸ்ரீ காமாக்ஷியாகையால் அதே ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. 10 2. காஞ்சீ திலகம் என்ற பாடாந்தரத்தில் காஞ்சி புரிக்குத் திலகம் போல் விளங்குகிறவள் என்றர்த்தம். चिन्तितफलपरिपोषणचिन्तामणिरेव काञ्चिनिलया मे । Araளி ॥ 3 ॥ சிந்தித பல பரிபோஷண சிந்தாமணிரேவ சிரதரஸுசரித ஸுலபா சித்தம் சிசிரயது [காஞ்சிநிலயா மே । [சித் ஸுதாதாரா 11 காஞ்சிநிலயா - காஞ்சியிலிருப்பவளும், சிரதர ஸ சரித் ஸ் 1லபா- வெகு நீண்ட காலமாகச் செய்யப்பட்ட ஸத்கார்யங் களால் எளிதில் அடையக்கூடியவளும், சிந்தித பலபரிபோஷண நினைத்த பலன்களைக் கிடைக்கச் கிடைக்கச் செய்வதில், சிந்தாமணி ரேவ - சிந்தாமணியைப் போலவே இருப்பவளுமான, சித்ஸுதா தாரா - சித்ரூபமான அம்ருத தாரையான (ஸ்ரீ காமாக்ஷியான) வள், மே - என்னுடைய, சித்தம் - மனதை, சிசிரயது - குளிரச் செய்யட்டும். कुटिलकंचं कठिन कुच कुन्दस्मितकान्ति कुकुमच्छायम् । कुरुते विहृतिं काब्च्यां कुलपर्वतसार्वभौमसर्वस्वम् ॥ ४ ॥ குடிலகசம் கடினகுசம் குந்தஸ்மிதகாந்தி [குங்குமச்சாயம் । குருதே விஹ்ருதிம் காஞ்ச்யாம் குலபர்வத ஸார்வபௌம் ஸர்வஸ்வம் ॥ குடிலகசம் - வளைந்த கூந்தல்களையுடையதும், கடினகுசம்கெட்டியான ஸ்தனங்களையுடையதும்,குந்த ஸ்மித காந்தி- குந்த புஷ்பம்போன்ற காந்தியுடைய புன்சிரிப்பையுடையதும், குங்குமச் சாயம் - குங்குமம் போன்ற நிறத்தையுடையதும், குலபர்வத ஸார்வபௌம - குலபர்வதங்களின் சக்ரவர்த்தியான ஹிமவானு டைய, ஸர்வஸ்வம் ஸமஸ்த ஸௌபாக்ய ரூபமாயிருப்பதுமான ஒரு மூர்த்தியானது, காஞ்ச்யாம் - காஞ்சீபுரியில், விஹ்ருதிம் குருதே - விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆர்யா சதகம் பூமியிலிருக்கும் பர்வதங்களில் முக்யமான ஏழு பர்வதங் களை குல பர்வதங்களென்று சொல்லப்படும். அவற்றின் பெயர்கள்:'மஹேந்த்ரோ மலய: ஸஹ்ய: சுக்திமான் ருக்ஷபர்வத: । விந்த்யச்ச பரியாத்ரச்ச ஸப்தைதே குலபர்வதா: [i' அவற்றிற்கெல்லாம் சக்ரவர்த்தியாக ஹிமவானைச் சொல்லப்படும். 'சைலானாம் ஹிமவந்தம் ச நதீனாம் சைவ ஸாகரம் । கந்தர்வாணாம் அதிபதிம் சக்ரே சித்ரரதம் விதி: //' (ப்ரம்ஹாண்ட புராணம்) 11 पञ्चशरशास्त्रबोधन परमाचार्येण दृष्टिपातेन । काञ्चीसीमि कुमारी काचन मोहयति कामजेतारम् ॥ ५ ॥ பஞ்சசர சாஸ்த்ர போதன பரமாசார்யேண காஞ்சீ ஸீம்னி குமாரீ காசன மோஹயதி ✔ (த்ருஷ்டிப்பாதேன ! [காமஜேதாரம் 1 காஞ்சீ ஸீம்னி - காஞ்சீபுரியில், காசன குமாரீ-ஓரானொரு குமாரியானவள், பஞ்சசர சாஸ்த்ர - காம சாஸ்த்ரத்தை, போதன போதிப்பதில், பரமாசார்யேண -ச்ரேஷ்டமான குருவாயிருக் கும்,த்ருஷ்டிபாதேன -(தன்னுடைய) பார்வையினால்,காமஜேதா ரம்-பரமேச்வானை, மோஹயதி - மோஹமடையச் செய்கிறாள். 'அரவிந்தம் அசோகஞ்ச சூதம் ச நவமல்லிகா । நிலோத்பலம் ச பஞ்சைதே பஞ்சபாணஸ்ய ஸாயகா: }}' என்று சொல்லப்பட்ட ஐந்து (புஷ்ப) பாணங்களையுடையவனாக இருப்பதால் மன்மதனுக்கு பஞ்சரனென்று பெயர். ல்லிதாம்பிகையானவள் ச்ருங்காரரஸ ப்ரதானையாதலால் அவளுடைய பார்வையானது காம சாஸ்த்ரத்தை போதிப்பதில் பரமாசார்ய ரூபமாயிருப்பதாக இங்கு வர்ணிக்கப்பட்டது. அதற்கு அத்தாக்ஷியாக அந்தப்பார்வையானது மன்மதனை ஜயித் தவரான பரமேச்வரனைக்கூட மோஹமடையும்படிச் செய்வதைச் சொல்லப்பட்டது. 12 மூகபஞ்சசதீ परतन्त्रा वयमनया पक्कजसत्रह्मचारिलोचनया । परया काञ्चीपुरया पर्वत पर्यायपीनकुचभरया ॥ ६ ॥ பரதந்த்ரா வயமனயா பங்கஜ [ஸப்ரம்ஹசாரிலோசனயா । பரயா காஞ்சீபுரயா பர்வதபாயாய பீன்குசபரயா ॥ பர்வதபர்யாய காஞ்சீபுரயா - காஞ்சீபுரியிலிருப்பவளும், பீனகுசபாயா - பர்வதங்களின் உருவம்போல் பருத்ததான குச் பாரங்களையுடையவளும், ஸப்ரம்ஹசாரிலோசனயா பங்கஜ தாமரஸ புஷ்பங்களுக்கு ஸமமான அன்யா பாயா இந்த பரதேவதையினால், த்ரா:- பரவசமாகிவிட்டோம். M கண்களை யுடையவளுமான், வயம் - நாம், பாதந் ऐश्वर्यमिन्दुमौले: ऐकात्म्यप्रकृति काञ्चीमध्यगतम् । ऐन्दवकिशोरशेखरं ऐदंपर्य चकास्ति निगमानाम् ॥ ७ ॥ ஐச்வர்யம் இந்துமௌளே: ஐகாத்ம்ய (ப்ரக்ருதி காஞ்சிமத்யகதம் ஐந்தவகிசோர சேகரம் ஐதம்பர்யம் (சகாஸ்தி நிகமானாம் !! ஐகாத்மய ப்ரக்ருதி-பரப்ரம்ஹத்தோடு அபேதமாயிருக்கும் ப்ரக்ருதி ரூபமானதும், காஞ்சிமத்யகதம் - காஞ்சீபுரியின் மத்தி யிலிருப்பதும், ஐந்தவகிசோரசேகரம் - பாலச்சந்திரனை சிரோ பூஷணமாக உடையதுமான, இத்து மெளளே: ஐசுவர்யம்-சந்த்ர மௌளீச்வரருடைய ஐச்வர்யமானது, நிகமானாம் ஐதம்பர்யம்வேதங்களுக்கெல்லாம் பரம தாத்பர்யமாக, சகாஸ்தி - விளங்கு கிறது. 1. ஸகல ப்ரபஞ்சமும் உண்டாவதற்குக் காரணமாயிருக் கும் வஸ்துவுக்கு ப்ரக்ருதி என்று பெயர். இதையே மூலப்ரக் ருதி என்றும் சொல்லப்படும். இதுவேதான் அம்பிகையின் ஸ்வரூ பம். இது புருஷனெனப்படும் பரமசிவனுடன் அபேதமாயிருக் கிறதென்பது சாக்தர்களுடைய ஸித்தாந்தம். (ப்ரக்ருதியானது ஜடவஸ்து என்றும் புருஷனின்று வேறுபட்டதென்றும் ஸாங்க் யர்கள் சொல்வதை சாக்தர்கள் ஒப்புக்கொள்வதில்லை.) ஆர்யா சதகம் 13 2. பரமசிவனுக்கு இருப்பதுபோல் அம்பிகைக்கும் சிரஸில் சந்த்ரகலை உண்டு. 3. வேதசிரோபாகங்களான உபநிஷத்துக்களில் அம்பிகை பாதிபாதிக்கப்படுவது. 'ச்ருதிஸீமந்த திஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா । ஸகலாகம ஸந்தோஹ சுக்தி ஸம்புட மௌக்திகா ॥' என்று 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் "ச்ருதினாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகதரயா மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ । என்று 'ஸௌந்தர்யலஹரி'யிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. 4. அம்பிகையினால் தான் பரமசிவனுக்கு ஸகல ஐச்வர்ய மும் ஏற்பட்டிருக்கிறது என்பது 'சிவ: சக்த்யா யுக்தோ' என்ற ஸௌந்தர்யலஹரி சலோகத்தில் சொல்லப்பட்டிருப்பதுடன் 'அக்ஞாதஸம்பவம் அனாகலிதான்வவரயம் பிக்ஷும் கபாலினம் அவாஸஸம் அத்விதீயம் । பூர்வம் கரக்ரஹண மங்களதோ பவத்யா: சம்பும் க ஏவ புபுதே கிரிராஜகன்யே !!' என்பதாக 'அம்பாஸ்துதி'யில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. श्रितकसीमानं शिथिलितपरमशिवधैर्यमहिमानम् । कलये पाटलिमान कंचन कञ्चकितभुवनभूमानम् ॥ ८ ॥ ச்ரிதகம்பா ஸீமானம் சிதிலித பரமசிவ [தைர்ய மஹிமானம் கலயே பாடலிமானம் கஞ்சன கஞ்சுகித [புவன பூமானம் !! சரிதகம்பாஸீமானம் - கம்பாநதியின் கரையிலிருப்பதும், பரம சிவ தைாய - பரமசிவனுடைய தைர்யத்தை (மன உறுதியை), சிதிலித-நழுவச் செய்ததான (கைவிடும்படிச் செய்ததான) மஹி மானம் - மஹிமையோடு கூடியதும், கஞ்சுகிதபுவனபூமானம் - ஸகல புவனங்களையும் கஞ்சுகம்போல் தரித்திருப்பதும், பாடலிமானம்வெண்சிவப்பு நிறத்தோடு கூடியதுமான,கஞ்சன-ஒரு வஸ்து வை (மூர்த்தியை) கலயே - த்யானிக்கிறேன். மூகபஞ்சசதீ முன்பு மன்மதன் தன் மீது புஷ்பபாணத்தை ப்ரயோகம் செய்ய எத்தனித்தபோது அதற்கு இடங்கொடாமல் தன் நேத்தி ராக்னியினால் அவனை எரித்த பரமசிவனானவர் அம்பிகையின் ஸௌந்தர்யத்தில் ஈடுபட்டு மனத்தளர்ச்சியடைந்து மோஹ மடைந்ததை 'சிதிலித பரமசிவ தைர்ய மஹிமானம் என்று இங்கு சொல்லப்பட்டது. 14 आहतकाञ्चीनिलयां आद्यामारूढयौवनाटोपाम् । आगमवतंसकलिकां आनन्दाद्वैतकन्दली वन्दे ॥ ९ ॥ ஆத்ருத காஞ்சீ நிலயாம் ஆத்யாம் ஆரூட (யௌவனாடோபாம்। ஆகமவதம்ஸ கலிகாம் ஆனந்தாத்வைதகந்தலீம் [வந்தே !! ஆத்ருத காஞ்சீ நிலயாம் - காஞ்சீபுரியை வாஸஸ்தானமாகக் கொண்டிருப்பவளும், ஆத்யாம் -ப்ரபஞ்சத்திற்கெல்லாம் ஆதி யாய் இருப்பவளும், ஆரூட யௌவனாடோபாம் - யௌவனத்தின் ஆடம்பரத்தோடு நிறைந்தவளும்,ஆகவதம்ஸகலிகாம் - வேதங் களின் சிரோபாகத்திற்கு பூஷணமான மொக்குப்போலிருப்பவ ளும், ஆனந்தாத்வைதகந்தலீம் - ஆனந்தத்திற்கு ஒரே துளிர் போலிருப்பவளுமான (ஸ்ரீ காமாக்ஷியை), வந்தே -நமஸ்கரிக் கிறேன். 1. அவதம்ஸமென்றால் சிரோபூஷணமென்று அர்த்தம். கலிகா என்றால் மொக்கு (மொட்டு) என்று அர்த்தம். கிரீடத்தில் மொக்கை அலங்காரமாக தரிப்பது வழக்கம். உதாஹரணமாக "முகுளித கரோத்தம்ஸ மகுடா: என்றும் "கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிகே என்றும் "ஸௌந்தர்யலஹரி "யில் வர் ணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அம்பிகையை " ஆகமவதம்ஸக லிகா' என்பதினால் வேதங்களின் சிரோபகமான உபநிஷத்துக் களுக்கு முடிவான தாத்பர்யமாக இருப்பது சொல்லப்பட்டது. 2. "அத்வைதானந்தகலீம்' என்றும் சொல்லலாம். அத் வைதானந்தம் என்றால் ஜகத்தும் ப்ரம்ஹமும் ஒன்று என்பதான அறிவு ஏற்படும்போது உண்டாகும் ஆனந்தம் என்று அர்த்தம். तुङ्गाभिरामकुचभर शृङ्गारितमाश्रयामि काञ्चिगतम् । गङ्गाधरपरतन्त्रंशृङ्गाराद्वैततन्त्रसिद्धान्तम् ॥ १० ॥ ஆர்யா சதகம் துங்காபிராம குசபர சருங்காரிதம் ஆச்ரயாமி [காஞ்சிகதம் கங்காதர பரதந்த்ரம் ச்ருங்காராத்வைத 15 (தந்த்ர ஸித்தாந்தம் ॥ துங்காபிராமகுசபய சருங்காரிதம் - உன்னதமும் அழகுள் ளதுமான குசபாரத்தால் அலங்கரிக்கப்பட்டதும், காஞ்சிகதம்காஞ்சீபுரியிலிருப்பதும், ச்ருங்காராத்வைத தந்த்ர ஸித்தாந்தம்ச்ருங்காரமாகிற அத்வைத் தந்த்ரத்தின் முடிவாயுமிருக்கும், கங் காதர பரதந்த்ரம் - சிவனுடைய பத்னியை, ஆச்ரயாமி-சரண மடைகிறேன். 1. பரதந்த்ரமென்றால் பிறருக்கு வசப்பட்டிருப்பது என்று அர்த்தமாகையால் இங்கு (புருஷனுக்கு வசப்பட்டிருப்பதால்) பதி வரத்தையைக் குறிக்கும். அம்பிகையினுடைய பாதிவரத்யத்தைப் பற்றி மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'களத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய: ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தனை: ] மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனாமசரமே குசாப்யாம் ஆஸங்க: குரவகதரோரப்யஸுலப: // (ஸொந்தர்யலஹரி) 2. இந்த ஸ்தோத்ரத்திய எல்லா சதகங்களிலும் சருங்கார சாஸ்த்ரத்தின் ஸித்தாந்தமாக அம்பிகை இருப்பதாக இங்கும் பிற இடங்களிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. சருங்கார சாஸ்த் திரத்திற்கும் அம்பிகையின் உபாஸனைக்கும் என்ன ஸம்பந்தம் இருக்கிறதென்பதாக ஸந்தேஹம் தோன்றக்கூடும்.ச்ருங்கார ரஸ மென்பது ஸ்த்ரீ புமான்களுக்குள் பரஸ்பரமிருக்கும் ஆசைக்கும் செய்கைகளுக்கும் காரணமானது. அதையே ரஸங்களுக்குள் முத ன்மையானது (ஆதிரஸம்) என்று சொல்லப்படும். இதைப் பற்றி வெட்கப்பட வேண்டியாவது வெறுக்க வேண்டியாவது யாதொரு அம்சமும் ஸரியாக யோசிப்பவர்கள் மன னத்தில் தோன்றுவதற்கு நியாயமில்லை. இது ஸத்வ குணத்திலிருந்து ஏற்படுகிறதென்றும், அகண்டமும், ஸ்வப்ரகாசமுமான ஆனந்தரூபமென்றும், சின்மய மானதென்றும், சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ரஸத்திலிருந்து ஏற்படும் ஆனந்தத்தினால் மற்ற வஸ்துக்களெல்லாம் மறக்கப்பட்டு : $ 3 1 { மூகபஞ்சசதீ அனன்யமான ஆனந்தத்தை தீவ்ர மனோபாவமானது ஏற்படுவதால், அவ்வித ப்ரம்ஹானந்தத்திற்கு உடன் பிறந்ததாக (ப்ரம் ஹாஸ்வாத ஸகோதரமென்று) சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு மேலாக ஸ்தூல சரீரத்திற்கு ஏற்படக்கூடிய ஆனந்தம் வேறு யாதொன்றும் கிடையா தாகையால் சிவ சக்திகளுடைய ஸாமரஸ்ய ரூபமான ப்ரம்ஹானந்தத்தை இதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. 'ஸ்வஸம்வேத்யம் இதம் ப்ரம்ஹ குமாரீ ஸ்த்ரீஸுகம் யதா । (தக்ஷதர்ம சாஸ்த்ரம்) 16 ஸாமரஸ்யமென்பதே "ஸ்த்ரீபும்யோக து யத் ஸௌக்யம் ஸாமரஸ்யம் ப்ரகீர்த்திதம் !' என்றபடி ஸ்த்ரீ புமான்களுடைய சேர்க்கையிலேற்படும் ஸூகத் தைக்குறிக்கும். லயஸித்தி யோகத்தை அப்யஸிக்கும் ஸாதகனும் தன்னை சக்தியாக பாவித்து பரமாத்மாவான புருஷனுடன் ஸங்கம மடைவதாகவும் அவ்வித ஸங்கமத்தால் ஏற்படும் ஆனந்தத்தில் தன்னையும் ஜகத்தையும் மறந்து விடுவதாகவும் சொல்லப்பட்டிருக் கிறது. மேலும் ஷட்சக்கபேதனம் செய்து குண்டலினியை ஸஹஸ்ராரத்திற்குக் கொண்டுபோவதின் உத்தேசம் அவ்விட மிருக்கும் பரமசிவனுடன் குண்டலினீ சக்திக்கு ஸாமரஸ்யமேற் படுத்துவது என்பது தான். இவ்விதமான சேர்க்கையை ஸ்ரீமதா சார்யாளும், "மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருதம் ஆகாசமுபரி மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம் ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே]!' என்று 'ஸௌந்தர்யலஹரியில்' வர்ணித்திருக்கிறார்கள். குண்டலினியின் ஸஞ்சாரத்தைப்பற்றியே பின்வருமாறும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. 'குலாங்கனேஷாப்யத ராஜவீதீ: ப்ரவிச்ய ஸங்கேத க்ருஹாந்தரேஷ। விச்ரம்ய விச்ரம்ய வரேண பும்ஸா ஸங்கம்ய ஸங்கம்ய ரஸம் ப்ரஸுதே l]' இவ்விதமான சேர்க்கையினால் அம்ருதப்ரவாஹம் உண்டாகிற 1 தென்றும் அதினால் தேஹத்திலுள்ள நாடிகளும் நனையப் பெற்று முடிவாக நித்யமான சரீமேற்படுகிறதென்றும் லப்பட்டிருக்கிறது. ஆரியா சதகம் 'வ்யோமனி சித்சசி மண்டல மத்யேத்வகுலேன ஸங்கம்ய । உபயாங்க ஸங்கஜன்யம் ப்ரவாஹயந்தீ ஸுதாபூரம் ॥' (வரிவஸ்யா ரஹஸ்யம்) ஸுதா தாரா ஸாரை: சரணயுகளாந்தர்விகளிதை: । ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ 11 (ஸௌந்தர்யலஹரீ) 16/ 3. பக்தியென்பதே ஈசவரனிடத்தில் பரானுராக ஸ்வரூப மென்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உத்தமமான பக்தர்கள் ஈச்வரனுக்கும் தங்களுக்கும் நாயக, நாயகீ பாவத்தைக் கல்பித்து கொண்டு அந்த மனோபாவத்துடனேயே உபாஸப்பதை ஆதி காலம் முதல் நாம் பார்க்கிறோம். K 4.ஆகவே,சிவசக்திகளுடைய ஸமாயோகமே யோகமென் பதாகவும், அவ்வித ஸம்யோகத்தினால் உண்டாகும் ஸ கமே பரமானந்தத்தின் லக்ஷணமென்பதாகவும் ஏற்படுகிறது. இவ் விதமான ஸம்யோகமானது ஸ ருக்ஷ்ம ஸாமரஸ்யமெனப்படும். ஸ்தூல ஸாமரஸ்யமானது ஸூக்ஷ்ம ஸாமரஸ்யமான சிவ சக்தி ஸம்யோகத்திற்கு அறிகுறியாகவும், அதைப்போன்றதான ப்ரதி பிம்பமாகவுமிருக்கிறபடியால் அவ்வித ஸ்தூல ஸாமரஸ்யத்தை போதிக்கும் ச்ருங்கார சாஸ்த்ரமானது (ஸ்திரீபுமான்கள் இறண் டறக் கலப்பதைப் பற்றியதால்) அத்வைத தந்த்ரமென்றும் அதற்கு அதிஷ்டான தேவதையாக அம்பிகை இருக்கிறாள் என் றும் சொல்வதில் யாதொரு பிசகும் இல்லை.(ச்ருங்கார சாஸ்த்ர மானது பிறருடைய ஸ்திரிகளை அடைவதற்காக ஏற்பட்டதல்ல வென்று ஞாபகப் படுத்திக்கொண்டால் மேலே சொல்லியதற்கு யாதொரு ஆக்ஷேபமும் தோன்றுவதற்கு இடமில்லை. இந்த விஷ யத்தைப்பற்றி அறிய விரும்புவோர்கள் பாஸ்கரராயருடைய க்ரந் தங்களையும், ஆர்தர் ஏவலனுடைய புஸ்தகங்களையும் பார்க்கலாம்) ✔ काञ्चीरलविभूषां कामपि कन्दर्पसूतिकापाङ्गीम् । परमां कलामुपासे परशिववामाङ्कपीठिकासीनाम् ॥ ११ ॥ 3 18 மூகபஞ்சசதீ காஞ்சீரத்னவிபூஷாம் காமபி கந்தர்ப்ப பரமாம் கலாமுபாஸே பரசிவ வாமாங்க 1 [ஸூதிகாபாங்கீம் ! [பீடிகாஸீனாம் !! காஞ்சிரத்ன விபூஷாம் - காஞ்சியாகிற ரத்னத்தை அலங்கார மாயுடையவளும், கந்தர்ப்பஸ அதிகாபாங்கீம் - மன்மதனுக்குப் பிறப்பிடமாக இருக்கும் கடாக்ஷத்தையுடையவளும், வாமாங்க பீடிகாஸீனாம் - பரமசிவனுடைய வீற்றிருப்பவளுமான,காமபி -ஒரானொரு, பாரமாம் கலாம்பரம் பொருளை, உபாஸே -உபாணக்கிறேன். பரசிவ துடையில் 1. காஞ்சீ என்றால் ஸ்திரீகள் இடுப்பில் தரிக்கும் மேகலை (ஒட்டியாணம்) என்று அர்த்தம். அதிலிழைக்கப்பட்ட ரத்னங் களால் அலங்கரிக்கப்பட்டவள், "காஞ்சீரத்ன விபூஷா' என்றும் சொல்லலாம். 2. பரமசிவனுடைய நேத்ராக்னியினால் மன்மதன் எரிக்கப் பட்ட பிறகு லலிதாம்பிகையும் காமேச்வரரும் தோன்றியதைப் பற்றியும், பண்டாஸுர ஸம்ஹாரமான பிறகு தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அம்பிகையானவள் மன்மதனைத் தன் கடைக்கண் பார்வையினால் பிழைப்பு மூட்டியதைப் பற்றியும், லலிதோபாக்யானத்தில் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. தன் புருஷன் இறந்ததினால் மிகவும் துக்கித்திருக்கும் தீதேவியை அம்பிகை பார்த்தவுடன், மன்மதன் உண்டானது பின்வருமாறு:'அத தத் தர்சனோத்பன்ன காருண்யா பரமேச்வரீ । காந்தம் கடாஷயாமாஸ காமேச்வரம் அநிந்திதா ॥ தத: கடாக்ஷாத் உத்பன்ன: ஸ்மயமான முகாம்புஜ: பூர்வதேஹாதிகருசி: மன்மதோ மதமேதுர: // த்விபுஜ: ஸர்வபூஷாட்ய: புஷ்பேஷு: புண்ட்ரகார்முக: ஆனந்தயன் கடாக்ஷேண பூர்வஜன்மப்ரியாம் ரதிம் II' இவ்விதம் மன்மதனுடைய (மறு) பிறப்பானது அம்பிகையின் கடாக்ஷத்தினால் ஏற்பட்டதால் அந்த கடாக்ஷத்தை அவன் பிறந்த இடமாக (ஹூதிகாக்ருஹமாக) வர்ணிக்கப்பட்டது. ஆர்யா சதகம் कम्पातीरचराणां करुणा कोरकितदृष्टिपातानाम् । केलीवनं मनो मे केषांचिद्भवतु चिद्विलासानाम् ॥ १२ !! கம்பாதீர சராணாம் கருணாகோரகித (த்ருஷ்டிபாதானாம் । கேளீவனம் மனோ மே கேஷாம்சித் பவது 19 [சித்விலாஸானாம் !! கம்பாதீரசராணாம் - கம்பா நதியின் தீரத்தில் ஸஞ்சரிப்பவை களும், கருணாகோரகித - கருணை பூத்த, த்ருஷ்டிபாதானாம். பார்வையோடு கூடியவைகளுமான, கேஷாம்சித் - சில, சித்விலா ஸானாம் - சின்மயமான விலாஸங்களுக்கு, மே மன:- என்னுடைய மனதானது, கேளீவனம் பவது - க்ரீடிக்கும் உத்யானவனமா கட்டும். அம்பர்ளு கோரகமென்றால் மொக்கு என்று அர்த்தம். டைய பார்வைகள் கருணையால் நிறைந்தவைகளென்பது இங்கு வர்ணிக்கப்பட்டிருப்பதின் தாத்பர்யம். आम्रतरुमूलव सतेरा दिम पुरुषस्य नयनपीयूषम् । यौनोत्सवमाम्नायरहस्यमन्तरवलम्बे ॥ १३ ॥ ஆம்ராருமூல வஸ்தே: ஆதிம் புருஷஸ்ய [நயன பீயூஷம் । ஆரப்த யௌவனோத்ஸவம் ஆம்னாயரஹஸ்யம் (அந்தரவலம்பே !। 20 மூகபஞ்சசதீ 1. காமேச்வரரானவர் பஞ்சப்ரம்ஹமயமான மஞ்சத்தில் காமேசவரியை (ஸ்ரீலலிதாம்பிகையை) தன் இடது துடையின் மீ வைத்துக்கொண்டு ஸதாகாலமும் அம்பிகையின் அழகில் ஈடுபட்டு ஆனந்தத்தில் மூழ்கி அம்பிகையையே பார்த்தவண்ணமாய் இருப் பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இருவரும் ஒரேவிதமான வயது ஸௌந்தர்யம், ஆயுதங்கள் முதலியவைகளுடன் பொருந்தியிருப் பவர்களாகச் சொல்லப்படும். அவரும் ஸ்தாஷோடசவார்ஷிக:, அம்பிகையும் ஸதா ஷோடசவர்ஷியா. (அதினால் தான் இங்கு ஆரப்தயௌவனோத்ஸவமென்று சொல்லப்பட்டது). 2. ஸ்திரீகளை வயதின் க்ரமமாக வர்ணிக்கையில் பதினாறு வயது வரையில் பாலை என்றும், அதற்குமேல் இருபது வரையில் தருணீ (யௌவனை) என்றும், அதற்குமேல் ஐம்பது வரையில் ப்ரௌடை என்றும், அதற்கு மேல் வ்ருத்தையென்றும் சொல் லப்படும். ✪ 'பாலா ஸ்யாத் ஷோடசாப்தா ததுபரி தருணீ விம்சதேர் யாவதூர்த்வம் ப்ரௌடாஸ்யாத் பஞ்ச பஞ்சா— சதவதி பரதோ வ்ருத்ததாமேதி நாரீ । அம்பிகை ஸதாஷோடசவர்ஷீயாகச் சொல்லப்படுவதால் இங்கு "ஆரப்தயௌவனோத்ஸவம்'' என்றும், இதற்கு முன்வந்த 9-வது சலோகத்தில் ஆரூடயௌவனாடோபாம் " என்றும் » சொல்லப்பட்டது. 3. ஆம்னாயமென்பது வேதங்களைக் குறிப்பதுடன் தந்த்ர சாஸ்திரங்களையும் குறிக்கும். 4. காஞ்சீபுரியிலிருக்கும் பரமசிவனுடைய மூர்த்திக்கு ஏகாம்பரநாதர் என்று பெயர். அவரே காமேச்வ ஸ்வரூபமென்று சொல்லப்படும். கைலாஸத்தில் ஒரு மையம் பரமசிவனானவர் அந்தபுரத்தில் பார்வதீ தேவிக்கு அர்த்தாஸனம் கொடுத்து ஆனந்தமாக இருக்கும்போது அறுபத்திநாலு கலைகளின் ரூபிணி களும் அவருக்கு மிகவும் ப்ரியைகளாயுமுள்ள சக்திகள் சற்று அகங்காரம் கொண்டவர்களாய் பரமசிவனை நோக்கித் தங்களுக் கும் பார்வதீதேவி மாதிரி அர்த்தாஸனம் கொடுக்கவேண்டு ஆர்யா சதகம் மென்று கேட்டார்கள். அப்போது பரமசிவன் அவர்களை நோக்கி கைலாஸத்திலிருக்கும் ஸகல புருஷர்களும் தன்னுடைய அம்சங் களென்றும், கைலாஸத்திய ஸ்திரீகளெல்லோரும் கௌரியினு டைய அம்சங்களென்றும், அப்படியிருந்தும் புருஷர்களுக்குள் தான் ச்ரேஷ்டமாயிருப்பது மாதிரி ஸ்திரீகளுக்குள் கௌரியே ச்ரேஷ்டமானவளென்றும், ஆகவே கௌரீதான் தன்னுடைய அர்த்தாஸனத்தில் வீற்றிருக்கத் தகுதியானவள் என்பதாக, 'மமாம்ச ஜாதா: கைலாஸே பும் ரூபேண ஸமன்விதா: । ததா கௌர்யாம்ச ஸம்பூதா: மம காந்தா ஹி ஸர்வச: // பும் ரூபாணாம்ஸ்து ஸர்வேஷாம் வரோஹம் புருஷேச்வர: । ததா ஸ்த்ரீணாம் வரா கௌரீ மம காந்தாஸ் ஸசக்தய: // தஸ்மாத் யூயம் மஹாகௌர்யா: கிஞ்சின் ந்யூனதயான்விதா: 1 ஸர்வாஸாம் சைவ சக்தீனாம் ஏஷோத்க்ருஷ்டா ஹி பார்வதி!! ஸமாஸனே ஸமாஸீனா வஸத்யந்த: புரே ஸதா । ததாஸனம் ந தாதவ்யம் யுஷ்மப்யம் உமயா ஸஹ ॥ என்று பதில் சொன்னார். 21 அப்போது, தாங்கள் கௌரியின் அம்சங்கள்தானென்றும் ஆகவே அவளுக்குக் கீழ்பட்டவர்களென்றும் அதினால் பரமசிவ னுடன் ஸமமான ஆஸனத்திற்குத் தகுதியற்றவர்களென்றும், சொல்லப்பட்ட அந்த சக்திகள் மிகவும் கோபங்கொண்டு தாங்கள் கௌரிக்குத் தாழ்ந்தவர்களல்லவென்றும் தங்களுடைய அம்சமா கத்தான் கௌரியானவள் தோன்றினாளென்றும் அதற்குமாறாக பரமசிவன் அவளிடத்திலுள்ள பக்ஷபாதத்தினால் சொன்னாரென் றும், ள 'கிம் ப்ரவீஷி மஹாதேவ பக்ஷபாதம் ஸமாச்ரித: 1 கௌர்யாம் ச ஜாதா ந வயம் ஸாஸ்மதம் ச ஸமுத்பவா !!' க என்று சொல்லி, கௌரியானவள் தங்களைவிட எந்த குணத்தில் உயர்ந்தவளென்று கேட்கவும் பரமசிவன் நகைத்து அவர்களுடைய கர்வத்தைப்போக்க உத்தேசித்து ஸமகாலத்தில் அவர்களெல் லோருடைய வஸ்த்ரங்களும் நழுவும்படிச் செய்தார். உடனே அவர்கள் லஜ்ஜை அடைந்து தங்கள் மர்ம ப்ரதேசங்களை மறைப் பதற்காக பூமியில் விழுந்துவிட்டார்கள். அப்போது அவர்களு 22 " மூகபஞ்சசதீ டைய மானத்தைக்காப்பாற்றுவதற்காக அம்பிகையானவள் அவர் கள் வஸ்த்ரங்களைத் திரும்பவும் உடுத்திக்கொள்ளும் வரையில் பரமசிவனுடைய நேத்ரங்களைத் தன் கைகளால் மறைத்தாள். அப்படி மறைத்தது முகூர்த்தகாலமாய் இருந்தபோதிலும் (தேவ லோகத்திய காலமாதலால்) லோகங்களிலெல்லாம் இருள் சூழ்ந்து ஸூர்ய சந்த்ரர்கள் ஒளி இழந்து படவாமுகாக்னியானது அணை ந்து ஸமுத்ரங்கள் கரைபுறண்டன. அந்த ஸமயம் 'தஸ் ஸமஸ்தலோகேஷ தேவமான முஹுர்த்தத: ஸூர்யசந்த்ரமஸௌநஷ்டௌ நஷ்டோக்னீர்பாடவஸ்ததா!! ப்ரச்சன்ன நேத்ர மாஹாத்ம்யாத் சந்த்ரஸூர்யாக்ன்யதர்ச காடாந்தகார ஸம்வீதே ஜகத்யேகார்ணவீகருதே । ஸம்பூதே ப்ரளயே கோரே 77 [னாத் என்றபடி கோரமான ப்ரளயமேற்பட்டு விட்டது. அவ்வித ஸம யங்களிலும் அழியாத வரம் பெற்றிருக்கும் மார்க்கண்டேயரான வர் ஜலத்தில் மிதந்துகொண்டு தங்குவதற்கு இடமொன்றும் தோன்றாமல் பரமசிவனை ப்ரார்த்திக்க, பரமக்ருபாநிதியாகிய பரம சிவன் காஞ்சியில் ருத்ரசாலையில் அவ்யக்தமான தேஜஸுடன் சித்ரூபியாய் சூதபீஜாக்ருதியோடு விளங்கினார். அப்போது அந்த பீஜத்திலிருந்து ஒரு மா மரமானது கிளம்பி நான்கு வேதங் களாகிற நான்கு கிளைகளுடன் ப்ரளய ஜலத்திற்கு மேல்பட்டதாக வளர்ந்தது. அதைக்கண்ட மார்க்கண்டேயரானவர் அதின் கிளை களில் ஏறிக்கொண்டார். அதற்கு மேல் அவர் தைர்யமடைந்து அந்த சூதவருக்ஷத்தின் மூலத்தில் ப்ரவேசிக்கவும், அங்குதேஜோ மயமான ஓர் பெரிய நகரத்தைப் பார்த்தார். அதைக்கண்டு ஆச்சர்யமடைந்து மார்க்கண்டேயர் அங்கு அந்த மரத்தின் பழங் களைத் தின்றுகொண்டிருந்த ஸுப்ரஹ்மண்யரைப்பார்த்து அந்த அதிசயங்களைப்பற்றிக்கேட்டார். அப்போது ஸுப்ரஹ்மண்ய ரானவர் அந்த நகரம் காஞ்சீ க்ஷேத்ரமென்றும் அதை அம்பிகை யானவள் ப்ரளயகாலத்திலும் நாசமடையாத வண்ணம் தன்னு டையதேஜஸ்ஸினால் காப்பாற்றிவருகிறாளென்றும், அதினாலேயே அந்த நகரத்திற்கு ப்ரளயஜித் என்று பெயரென்றும், அந்த சூத வ்ருக்ஷமானது ஸாக்ஷாத் சங்கரருடைய ஸ்வரூபமென்றும், அம் பிகையின் பதியான காமேச்வரரே அந்த வருக்ஷத்தின் பீஜரூப 28 ஆர்யா சதகம் மாயிருக்கிறாரென்றும், அதனால் தான் அவருக்கு ஏகாம்பரநாதர் என்ற பெயர் என்றும் சொன்னார். 'காஞ்சீ நாமான்விதம் க்ஷேத்ரம் மஹாப்ரளயஜித் புரம் । யதா யதா ஸமாயாந்தி ப்ரளாயாச்ச முஹுர்முஹு: // தா ததா மஹாதேவீ தேஜஸா ரக்ஷிதா புரீ । தஸ்மான் நாம்னா ப்ரளயஜித் காஞ்சீ க்ஷேத்ரமிதம் முனே !। ஏதத் ரஸால வ்ருக்ஷம் ச வித்தி த்வம் சங்கராத்மகம் । மஹாத்ரிபுரஸுந்தர்யா: நாத: காமேச்வராஹ்வய: । ஸ்வயம் பீஜாக்ருதிர் பூத்வா சூதரூபேண சோபதே !!' 5. மா மா த்திற்கு ஆம்ரமென்றும், சூதமென்றும், ரஸால மென்றும் பெயர்களாகையால் காஞ்சியிலிருக்கும் காமேச்வர ருக்கு ஏகாம்ரநாதரென்றும், ஏகசூதபதியென்றும், ரஸாலேச் வரரென்றும் பெயர்கள் சொல்லப்படும். अधिकाञ्चि परमयोगिभिरादिमपरपीठसीम्नि दृश्येन । अनुचर्द्धं मम मानसमरुणिमसर्वस्व सम्प्रदायेन ॥ १४ ॥ அதிஞ்சி பரமயோகிபி - ராதிம் பர [பீடஸீம்னி த்ருச்யேன । அனுபத்தம மம மானஸம் அருணிம [ஸர்வஸ்வ ஸம்ப்ரதாயேன i। பரமயோகிபி:- யோகிச்ரேஷ்டர்களால், அதிகாஞ்சி- காஞ்சி புரியில், ஆதிம பர பீடஸீம்னி - எல்லா பீடங்களுக்கும் ஆதியா யும் ச்ரேஷ்டமுமான காமகோடி பீடத்தில், த்ருச்யேன - பார்க் கப்படுவதும், அருணிம ஸர்வஸ்வ ஸம்ப்ரதாயேன - சிகப்பு என் பதையே முக்யமாக (ஸாரமாக) உடைய ஸம்ப்ரதாய ரூபமாயிருக் கும் ஸ்ரீ காமாக்ஷியால், மம மானஸம் - என்னுஸடய மனதானது, அனுபத்தம் - சேர்க்கப்பட்டு (ஈடுபட்டு) இருக்கிறது. 1. பஞ்சாசத் (ஐம்பது) கோடி விஸ்தீர்ணமான பூமண்ட லத்தில் இருக்கும் தேவீ பீடங்களில் 64,000- பீடங்கள் முக்ய மானவை என்றும், அவற்றிலும் (மாத்ருகைகளின் கணக்கையனு சரித்து) ஐம்பத்தோரு பீடங்கள் முக்யமானவை என்றும், அவற் றிற்குள் (தத்வங்களின் கணக்கை அனுசரித்து) 36- பீடங்கள் மூகபஞ்சசதீ சிறந்தவையென்றும், அவற்றிற்குள்ளும் 18-பீடங்கள் முக்யமான வையென்றும், அவற்றிலும் காமராஜ, ஜாலாந்தர, ஒட்யான பீடங்கள் என்ற மூன்று தான் ச்ரேஷ்டமென்றும், அவைகளுக் குள்ளும் காமராஜ பீடமென்பதுதான் உத்தமோத்தமமானதென் றும் சொல்லப்பட்டிருக்கிறது. (தத்வங்களின் கணக்கானது 94,36,24 என்று பலவிதமாகச் சொல்லப்படும். களின் கணக்கும் 50 என்றும் 51 என்றும் சொல்லப்படும்). மாத்ருகை 24 'பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணே வர்தந்தே ப்ருதிவீதலே । காமகோடி மஹாபீடான் யுத்தமானி ஹி தேஷ்வபி சதுஷ் ஷஷ்டி ஸஹஸ்ராணி தேஷு மாத்ருகா ஸங்க்யயா தேஷுதேஷு தேஷு சாஷ்டாதச ச்ரேஷ்டான் யேஷு தத் த்ரேய காமராஜாக்யம் ப்ரதமம் ஹி ப்ரசஸ்யதே ॥ ஆகையினால் தான் அதை இங்கு 'ஆதிம பர பீட மென்று சொல் சாஷ்டாஷ்டகானி ஹி! தத்வானுஸங்க்யயா !i பீடத்ரயம்பரம் । லப்பட்டது. 2. லலிதாம்பிகையானவள் அருண வர்ணமாயிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாஹரணமாக, த்யான சலோகத் தில் 'அருணாம் கருணாதரங்கி தக்ஷம் என்றும், லௌஹித்ய மேவ தஸ்ய ஸர்வஸ்ய விமர்ச:என்பதாகபாவனோபனிஷத்திலும் 'லௌஹித்யம் தத் விமர்ச: ஸ்யாத்' என்பதாக தந்த்ர ராஜத் திலும் வசனங்களிருக்கின்றன. அம்பிகையானவள் ப்ரகாசரூப மாயிருக்கும்போது சுக்ல வர்ணமாயிருக்கையில் இச்சாரூபிணியா யிருக்கும்போது விமர்சரூபமாய் அருண வர்ணமாயிருக்கிறாள். ஆகையால் ராக (இச்சா) ஸ்வரூபமான அம்பாளுடைய பாசத்தை சிகப்பு வர்ணமாக பாவனை செய்வது வழக்கம். 3. ச்ருங்கார ரஸத்திற்கு இச்சை காரணமானதால் அதை யும் சிகப்பு வர்ணமாக வர்ணிப்பது வழக்கம். ல்லி தாம்பிகை யானவள் சருங்கார ரஸ ப்ரதானையாகையால் அந்தக் காரணத் தைக்கொண்டும் அருணவர்ணமாயிருப்பதாகச் சொல்வது நியாய மாக இருக்கிறது. 'கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத: சிவ: ஸ்வச்சச்சாயா கடித கபடப்ரச்சதபட: / ஆர்யா சதகம் த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலன ராகருணதயா சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் !!' (ஸௌந்தர்யலஹரீ) अङ्कितशङ्करदेहां अङ्कुरितोरोजकङ्कणाश्लेषैः । आधिकाञ्चि नित्यतरुणीं अद्राक्ष काञ्चिदद्भुतां बालाम् ॥१५॥ அங்கித சங்கர தேஹாம் அங்குரிதோரோஜ கங்கணாச்லேஷை: । காஞ்சித் அத்புதாம் பாலாம் ॥ அங்குரிதோரோஜ கங்கணாசலேஷை:- அங்குரிதமான ஸ்த னங்கள், வளையல்கள் இவைகளோடு பொருந்திய ஆலிங்கனங் களால், அங்கித சங்கரதேஹாம் - தன் பதியான பரமசிவனுடைய சரீரத்தை அடையாளங்களோடு இருக்கச்செய்தவளும், நித்ய தருணீம் - நித்யமான யௌவனத்தோடு கூடியவளுமான, காஞ் சித் அத்புதாம் பாலாம் -ஏதோ ஒரு அத்புதமான பாலையை, அதிகாஞ்சி - காஞ்சீபுரியில், அத்ராக்ஷம் - பார்த்தேன். அதிகாஞ்சி நித்யதருணீம் அத்ராக்ஷம் 25 எ 1. அம்பிகையானவள் தன் பதியைத் திரும்பவும் அடை வதற்காக காஞ்சீபுரிக்கு வந்தபோது அங்கு வந்த நாரதமஹர்ஷி யானவர் அம்பிகைக்கு பஞ்சபாண மந்த்ரத்தை உபதேசித்து அதை ஜபித்து தபஸ் செய்யும்படி சொல்லிப்போனார். 'சந்த்ரசூடஸ்ய பார்யாத்வம் இச்சந்தீ கிரிநந்தினீ । உபாயம் முநிசார்தூலம் அப்ருச்சத் வினயான்விதா ॥ அத தத்ர முநிச்ரேஷ்ட: ஸந்துஷ்ட: கன்யகார்ச்சனை: 1 சிவ ப்ராப்த்யை ஸு கோபாயம் பஞ்சபாண மனும் முனி: । உபதிச்ய ததா கௌர்யை கதவான் தக்ஷிணாம் திசம் ।I' அதன்பேரில் ஸைகதத்தால்(மணலால்)லிங்கத்தை ஸ்தாபித்து தன் பதியை தியானித்து அம்பிகையானவள் உக்ரமான தபஸ் செய்யும்போது பஞ்சபாணமந்த்ர ஜபத்தினாலுண்டான காமாக்னி யினால் பீடிக்கப்பட்ட பரமசிவன் அம்பிகையின் ப்ரேமாதிசயத்தை 26 மூகபஞ்சசதீ அறிய விரும்பி, கங்கையை அழைத்து ப்ரவாஹரூபமாய் அம் பிகையின் பூஐைக்கு இடையூறு செய்யும்படி ஆக்ஞாபித்தார். அப்போது வந்த கோரமான ப்ரளயத்தைக்கண்டு கம்பத்தை (நடுக்கத்தை) அடைந்த அம்பிகையானவள், 'த்தைவாத மஹா கௌரீ ப்ரளயோதே ஸமாகதே சிவ ஏவ கதிர் மேzத்ய தஸ்மின்னேகாக்ர மானஸா । ப்ரளயாம்பு விசோஷாய லிங்கமாலிங்க்ய ஸம்ஸ்திதா ॥' என்றபடி லிங்கமூர்த்தியை இறுகத் தழுவவும், பகவான் ப்ர ஸன்னமாகி அம்பிகையைத் தன்னிருகைகளாலும் எடுத்துத் தன்னுடைய இடது பக்கத்தில் வீற்றிருக்கச்செய்தார். 'தத: ஸ பகவான் ஈச: ஸ்வகீயார்த்தாஸனே சுபே] கௌரீமுத்த்ருத்ய ஹஸ்தாப்யாம் ஸ்தாபயாமாஸ வாமத: !/ ததோ விமுக்த பாபா ச தப்த காஞ்சன ஸன்னிபா ப்ரணம்ய சிரஸா நாதம் ஸுப்ரஸன்னம் மஹேச்வரம் । சிவார்த்தாஸனமாருஹ்ய பபௌ ச்ருங்காரவேஷத: //' 2. இப்படி ஆலிங்கனம் செய்யப்பட்டபோது அம்பிகை யின் ஸ்தனங்கள் அங்குரித்து அவற்றின் தழும்பும் கைவளையல் களின் தழும்பும் லிங்கமூர்த்தியில் ஏற்பட்டதை இங்கு "அங்கித சங்கரதேஹாம் சலேஷை: என்று சொல்லப்பட்டது. அங்குரிதோரோஜகங்கணா • 3. பாப்ரம்ஹ ஸ்வரூபிணியான அம்பிகையானவள் 'அஜ ரோரம்ருத:' என்று ச்ருதியில் சொல்லப்பட்டபடி நித்ய யௌ வனத்தோடு கூடியவளாகையால் தருணீயென்று இங்கு சொல் லப்பட்டது. मधुरधनुषा महीधरजनुषा नन्दामि सुरभिबाणजुषा । चिद्वपुषा काञ्चिपुरे केलिजुषा बन्धुजीवकान्तिमुषा ॥ १६ ॥ மதுரதனுஷா மஹீதரஜனுஷா நந்தாமி ஸுரபி பாணஜுஷா } சித்வபுஷா காஞ்சிபுரே கேளிஜுஷா பந்துஜீவ காந்திமுஷா ॥ ஆர்யா சதகம் 27 மதுரதனுஷா - இனிப்போடு கூடிய வில்லையுடையதும், மஹீ தரஜனுஷா -பர்வதராஜனிடமிருந்து பிறப்பையுடையதும், ஸுரபி பாண்ஜுஷா மணமுள்ள பாணங்களையுடையதும், காஞ்சிபுரே காஞ்சீபுரியில், கேளிஜுஷா - விளையாடிக்கொண்டிருக்கிறதும், பந்து ஜீவ காந்திமுஷா - செம்பரத்தம்பூவின் காந்தியை அபஹ ரித்ததுமான (தோற்கடித்த காந்தியோடுகூடிய), சித்வபுஷா - சித் ஸ்வரூபத்தோடு கூடிய ஒரு மூர்த்தியினால், நந்தாமி - ஆனந்த மடைகிறேன். அம்பாளுடைய ய வில்லானது கரும்பாகையால் மதுர தனுஸ் என்றும், பாணங்கள் ஐந்து புஷ்பங்களாகையால் ஸுரபி பாணங் களென்றும், அம்பாளுடைய நிறமானது அருணமாகையால் பந்துஜீவ புஷ்பத்தின் காந்தியை அதிசயித்ததென்றும் சொல்லப் பட்டது. அம்பிகையின் பாணங்கள் 'கமலம் கைரவம் ரக்தம் கல்ஹாரேந்தீவரே ததா। ஸஹகாரகமித்யுக்தம் புஷ்ப பஞ்சகமீச்வரி !] • என்று சொல்லப்படும். मधुरस्मितेन रमते मांसलकुचभारमन्दगमनेन । मध्येकाञ्चि मनो मे मनसिजसाम्राज्यगर्वबीजेन ॥ १७ ॥ மதுர ஸ்மிதேன ரமதே மாம்ஸல குசபார மந்த கமனேன் மத்யே காஞ்சி மனோ மே மனஸிஜ ஸாம்ராஜ்ய கர்வ பீஜேன் ]! மதுரஸ்மிதேன - அழகான மந்தஹாஸத்தோடு கூடியதும், மாம்ஸலகுசபார் - பருத்ததான ஸ்தனங்களின் பாரத்தால், மந்த கமனேன்-மெதுவான நடையோடு கூடியதும், மத்யே காஞ்சிகாஞ்சீபுரியின் மத்தியிலிருக்கும், மனஸிஜஸாம்ராஜ்யகர்வ-மன் மதன் ராஜ்யபாரம் நடத்துவதிலுள்ள கர்வத்திற்கு, பீஜேன-கார ணமாயிருப்பதுமான ஒரு பரம்பொருளால், மேமன:என்னு டைய மனதானது, நமதே - களித்துக்கொண்டிருக்கிறது. பூர்வம் பரமசிவனுடைய நேத்ராக்னியினால் பஸ்மீகரிக்கப் பட்ட மன்மதனானவன் காமேச்வரியின் கடாக்ஷத்தினால் மீண்டும் 28 மூகபஞ்சசதீ உயிர் பெற்றவுடன் அவன் அம்பிகையை நமஸ்கரித்து ஸ்தோத் திரம் செய்தபோது, அவனுக்கு ஸகல அவனுக்கு வசப் அம்பிகையானவள் லோகங்களிலும் ஸாம்ராஜ்யத்தைக்கொடுத்து படாதவர்களும் அவனை நிந்திப்பவர்களும் பாபிகளாவார்களென் றும், தன் பக்தர்களுக்கு அவன் வசப்பட்டு அவர்களுடைய காமங்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் அனுக்ரஹித்த தாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'கச்ச வத்ஸ மனோஜன்மன் அபயம் தவ வித்யதே । மத் ப்ரஸாதாத் ஜகத் ஸர்வம் மோஹய அவ்யாஹதாசுக: 11 அத்ய ப்ரப்ருதி கந்தர்ப்ப மத் ப்ரஸாதாத் மஹீயஸ:{ அத்ருச்யமூர்த்தி: ஸர்வேஷாம் ப்ராணினாம் பவ மோஹக: ]] த்வன் நிந்தாம் யே கரிஷ்யந்தி த்வயி வா விமுகாசயா: அவச்யம் க்லீபதைவ ஸ்யாத் தேஷாம் ஜன்மனி ஜன்மனி 11 யே பாபிஷ்டா துராத்மானோ மத்பக்த த்ரோஹிணச்ச யே । தான் அகம்யாஸு நாரீஷு பாதயித்வா வினாசய ]] யேஷாம் மதீயபூஜாஸு மத்பக்தேஷ்வாத்ருதம் மன: தேஷாம் காமஸுகம் ஸர்வம் ஸம்பாதய ஸமீப்ஸிதம் ]]" இவ்விதம் மன்மதனுக்கு தடையில்லாத ஸாம்ராஜ்யமேற் பட்டதற்கு அம்பிகையின் அனுக்ரஹமானது காரணமாயிருப் பதால் அவனுடைய கர்வத்திற்கு பீஜமாயிருப்பதாக இங்கு வர்ணிக்கப்பட்டது. धरणिमयीं तरणिमयीं पवनमयीं गगनदहन होतृमयीम् । अम्बुमयीमिन्दुमयी मम्बा मनुकम्पमादिमामीक्षे ॥ १८ ॥ தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம் ககன தஹன ஹோத்ருமயீம் । அம்புமயீம் இந்துமயீம் அம்பாம் அனுகம்பம் ஆதி மாம் ஈக்ஷே 11 தரணிமயீம் - பூமியின் ஸ்வரூபமாயும், தரணிமயீம் ஸூர்ய ஸ்வரூபமாயும், பவனமயீம் - வாயுஸ்வரூபமாயும், தஹன ஹோத்ருமயீம் - ஆகாசம்,அக்னி, ஹோதா இவர்களின் — ஆர்யா சதகம் 29 ஸ்வரூபமாயும், இந்துமயீம் - சந்த்ர ஸ்வரூபமாயுமிருக்கிற, ஆதி மோம் அம்பாம் - ப்ரபஞ்சத்திற்கெல்லாம் ஆதியான தாயாரை, அனுகம்பம் - கம்பாநதியின் கரையில், ஈக்ஷே-பார்க்கிறேன். 1. பரமசிவனுக்குச் சொல்லப்படும் அஷ்டமூர்த்திகளும் அம்பிகைக்குமிருப்பதாகச் சொல்லப்படும். இந்த அஷ்டமூர்த்தி கள் ப்ருதிவீ, அப்பு,தேஜஸ்,வாயு, ஆகாசங்களாகிய பஞ்ச பூதங்கள், ஸூஆர்யன், சந்திரன், யஜமானன் (ஹோதா) என் றவை. அவை இங்கு முறையே தாணி, அம்பு,தஹன,பவன், ககன, தரணி,இந்து,ஹோத்ரு என்று சொல்லப்பட்டன. பரம சிவனுக்கு இந்த எட்டு மூர்த்திகளிருப்பது, ஜலம் வன்ஹிஸ் ததா யஷ்டா ஸூர்ய சந்த்ரமஸௌ ததா । 1 ஆகாசம் வாயுரவனீ மூர்த்தயோரஷ்டௌ பினாகின: । 4 என்றும் 'யா ஸ்ருஷ்டி: ஸ்ரஷ்டூராத்யா வஹதி விதிஹுதம் யா ஹவிர் யா ச ஹோத்ரீ யே த்வே காலம் விதத்த: ச்ருதி விஷயகுணா யா ஸ்திதா வ்யாப்ய விச்வம் । யாமாஹு: ஸர்வபூதப்ரக்ருதிரிதி ச யயா ப்ராணின: ப்ராணவந்த: ப்ரத்யக்ஷாபி: ப்ரபன்னஸ்தனுபிரவது வஸ்தாபிரஷ்டாபிரீச: /] என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பிகைக்கு இவையிருப்பது 'புவி பயஸி க்ருசானௌ மாருதே கே சசாங்கே ஸவிதரி யஜமானே zப்யஷ்டதா சக்திரேகா வஹதி குசபராப்யாம் யா zவனம்ராபி விச்வம் ஸகலஜனனி ஸா த்வம் பாஹிமாம் அத்யவச்யம் !{" என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2. இங்கு தரணி என்று இரண்டு இடங்களில் வருவதில் முதலிலுள்ள த என்பதை தனுஸ் என்பதிலிருப்பதுபோலும், இரண்டாவதிலுள்ள த என்பதை தமிழ் என்பதிலிருப்பது போலும் உச்சரிக்க வேண்டும். ļ 30 # மூகபஞ்சசதீ लीनस्थितिमुनिहृदये ध्यान स्तिमित तपस्यदुपकम्पम् । पीनस्तनभरमीडे मीनध्वजतन्त्रपरमतात्पर्यम् ॥ १९ ॥ ÷ லீன ஸ்திதி முனிஹ்ருதயே த்யான ஸ்திமிதம் தபஸ்யத் உபகம்பம் । பீனஸ்தனபரம் ஈடே மீனத்வஜ தந்த்ர . முனிஹ்ருதயே - முனீச்வார்களுடைய ஹ்ருதயத்தில், லீன ஸ்திதி - லயத்தையடைந்திருப்பதும், உபகம்பம் . கம்பாநதிக் கரையில், த்யானஸ்திமிதம் - த்யானத்தில் அசைவற்று, தபஸ்யத்தபஸ் செய்கிறதும், பீனஸ்தனபரம் - பருத்த ஸ்தனபாரங்களு டையதுமான், மீனத்வஜ தந்த்ர பரம தாத்பர்யம் மன்மத சாஸ்த்ரத்தின் ஸாராம்சத்தை, ஈடே - ஸ்தோத்ரம் செய்கிறேன். காஞ்சீபுரியில் தன்னைக் குறித்து எப்படி தபஸ் செய்ய வேண்டுமென்பதை பரமசிவன் அம்பிகைக்குச் சொல்லும்போது, பஞ்சாக்னிமத்தியில் ஊசி முனையில் நின்றுகொண்டு தன்னை த்யானித்துத் தபஸ்செய்ய வேண்டுமென்று சொன்னதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'கரே த்ருத்வா சுகச்ரேஷ்டம் பஞ்சாக்னௌ ஸுசிகோபரி । ஸ்தித்வா மாம் த்யாயதீ பக்த்யா தப: குரு ஸுதுச்சரம்? பரம தாத்பர்யம் ।! श्वेता मन्थरहसिते शाता मध्ये च वाङ्मनोतीता । शीता लोचनपाते स्फीता कुचसीम्नि शाश्वतीमाता ॥ २० ॥ சவேதா மந்தர ஹஸிதே சாதா மத்யே ச சீதா லோசனபாதே ஸ்பீதா குசஸீம்னி வாங்மனோதீதா । 'சாச்வதீ மாதா சாச்வதீ மாதா- அழிவில்லாத தாயாரான ஸ்ரீகாமாக்ஷியான வள், மந்தரஹஸிதே - மந்தஹாஸத்தில், சவேதா- வெளுப் பான நிறத்தோடும், மத்யே - இடையில், சாதா -இளைத்தவளா யும், ச- இன்னும், வாங்மனோதீதா-வாக்குக்கும் மன மனதிற்கும் எட்டாதவளாயும், லோசனபாதே - பார்வையில், சீதா - குளிர்ச் ஆர்யா சதகம் சியோடு கூடியவளும், குசஸீம்னி - ஸ்தனப்ரதேசத்தில், ஸ்பீதாபருத்தும் (விளங்குகிறாள்). 1. புன்சிரிப்பை வெண்ணிலவுக்கு ஒப்பிடப்படுவது வழக்க மாகையால் அது வெளுப்பான நிறத்தோடிருப்பதாக இங்கு சொல்லப்பட்டது. அம்பிகையினுடைய முகமாகிய சந்த்ரனிட மிருக்கும் புன்சிரிப்பாகிற வெண்ணிலவானது ஸாமான்யமான சந்த்ரனின் நிலவைவிட எத்தனையோ மடங்கு ச்ரேஷ்டமான தென்பதாக 'ஸௌந்தர்யலஹரியில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம் சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா । அதஸ்தே சீதாம்சோ: அம்ருத லஹரீம் ஆம்ல ருசய: பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா {। 31 இங்கு அம்பிகையைப் பலவிதமாக வர்ணித்திருப்பதுபோல் ஆசார்யாளும் 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள். "அரளா கேசேஷ ப்ரக்ருதிஸரளா மந்தஹஸிதே சிரீஷாபா சித்தே த்ருஷதுபல சோபா குசதடே । ப்ருசம் தன்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹ விஷயே ஜகத்த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசித் அருணா । पुरतः कदा नु करवै पुरवैरिविमर्दपुलकिताङ्गलताम् । पुनतीं काञ्चीदेशे पुष्पायुधवीर्यसरसपरिपाटीम् ॥ २१ ॥ புரத: கதா நு கரவை புரவைரி விமர்த புரவைரி விமர்த புளகிதாங்கலதாம் । புனதீம் காஞ்சீதேசம் புஷ்பாயுத வீர்ய ஸரஸ பரிபாடீம்। புரவைரி விமர்த்த - (புரங்களை யெரித்த) பரமசிவனுடைய காடாலிங்கத்தினால், புளகிதாங்கலதாம்- புளகமடைந்த சரீரத்தை யுடையவளும், காஞ்சீதேசம் புனதீம்- காஞ்சீபுரியை பாவனமாகச் செய்பவளும், புஷ்பாயுத வீர்ய-மன்மதனுடைய ப்ரபாவத்தின், ஸரஸ பரிபாடீம் - அழகான முறையின் ஸ்வரூப மாயிருப்பவளுமான ஸ்ரீ காமாக்ஷியை, புரத:- என் முன்பாக, கதா கரவை நு-எப்போது தான் இருக்கச்செய்வேனோ! மூகபஞ்சசதீ அதாவது, அவ்விதமாயிருக்கும் ஸ்ரீ காமாக்ஷியை தனக்கு எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்று சொல்லுகிறார். 32 पुण्या कापि पुरंत्री पुडितकंदर्पसंपदा वपुषा । पुलिनचरी कम्पायाः पुरमथनं पुलक निचुलित कुरुते ॥ २२ ॥ புண்யா காபி புரந்த்ரீ புங்கித கந்தர்ப்ப ஸம்பதா வபுஷா । புளினசரீ கம்பாயா: புரமதனம் புளக நிகளிதம் குருதே !! கம்பாயா: புளினசரீ - கம்பாநதியின் மணல் திட்டுகளில் ஸஞ்சரிப்பவளும், புண்யா புரந்த்ரீ-புண்யம் நிறைந்த க்ருஹிணி யாயுமிருக்கும், காபி -வர்ணிக்கமுடியாத ஒருவள், புங்கித கந் தர்ப்ப ஸம்பதா - மன்மதனுடைய ஸம்பத்து நிறைந்ததான, வபுஷா - தன் சரீரத்தினால், புரமதனம் - முப்புரங்களை யெரித்த வரான பரமசிவனை, புளக நிசுளிதம் - மயிர்க்கூச்சல் நிறைந்த வராக, குருதே -செய்கிறாள். 1.புளினமென்பது நதிகளிலிருக்கும் மணல் திட்டைக் குறிப்பதுடன் அவற்றின் கரையையும் குறிக்கும். 2. புரந்த்ரீ என்றால் வீட்டிலிருக்கும் ஜனங்களைத் தாங்கும் ஹுமங்கலிஸ்திரீ அல்லது, உயிருடனிருக்கும் பதி புத்ரர்களை யுடைய (ஸுமங்கலி) ஸ்திரீ என்று அர்த்தம். तनिमा द्वैतवलग्नं तरुणारुणसंप्रदायतनुलेखम् । तटसीमनि कंपायास्तरुणिमसर्वस्वमाद्यमद्राक्षम् ॥ २३ ॥ தனிமாத்வைத வலக்னம் தருணாருண ஸம்ப்ரதாய தனுலேகம் । தடஸீமனி கம்பாயா: தருணிம ஸர்வஸ்வம் ஆத்யம் அத்ராக்ஷம் ॥ தனிமாத்வைத வலக்னம்-மிகவும் மெல்லியத்தான இடுப்பை யுடையதும்,தருணாருண ஸம்ப்ரதாய-ஸரியான சிகப்பு நிறத்தை வழக்கமாக உடைய தனுலேகம் - மெல்லிய சரீரத்தோடு கூடிய ஆர்யா சதகம் தும், தருணிம ஸர்வஸ்வம்-யௌவனமே ஆத்யம்- ஆதி பரம்பொருளை, நதியின் கரையில், அத்ராக்ஷம் - பார்த்தேன். 33 நிரம்பியுள்ளதுமான, கம்பாயா: தடஸீமனி - காம்பா पौष्टिककर्मविपाकं पौष्पशरं सविधसीम्नि कम्पायाः । अद्राक्षमात्तयौवनमभ्युदयं किञ्चिदर्घशशिमौलेः ॥ २४ ॥ பௌஷ்டிக கர்ம விபாகம் பௌஷ்பசரம் [ஸவிதஸீம்னி கம்பாயா: । அத்ராக்ஷக்ஷிம் ஆத்தயௌவனம் அப்யுதயம் [கிஞ்சித் அர்த்தசசிமௌளே: !! பௌஷ்பசரம் - (மன்மதனுடைய ஆட்சிக்குள்பட்டதான) காமத்தை, பௌஷ்டிக கர்ம விபாகம் புஷ்டியாக ஏற்படச் செய் வதும், ஆத்த யௌவனம்- யௌவனம் நிறைந்ததும், அர்த்தசசி மெளளே:- அர்த்த சந்த்ரனை சிரஸில் தரித்தவரான ஏகாம்பரநாத ருடைய, கிஞ்சித் அப்யுதயம்- ஏதோ ஒரு (வர்ணனையிலடங்காத) மேன்மையாயிருப்பதுமான மூர்த்தியை, கம்பாயா: கதியுடைய, ஸவிதஸீம்னி - கரையின் ப்ரதேசத்தில், அத்ராக்ஷம்பார்த்தேன். கம்பர संश्रितकाञ्चीदेशे सरसिजदौर्भाग्यजाग्रदुत्तंसे । सविन्मये विलीये सारस्वतपुरुषकारसाम्राज्ये ॥ २५ ॥ ஸம்ச்ரித காஞ்சீ தேசே ஸரஸிஜ தௌர்பாக்ய (ஜாக்ரத் உத்தம்ஸே । ஸம்வின் மயே விலீயே ஸாரஸ்வத புருஷகார [ஸாம்ராஜ்யே ஸம்ச்ரித காஞ்சீதேச- காஞ்சீபுரியை அடைந்ததும், ஸர ஸிஜதௌர்பாக்ய ஜாக்ரத் உத்தம்ஸே- சந்த்ரனை சிரோபூஷணமா யுடையதும், ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே-வாக்கினுடைய ஸாமர்த்தியத்தைப்பற்றிய ஸாம்ராஜ்யத்தோடு கூடியதும், ஸம்வின் மயே- ஞான ஸ்வரூபமாயிருப்பதுமான ஒரு மூர்த்தியிடத்தில், விலீயே - நான் லயித்திருக்கிறேன். 5 முகபஞ்சசதீ தாமாஸ புஷ்பமானது பகலில் மலர்ந்து இரவில் மூடுவ தினால் அதற்கு ஸூர்யன் மித்ரனாகவும் சந்த்ரன், சத்ருவாகவு மிருப்பதாகச் சொல்வது கவிகளின் ஸம்ப்ரதாயம். அதையொட்டி இங்கு சந்த்ரனை ஸரஸிஜ தௌர்பாக்யனென்றும், அவன் அம்பி கையினுடைய உத்தம்ஸமாக விளங்குவதால் 'சரஸிஜ தெனர் பாக்ய ஜாக்ரத் உத்தம்ஸே' என்று அம்பிகையை வர்ணிக்கப் பட்டது. 34 2. புருஷகாரமென்றால் வீர்யம், ஸாமர்த்யம்,பௌருஷம் என்று அர்த்தம். அம்பிகை ஸர்வ வித்யா ரூபிணியாயும் வர்ண மயியாகவும் இருக்கிறபடியால் வாக்கின் ஸாமர்த்யத்தைப்பற்றிய ஸாம்ராஜ்யத்தோடிருப்பதாக இங்கு சொல்லப்பட்டது. அம்பி கையின் உபாஸகர்கள் புருஷ ரூபமடைந்த ஸரஸ்வதீ தேவிமாதிரி ஆகிவிடுவதாகச் சொல்லப்படும். அம்பிகையின் பாதோதகத் திற்கே இவ்விதமான வாக்விலாஸத்தைக் கொடுக்கும் மஹிமை யுண்டென்பதாக 'கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம் பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம் । ப்ரக்ருத்யா ரக்தானாம்பி ச கவிதா காரணதயா கதா தத்தே வாணீ முக கமல தாம்பூல ரஸதாம் II' என்று 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ் விதமான பலனை யுத்தேசித்துச் செய்யப்படும் உபாஸனா க்ரமங் களுக்கு ஸாரஸ்வத ப்ரயோகங்களென்று பெயர். मोदित मधुकरविशिखं स्वादिमसमुदायसारकोदण्डम् । आहतकाञ्चीखेलनमा दिममारुण्यभेद माकलये ॥ २६ ॥ மோதித மதுகர விசிகம் ஸ்வாதிம் ஸமுதாய் [ஸார கோதண்டம் । ஆத்ருத காஞ்சீ கேலனம் ஆதிமம் [ஆருண்யபேதம் ஆகலயே II மோதித மதுகர விசிகம்- வண்டுகளுக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கும் (புஷ்ப) பாணங்களையுடையதும், ஸ்வாதிம ஸமுதாயதித்திப்பெல்லாம் சேர்ந்து, ஸார கோதண்டம்- ஸாரமாயிருக்கும் மு ஆர்யா சதகம் (இக்ஷ) கோதண்டத்தையுடையதும், ஆக்ருத காஞ்சி கேலனம் காஞ்சிபுரியில் விளையாடுவதை ஆதரித்ததும், ஆதிமம் - எல்லா வற்றிற்கும் ஆதியாயிருப்பதுமான, ஆருண்யபேதம்- சி வந்த தொரு மூர்த்தியை, ஆகலயே - தியானிக்கிறேன். उररीकृतकाञ्चिपुरीमुपनिषद रविन्दकुहरमधुधाराम् । उन्नम्रस्त नकलशीमुत्सवलहरीमुपास्महे शम्भोः ॥ २७ ॥ 35 உரரீக்ருத காஞ்சி புரீம் உபநிஷதரவிந்த [குஹர மது தாராம் । உத்ஸவலஹரீம் உன்னம்ர ஸ்தனகலசீம் (உபாஸ்மஹே சம்போ: II உரரீக்ருத காஞ்சிபுரீம் - காஞ்சீபுரியை விளங்கச் செய்ப வளும், உபநிஷதரவிந்த - உபநிஷத்துக்களாகிய தாமரஸ புஷ்பத் தின், குஹரமது தாராம் - நடுவிலிருந்து பெருகும் மகரந்தப் பெருக்கு மாதிரியிருப்பவளும், உன்னம்ர ஸ்தனகலசீம்-வளை யாத (நிமிர்ந்திருக்கும்)ஸ்தன கலசங்களையுடையவளும், சம்போ:பரமசிவனுடைய, உத்ஸவ லஹரீம் பேரானந்தத்தின் அலை போன்றவளுமான ஸ்ரீ காமாக்ஷியை, உபாஸ்மஹே-உபாஸிக் கிறோம். · புஷ்பங்களிலிருந்து தேன் (பூத்தேன்) பெருகுவதுமாதிரி உபநிஷத்துக்களாகிய தாமரஸ புஷ்பங்களிலிருந்து பெருகும் தேனாக அம்பிகையைச் சொல்லப்பட்டது. சகல உபநிஷத்துக் களுக்கும் முடிவான தாத்பர்யமாக அம்பிகை இருப்பதால் இம் மாதிரி சொல்லப்பட்டது. 36 மூகபஞ்சசதீ ஏணசிசு தீர்க்கலோசனம் மான்குட்டியினுடையதைப் P போன்ற நீண்ட கண்களையுடையதும், ஸந்ததம் - எப்போதும், நமதாம் - நமஸ்கரிக்கும் பக்தர்களுடைய, ஏன: பரிபந்த்திபாபத்தை தடுப்பதும் (போக்குவதும்), ஏகாம்ரநாத ஜீவிதம்ஏகாம்ரநாதருடைய பிராணனாயிருப்பதும், ஏவம் பத தூரம்இம்மாதிரி என்று சொல்வதற்கு எட்டாததுமான, ஏகம் - ஒரு பரம்பொருளை, அவலம்பே - சரணமடைகிறேன். அம்பிகையினுடைய ஸ்வரூபமானது இம்மாதிரிதானிருக் கிறதென்பதாக ஒருவராலும் சொல்லமுடியாது என்று இங்கு சொல்லப்பட்டது. இதேமாதிரி 'ஏவமித்யாகமாபோத்யா', 'ஏதத் தத் இத்யனிர்தேசயா' என்பதாக ஸ்ரீ லலிதா த்ரிசதியிலும் சொல்லப்பட்டிருக்கிறது. स्मयमानमुखं काञ्चीमयमानं कमपि देवताभेदम् । दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मम्नाः ॥ २९ ॥ ஸ்மயமான முகம் காஞ்சீமயமானம் கமபி [தேவதாபேதம் । தயமானம் வீக்ஷ்ய முஹுர் வயம் ஆனந்தாம்ரு [தாம்புதௌ மக்னா:// ஸ்மயமானமுகம் சிரித்த முகத்தையுடையதும், காஞ்சீமய மானம் - காஞ்சீபுரியை வியாபித்து விளங்குவதும்,தயமானம் கருணையோடு கூடியதுமான, கமபி தேவதாபேதம்- ஒரு தேவ தையை, முஹுர் வீக்ஷய - அடிக்கடி பார்த்து, வயம் - நாம், ஆனந்தாம்ருதாம்புதெள - ஆனந்தமென்ற அம்ருத ஸமுத்ரத்தில், மக்னா:- மூழ்கியிருக்கிறோம். कुतुरुजुषि काञ्चिदेशे कुमुदतपोराशिपाकशेखरिते । कुरुते जनो मनोऽयं कुलगिरिपरिबृढकुलैकमणिदीपे ॥ ३० ॥ குதுகஜுஷி காஞ்சிதேசே குமுத தபோராசி [பாக சேகரிதே । குருதே ஜனோ மனோபயம் குலகிரி பரிப்ருட [குலைக மணிதீபே ii ஆர்யா சதகம் காஞ்சிதேசே - காஞ்சீபுரியில், குதுகஜுஷி - உத்ஸாஹத் தோடு வளிப்பதும்,குமுத -நீலோத்பலங்களின், தபோராசி யோசு தபஸ்ஸின் பரிபாகமான சந்த்ரனை, சேகரிதே - சிரோபூஷண மாய் உடையதும்,குலகிரி பரிப்ருட குலபர்வதங்களுக்குத் தலைவனான ஹிமவானுடைய, குலைக் மணிதீபே - குலத்திற்கு ஒரே ஒரு (முக்யமான) ரத்ன தீபமாய் விளங்கும் ஒரு ரூபத்தில், அயம் ஜன:இந்த ஜனமானவன், மன : குருதே - மனத்தைச் செலுத்துகிறான். 1. அதாவது, தான் அவ்விதமாக த்யானம் செய்வதை 'அயம் ஜன: மன: குருதே' என்று சொல்லுகிறார். 2. அம்பிகையானவள் தன் பிதாவான ஹிமவானுடைய குலத்திற்கு ரத்ன தீபமாய், குன்றாவிளக்காய், இருப்பதை நமது ஆசார்யாளும் 'ரூபாதிகா சிகரி பூபாலவம்சமணிதீபாயிதா பக வதீ' என்பதாக 'அம்பாஷ்டகத்தில் வர்ணித்திருக்கிறார்கள். வ वीमहि काञ्चिपुरे विपुलस्तन कलश गरिमपरवशितम् । विद्रुमसहचरदेहं विभ्रमसमवायसारसंनाहम् ॥ ३१ ॥ 37 வீக்ஷேமஹி காஞ்சிபுரே விபுல ஸ்தனகலச [கரிம பரவசிதம்1 வித்ரும ஸஹசர தேஹம் விப்ரம ஸமவாய [ஸார ஸன்னாஹம் II விபுல ஸ்தனகலச கரிம - பருத்ததான ஸ்தனபாரங்களின் கனத்தினால், பரவசிதம் - மிகவும் குனிந்ததாயும், விக்ருமஸஹசர தேஹம் - பவழம் போன்றதான சரீரத்தையுடையதும், விப்ரம ஸமவாய ஸார ஸன்னாஹம் - காமகேளிகளுடைய சேர்க்கையின் ஸாரமாகிற (யுத்த) கோலத்தோடு கூடியதுமான ஒரு மூர்த்தியை, காஞ்சிபுரே - காஞ்சீபுரியில், வீக்ஷேமஹி - பார்க்கிறோம். कुरुविन्दगोत्रगात्रं कूलचरं कमपि नौमि कम्पायाः । कूलङ्कषकुचकुम्भं कुसुमायुधवीर्यसारसंरम्भ्म् ॥ ३२ ॥ 38 மூகபஞ்சசதீ குருவிந்த கோத்ர காத்ரம் கூலசரம் கமபி [நௌமி கம்பாயா: ] கூலங்கஷ குசகும்பம் குஸுமாயுத வீர்ய [ஸார ஸம்ரம்பம் // கம்பா குருவிந்த கோத்த காத்ரம் - சிகப்பு ரத்னத்திலுண்டானது போன்ற சரீரத்தையுடையதும், கம்பாயா: கூலசரம் நதியின் கரையில் ஸஞ்சரிப்பதும், கூலங்க குசகும்பம் (ரவிக்கையாகிற) கரையைக் கிழித்தான ஸ்தனங்களை யுடையதும், குஸுமாயுத் மன்மதனுடைய, வீர்ய ஸார ஸம்ரம்பம் - வீர்யத் தின் ஸாரமாகிய வேகத்தோடு (வர்ணிக்க முடியாத) மூர்த்தியை, கூடியதுமான், கமபி நௌமி - நமஸ்கரிக்கிறேன். → 1. அம்பாளுடைய வக்ஷ: ப்ரதேசத்தை இதேமாதிரி ஆசார்யாளும், 'குசௌ ஸத்ய: ஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரௌ கஷந்தௌ தோர்முலே கனக கலசாபௌ கலயதா] என்பதாக 'ஸெளந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள். இவ்விதம் ஸ்தனங்களை வர்ணிப்பதானது அம்பாளுடைய வளந்தர்யத்தைக் காட்டுவது தவிர, ஜகன்மாதாவான அம்பா ளுடைய மஹோத்க்ருஷ்டமான மாத்ருவத்தைக் காட்டுவதற்காக இம்மாதிரி அடிக்கடி சொல்லப்படுகிறது. कुड्मलितकुचकिशोरैः कुर्बाणैः काञ्चिदेशसौहार्दम् । कुकुमशोणैर्निचितं कुशलपथं शंभुसुकृतसैभारैः ॥ ३३ ॥ குட்மளித குச கிசோரை: குர்வாணை: [காஞ்சிதேச ஸௌஹார் தம் । குங்கும் சோணைர் நிசிதம் குசல பதம் [சம்புஸுக்ருத ஸம்பாரை: II குட்மளித குச கிசோரை:- கொஞ்சம் மலர்ந்ததுபோன்ற இளம் ஸ்தனங்களையுடையதும், காஞ்சிதேச காஞ்சிதேசத் தில், ஸௌ ஹார்தம் குர்வாணை:- பற்றுதலை செய்வதும் (உடை யதும்) குங்குமசோணை: குங்குமப் பூவைப்போல் (அல்லது, ஆர்யா சதகம் ஸம்பாரை: குங்குமத்தைப்போல்) சிகப்பு நிறமுடையதும், சம்பு ஸூ பக்ருத பரமசிவனுடைய ஸு க்ருதங்களின் சேர்க்கையா யிருப்பதுமான ஒரு மூர்த்தியால், குசலபதம் - (பக்தர்களுடைய) க்ஷேமமார்க்மானது, நிசிதம் - போடப்பட்டிருக்கிறது. (ஏற் படுத்தப்பட்டிருக்கிறது.) अङ्कितकचेन केन चिदन्धकरणौषधेन कमलानाम् । னு:ன் எனிக்கு காபி கலர? காண€ ।138॥ அங்கித கசேன கேனசித் கிறது. [அந்தம்கரணௌஷதேன கமலானாம் । அந்த: புரேண சம்போ: அலங்க்ரியா காபி (கல்ப்யதே காஞ்ச்யாம் । கமலானாம் - தாமாஸ புஷ்பங்களுக்கு, கேனசித் - ஏதோ ஒரு, அந்தம்கரணௌஷதேன - இருட்டைச்செய்யும் மருந்தினால் (அதாவது, அவற்றை மூடச்செய்யும் சந்த்ரனால்), அங்கித கசேன அலங்கரிக்கப்பட்ட கேசங்களையுடையவளான், சம் போ: - பரமசிவனுடைய, அந்த: புரேண - பத்னியால், காஞ்ச் யாம் - காஞ்சீபுரியில் (காஞ்சீபுரிக்கு), காபி அலங்க்ரியா - ஒரு (வர்ணனையிலடங்காத) அழகானது, கல்ப்யதே - ஏற்படுத்தப்படு उररीकरोमि सन्ततमूष्मलफालेन लालितं पुंसा । उपक्रम्पमुचितखेलनमुर्वीधरवंशसंपदुन्मेषम् ॥ ३५ ॥ 39 உரரீகரோமி ஸந்ததம் ஊஷ்மல் பாலேன் [லாலிதம் பும்ஸா । உபகம்பம் உசிதகேலனம் உர்வீதர வம்ச (ஸம்பத் உன்மேஷம் 11 ஊஷ்மல பாலேன - சுடுகிற நெற்றியையுடைய (அதாவது அக்னியை நேத்ரமாக உடைய), பும்ஸா -புருஷனால் (அதாவது, பரமசிவனால்), லாலிதம் - சீராட்டப்படுகிறதும், உபகம்பம் கம்பா நதியின் ஸமீபத்தில், உசிதகேலனம் - விளையாடுவதில் ப்ரியத்தோடு (அல்லது, பழக்கத்தோடு) கூடியதும், உர்வீதர + மூகபஞ்சசதீ வம்ச- ஹிமவானுடைய வம்சத்தின், ஸம்பத் உன்மேஷம் - ஸம் பத்தை விளங்கச் செய்வதுமான ஒரு மூர்த்தியை, ஸந்ததம்எப்போதும், உரீகரோமி - த்யானித்துக் கொண்டிருக்கிறேன். 40 अक्ररितस्तन कोरकमङ्कालङ्कारमेकचूतपतेः । आलोकेमहि कोमलमागमसलापसारयाथार्थ्यम् ॥ ३६ ॥ [ஏக சூதபதே: அங்குரித ஸ்தனகோரகம் அங்காலங்காரம் ஆலோகேம்ஹி கோமளம் ஆகம ஸம்லாப [ஸார யாதார்த்யம் ॥ அங்குரித ஸ்தனகோரகம் - மொட்டுக்கள் போன்ற ஸ்தனங் களையுடையதும்,கோமளம் ம்ருதுவானதும், ஆகம ஸம்லாப வேதவாக்குகளின், ஸார யாதார்த்யம் ஸாரமான தாத்பர்ய மாய் இருப்பதும், ஏக சூதபதே :-ஏகாம்ரநாதருடைய, அங் காலங்காரம் - மடியின் அலங்காரமாயிருப்பதுமான ஒரு மூர்த்தி யை, ஆலோகேமஹி - பார்த்துக்கொண்டிருக்கிறோம். पुतिकरुणमुदञ्चितशिक्षित मणिकाञ्चि किमपि काञ्चिपुरे । मञ्जरितमृदुलहास पिञ्जरतनुरुचि पिनाकिमूलधनम् ॥ ३७ ॥ புஞ்ஜித கருணம் உதஞ்சித சிஞ்ஜித [மணி காஞ்சி கிமபி காஞ்சிபுரே ! மஞ்ஜரித மருதுள ஹாஸம் பிஞ்ஜர (தனுருசி பினாகி மூலதனம் !। புஞ்ஜித கருணம் - கருணை நிறைந்ததும், உதஞ்சித சிஞ்சித் மணிகாஞ்சி ரத்னமயமான ஒட்யாணத்தின் சலங்கைகளின் சப்தத்தை வெளிப்படுத்துவதும், மஞ்ஜரித மருதுள ஹாலம் மந்தஹாஸம் நிறைந்ததும், பிஞ்ஜாதனுருசி - பொன் போன்ற தேஹகாந்தியுடையதும், பினாகி மூலதனம் - பரமசிவனுக்கு மூல தனமாயிருப்பதுமான, கிமபி - ஏதோ ஒரு மூர்த்தியானது, காஞ்சிபுரே - காஞ்சீபுரியில் (விளங்குகின்றது). (குறிப்பு:- மூலத்திலிருக்கும் ஒவ்வொரு பதத்திற்கும் தனித்தனியாக அர்த்தம் சொல்லி அந்த பதத்தினால் ச்லோகத்தில் ஆர்யா சதகம் 41 என்ன அர்த்தம் ஏற்படுகிறது என்று காட்டுவதாயிருந்தால் ஒவ் வொரு சலோகத்திற்கும் ஏராளமான இடம் வேண்டும். ஆகவே இந்த ஸ்தோத்ரத்தின் மொழி பெயர்ப்பில் பதங்களின் சேர்க் கைக்கு எது ஸாரமான பாவமோ அதுமட்டும் காட்டப்பட்டி ருக்கிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.] लोलहृदयोऽस्मि शम्भो-र्लोचनयुगलेन लेह्यमानायाम् । लालितपरमशिवायां लावण्यामृततरङ्गमालायाम् ॥ ३८ ॥ லோல ஹ்ருதயோகஸ்மி சம்போ: லோசந மகளேந லேஹ்யமாநாயாம் லாவித பரமசிவாயாம் லாவண்யாம்ருத தரங்க மாலாயாம் ॥ சம்போ:- பரமசிவனுடைய, லோசநயுகளோ - இரு கண் களாலும், லேஹ்யமாநாயாம் - ஆசையோடு அனுபவிக்கப்படுவ தும், லாலித பரமசிவாயாம் - பரமசிவனை மோஹிக்கச் செய்வ கம், லாவண்யாமருத தரங்க க மாலாயாம் ஸௌந்தர்யமாகிற அம்ருத ஸமுத்ரத்தின் அலைகளின் கூட்டம் போலிருப்பதுமான ஒரு மூர்த்தியினிடத்தில், லோலஹ்ருதய:அஸ்மி - ஊசலாடும் (அல்லது, ஆசையோடு கூடிய) மனதோடிருக்கிறேன். 1. அம்பிகையின் அழகைத் தன் கண்களால் பருகிவிடு வது போல் பரமசிவன் பார்ப்பதாக 'லோசாயுகளோ லேஹ் யமாநாயாம்' என்பதால் சொல்லப்பட்டது. ப 2. வௌந்தர்யமாகிற ஸமுத்ரத்தில் அடுத்தடுத்து வரும் அலைகள்போல் அம்பிகை இருப்பது 'லாவண்யாம்ருத தரங்க மாலாயாம்' என்பதால் சொல்லப்பட்டது. அடுத்தடுத்து வரும் அலைகளின் சேர்க்கைக்கு (தரங்க மாலைக்கு) லஹரி என்று பெயர். அம்பிகை இவ்விதமான ஸௌந்தர்யலஹரீ ரூபமாயிருப் பதால் அந்த ஸௌந்தர்யத்தைப்பற்றித் தான் எழுதிய ஸ்கோத் திரத்திற்கே ஸ்ரீமதாசார்யாள் 'ஸெளந்தர்யலஹரீ என்று பெயர் வைத்தார்கள். 42 மூகபஞ்சசதீ मधुकरसहचर चिकुरै- मैदनागम समयदीक्षितकटाक्षैः । मण्डितकम्पाती रे मंझलकन्दैमास्तु सारूप्यम् ॥ ३९ ॥ மதுகர ஸஹசர சிகுரை: மதநாகம் ஸமயதீக்ஷித கடாக்ஷை: । மண்டித கம்பா தீரைர் மங்கள கந்தைர் மமாஸ்து ஸாரூப்யம் மதுகர ஸஹசர சிகுரை:- வண்டுகள் போன்றதான (சுறுத்த) கூந்தல்களையுடையதும், மதந ஆகமமைய - காமசாஸ்த் ரத்தைப் போதிப்பதென்பதான, தீக்ஷித் - தீக்ஷையோடு கூடிய, கடாக்ஷை: - கடாக்ஷங்களையுடையதும், மண்டித கம்பாதீரை:கம்பாநதியின் கரையை அலங்கரிப்பதும், மங்கள கந்தை:- மங் களத்தின் மூலம் போன்றதுமான ஒரு முர்த்தியோடு, ஸாரூப் யம் - ஸாரூப்யமானது, மம அஃது - எனக்கு ஏற்படட்டும். * वदना रविन्दवक्षो-वामाङ्कतटीवशंवदीमूता । पुरुषत्रित त्रेधा पुरन्धिरूपण त्वमेव कामाक्षि ॥ ४० ॥ வதநாரவிந்த வகே வாமாங்க தடீ வசம்வதி பூதா 1 புருஷ த்ரிதயே த்ரேதா புரந்த்ரி ரூபா த்வமேவ காமாக்ஷி 11 காமாக்ஷி - ஹே காமாக்ஷி தேவி!-புருஷத்ரிதயே -ப்ரம் ஹா,விஷ்ணு, சிவன் என்ற மூன்று பதிகளிடத்தில்,வதநார விந்த வக்ஷோ வாமாங்கதடீ - முறையே அவர்களுடைய முக கமலத்திலும், மார்பிலும், இடதுமடியிலும், வசம்வதீ பூதாஎப்போதும் இருந்துகொண்டு, த்ரேதா-மூன்று ரூபங்களோடு கூடிய, புரந்த்ரி ரூபா -பத்னீ ஸ்வரூபமாக, த்வமேவ - நீயே (இருக்கிறாய்.). இதனால் ஸரஸ்வதீ, லக்ஷ்மீ, பார்வதீ என்ற மூவரும் பாப்ரம்ஹ ஸ்வரூபிணியான அம்பிகையின் ரூபங்கனென்பது சொல்லப்பட்டது. ஆர்யா சதகம் बाघाकरी भवाब्धे-राघाराद्यम्बुजेषु विचरन्तीम् । आधारीकृतकाच बोधामृतवीचिमेव विमृशामः ॥ ४१ ॥ பாதாகரீம் பவாப்தே: ஆதாராத்யம்புஜேஷு விசரந்தீம் । ஆதாரீக்ருத காஞ்சீம் க போதாம்ருத வீசிமேவ விம்ருசாம்: பவாப்தே: - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திற்கு,பாதாகரீம்இடையூறைச் செய்பவளும், ஆதாராதி அம்புஐேஷு-மூலாதா ரம் முதலான கமலங்களில், விசரந்தீம்-ஸஞ்சரிப்பவளும், ஆதாரீக்ருத காஞ்சீம் - காஞ்சீபுரியை வாஸஸ்தானமாக உடைய வளும், போதாம்ருத வீசிம் ஏவ -ஞானாம்ருத (ஸமுத்ர)த்தின் அலையாயிருப்பவளுமான ஸ்ரீ காமாக்ஷியையே, விம்ருசாம: த்யானம் செய்கிறோம். ... ஜன்மஜலதௌ நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி 11* என்று 'ஸௌந்தர்யலஹரியிலும் . de 04 48 1. 'பவாப்தே: பாதாகரீம்' என்பதினால் பக்தர்களை ஸம் ஸாரமாகிற ஸமுத்ரத்திலிருந்து கரையேறச்செய்து விடுவிப்ப வளாக அம்பிகையைப் பற்றிச் சொல்லப்பட்டது. இதேமாதிரி ஆசார்யாளால் 'ஸம்ஸார பங்க நிர்மக்க ஸமுத்தாண பண்டிதா என்று லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. :*, * 'மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் ஸ்திதம் ஸ்வாதிஷ்டாநே ஹ்ருதி மருதம் ஆகாசமுபரி । மநோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம் ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே ॥ 2. அம்பிகையானவள் குண்டலினீ ரூபிணியாய் மூலா தாரம் முதலான ஷட் சக்ரங்களிலும் ஸஞ்சரிப்பது 'ஆதாராத் யம்புஜேஷு விசரந்தீம்' என்பதால் இங்கு சொல்லப்பட்டது. இதைவிரிவாக ஆசார்யாள் 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக் கிறார்கள். .x $ மூகபஞ்சசதீ ஸுதாதாராஸாரை: சரணயுகளாந்தர் விகளிதை: ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ: । அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிபம் அத்யுஷ்ட வலயம் ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி II' कलयाम्यन्तः शशधर-कलयाङ्कितमौलिममलचिद्वलयाम् । अल्यामागम पोठी-निलयां वलयाङ्कसुन्दरीमम्बाम् ॥ ४२ ॥ கலயாம்யந்த: சசதரகலயாங்கித மெளளிம் அமல்-சித்வலயாம்! அலயாம் ஆகம்பீடிநிலயாம் வலயாங்க ஸுந்தரீம் அம்பாம் ।1 சசதர கலயா அங்கித மௌளிம் - சந்த்ரனுடைய கலையினால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடையவளும், அமல சித்வலயாம் நிர்மலமான சித்ரூபமாயிருப்பவளும், அலயாம் - அழிவில்லாத வளும், ஆகமபீடி நிலயாம் - வேதங்களாகிற பீடத்திலிருப்ப வளும், வலயாங்க ஸுந்தரீம் அம்பாம் வளைகளையணிந்த ஸந் தரியான ஜகன்மாதாவை, அந்த: கலயாமி -என்மனதில் எப் போதும் த்வானம் செய்கிறேன். शर्वादि परमसाधक-मुर्वानीताय कामपीठजुषे । सर्वाकृतये शोणिम गर्वाय समर्प्यने हृदयम् ॥ ४३ ॥ . சர்வாதி பரம ஸாதக் குர்வாநிதாய காம்பீடஜுஷே । ஸர்வாக்ருதயே சோணிம- கர்வாய ஸமர்ப்யதே ஹ்ருதயம் ॥ சர்வாதி பரமசிவன் முதலான, பரமஸரதக் குரு ஆநீதாய். உத்தமமான ஸாதகர்களான குருக்களால் வரவழைக்கப்பட்ட தும் (உபாஸிக்கப்பட்டதும்), காம பீடஜலஷே- காமகோடி பீடத்தில் விளங்குவதும், ஸர்வாக்ருதயே - லகலமான ஜகத்தின் ரூபமாயிருப்பதும், சோணிம கர்வாய -உயர்ந்ததான சிகப்பு நிறத்தையுடையதுமான ஒருமூர்த்தியிடத்தில், ஹ்ருதயம் - என்னு டைய மனதானது, ஐமர்ப்யதே - அர்ப்பணம் பண்ணப்படுகிறது. ஆர்யா சதகம் அம்பிகையின் உபாஸகர்களில் பரமசிவன் முதன்மையாகச் சொல்லப்படுவர். இதனால் அவரை ஆதிகுரு, ஆதிநாதரென்று சொல்வது ஸம்ப்ரதாயம். அம்பிகையை ப்ரதிபாதிக்கும் சாஸ்த் ரங்களாகிய தந்த்ரங்கள் பரமசிவனால் தன்னுடைய இரு அம்சங் களான சிவ, சக்தி ரூபங்களில் குரு, சிஷ்ய பாவத்தோடிருந்து, வெளியிடப்பட்டனவாகச் சொல்லப்படுகிறது. குரு சிஷ்ய பதே ஸ்தித்வா ஸ்வயமேவ ஸதாசிவ:। ப்ரச்நோத்தர பதைர் வாக்யை: தந்த்ரம் ஸமவதாரயத் ॥' குருமண்டலத்தைச் சொல்லும்போதும் 'ஸதாசிவஸமாரம் பாம்' என்று சொல்வது வழக்கம். समया सांध्यमयूखः समया बुद्ध्या सदैव शीलितया । उमया काञ्चीरतया न मया लभ्येत किं नु तादात्म्यम् ॥ ஸமயா ஸாந்த்ய-மயூகை: ஸமயா புத்யா ஸதைவ சீலிதயா உமயா காஞ்சீ ரதயா ந மயா லப்யேத கிம் நு தாதாத்ம்யம்!! 45 X ஸாந்த்யமயூகை - ஸர்த்யாகாலத்து (ஸூஈர்ய) கிரணங்களுக்கு மையா - ஸமானமான காந்தியையுடையவளும், மையா புத்யா பேதமில்லாமல் ஸமமான புத்தியுடன், (அதாவது, அவ்விதமான புத்தியுள்ளவர்களால்), ஸதைவ சீலிதயா - ஸதாகாலமும் உபா ஸிக்கப்பட்டவளும், காஞ்சீரதயா - காஞ்சீபுரியில் ப்ரீதியுள்ள வளாயுமிருக்கிற,உமயா- உமாதேவியோடு, தாதாத்மயம் - ஐக்ய பாவனையானது (அல்லது, ஸாயுஜ்யமானது), மயா - என்னால் ந லப்யேத கிம் நு - அடையப்படமுடியாததா? இங்கு சொல்லப்பட்ட ஸம புத்தியைப்பற்றிப் பின்வரும் 50-வது சலோகத்தில் விஸ்தரிக்கப்படுகிறது. जन्तोस्तव पदपूजन-सन्तोषतरङ्गितस्य कामाक्षि । बन्धो यदि भवति पुनः सिन्धोरम्भःसु बम्भ्रमीति शिला ॥ ४५ ॥ ஜந்தோஸ்தவ பதபூஜந்ஸந்தோஷ-தரங்கிதஸ்ய காமாக்ஷி 46 மூகபஞ்சசதீ பந்தோ யதி பவதி புந: ஸிந்தோரம்ப:ஸு பம்ப்ரமீதி சிலா ॥ காமாக்ஷி - ஹே காமாக்ஷி தேவியே! தவ பத பூஜந் பாதங்களைப் பூஜிப்பதினால் ஏற்படும், ஸந்தோஷ தரங்கிதஸ்யஸந்தோஷம் நிறைந்த, ஜந்தோ:-ப்ராணிக்கு (மனுஷ்யனுக்கு), பந்த:- ஜன்ம (அல்லது கர்ம) ஸம்பந்தமானது, புந: பவதி யதிதிரும்பவும் ஏற்படுமென்றால் (அது) ஸிந்தோ: அம்ப: ஹு ஜலத்தில், சிலா - கற்பாறையானது, பம்ப்ரமீதி - சுழலும் (என்று சொல்வது மாதிரி ஆகும்). அதாவது, ஜலத்தில் கற்பாறையானது மிதக்கிறது என்று சொன்னால் எவ்வளவு அஸம்பாவிதமாயிருக்குமோ, அதேமாதிரி அம்பிகையின் உபாஸனையிலீடுபட்டவனுக்கு புனர்ஜன்மம் உண்டு என்று சொல்வது ஆகும் என்று தாத்பர்யம். कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे । गुणिनि गुहारणि गुझे गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥ குண்டலி குமாரி குடிலே சண்டி சராசர ஸவித்ரி சாமுண்டே । குணிநி குஹாரணி குஹ்யே குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 11 ✔ குண்டலி - குண்டலங்களை (அதாவது, தாடங்கங்களை) உடை யவளும்,குமாரி - பால்யமான வயதுடையவளும் (அல்லது பாலா ரூபிணியாயிருப்பவளும்),குடிலே - குண்டலினீஸ்வரூபமாயிருப் பவளும்,சண்டி - சண்டிரூபிணியாயிருப்பவளும், (அல்லது மங் களத்தைச் செய்பவளும்), சராசரஸவித்ரி - ஜங்கம ஸ்தாவரத்மக மான ஸகல ஜகத்தையும் ஸ்ருஷ்டித்தவளும், சாமுண்டே -சாமுண் டாரூபிணியாயிருப்பவளும், குணிநி - த்ரிகுணங்களோடிருப்பவ ளும், குஹாரணி (மனதிலிருக்கும்) அந்தகாரத்தைப் போக்கடிப் பவளும், குஹ்யே - ரஹஸ்யமான ஸ்வரூபத்தோடிருப்பவளும், குருமூர்த்தே - குரு ஸ்வரூபியாயிருப்பவளுமான, காமாக்ஷி ஹே காமாக்ஷியே! த்வாம் நமாமி - உன்னை நமஸ்கரிக்கிறேன். 5 ஆர்யா சதகம் இந்த சலோகத்தில் அம்பிகையானவள் பலவிதமான நாமங் களால் சொல்லப்பட்டிருக்கிறாள். அம்பிகையின் ரூபமான குண் டலினீ சக்தியானவள் "புஜகநிபம் அத்யுஷ்டவலயம் " என்றபடி மூன்றரைச் சுற்றுக்களுடைய ஸர்ப்பாகாரமாக சுருண்டிருப்பதால் குடிலையென்று பெயர் ஏற்பட்டது. பக்தர்களுக்கு விரோதிகளா யிருப்பவர்களிடத்தில் அம்பிகை கோபத்தோடிருப்பதால் சண்டீ என்று பெயர். (தேவீ மாஹாத்ம்யத்தின் மூன்றாவது பாகமான உத்தர சரித்ரத்தில் ப்ரதிபாதிக்கப்படும் அம்பிகையின் முக்யமான ரூபத்திற்கு சண்டி என்று பெயர். இதிலிருந்து தேவீ மாஹாத் மயத்திற்கே சண்டி என்ற பெயரும் உண்டு). அம்பிகையின் ரூபமான காளிகாதேவியானவள் சண்டன், முண்டன் என்ற இரு அஸுரர்களை ஸம்ஹாரம் செய்ததினால் அவளுக்குச் சாமுண்டா என்று பெயர் ஏற்பட்டது. 47 'யஸ்மாத் சண்டம் ச முண்டம் ச க்ருஹீத்வா த்வம் உபாகதா சாமுண்டேதி ததோ லோகே க்யாதா தேவி பவிஷ்யஸி ! । * . (துர்காதேவியின் மந்த்ரமான நவார்ண மந்த்ரத்தில் சாமுண் டாதேவியைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது). மூலப்ரக்ருதி ரூபமாய் அம்பிகை இருக்கும்போது ஸத்வ, ரஜஸ், தமோகுணங் களாகிய மூன்று குணங்களும் ஸமமான நிலையோடு அவளிடத் திலிருப்பனவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஸத்வம் ரஜஸ் தம் இதி குணத்ரயமுதாஹ்ருதம் । ஸாம்யாவஸ்திதிரேதேஷாம் அவ்யக்திம் ப்ரக்ருதிம் விது: /I' இந்தக் குணங்கள் மனித்தனியாக மேலிட்டிருக்கும்போது வாமா, ஜ்யேஷ்டா, ரௌத்ரீ என்ற சக்தி ரூபங்களும்,ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரர்களும் அம்பிகையிடமிருந்து ஏற்படுவதாகச் சொல்லப்படும். ஆகவே அம்பிகையை இங்கு குணிநி என்று சொல்லப்பட்டது. கு என்ற அக்ஷரமானது மனதிலிருக்கும் அந்தகாரத்தைக் (இருட்டை, அக்ஞானத்தை)குறிக்கும். அம் பிகை அவ்விதமான இருட்டைப் போக்குவதால் கு-ஹாரிணி என்ற இங்கு சொல்லப்பட்டது. அம்பிகை குருமூர்த்தியாயிருப் பது ஸ்ரீ லலிதாஸஹஸ்ரநாமத்திலும் "குருமூர்த்தி:", "குருமண் டலரூபிணீ", "தக்ஷிணாமூர்த்திரூபிணீ" என்ற நாமங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. + + 48 மூகபஞ்சசதீ अभिदाकृति र्मिंदाकृति-रचिदाकृतिरपि चिदाकृतिर्मातः । अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥४७॥ அபிதாக்ருதிர் பிதாக்ருதிரசிதாக்ருதிரபி சிதாக்ருதிர் மாத:1 அநஹந்தா த்வமஹந்தா ப்ரமயஸி காமாக்ஷி சாச்வதி விச்வம் ॥ மாத: காமாக்ஷி - ஜகன்மாதாவான ஹே காமாக்ஷி! சாச்வதீ த்வம் - அழிவில்லாத ஸ்வரூபத்தையுடைய நீ, அபிதாக்ருதி: பேதமில்லாத ரூபத்தோடும், பிதாக்ருதி:- பேதங்களான ரூபங் களோடும், அசிதாக்ருதிரபி - சித்ரூபமாயில்லாமலும், சிதாக்குதி:சித்ஸ்வரூபிணியாயும்,அநஹந்தா - அஹங்காரமில்லாதவளாயும், அஹந்தா - அஹங்காரஸ்வரூபிணியாயும் இருந்துகொண்டு, விச் வம் - ஜகத்தை,ப்ரமயஸி - சுழற்றிக்கொண்டிருக்கிறாய். இதிலும் இதற்கு முந்திய சலோகங்களிலும் சொல்லப்பட்ட படி அம்பிகையானவள் பலவிதமான குணங்களுடனும் பலவித மான ரூபங்களுடனும் இருப்பதாகத்தோன்றிய போதிலும், பரமார்த்தத்தில் ஒருவளாகவே இருந்துக்கொண்டு வருவதை ஒரு நடிகையானவள் பல வேஷங்களைத் தரித்து நடிப்பதற்கு ஒப்பிட்டு "அம்பாஸ் தவ'த்தில் வர்ணித்திருக்கிறது. 'தாக்ஷாயணீதி குடிலேதி குஹாரிணீதி காத்யாயநீதி கமலேதி கலாவதீதி] ஏகா ஸ்தீ பகவதீ பரமார்த்ததோzயி ஸந்த்ருச்யஸே பஹுவிதா நநு நர்த்தகீவ //' शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिताः पुरुषाः । विपिनं भवनममित्र मित्र लोष्ट च युवतिबिम्बोष्ठम् ॥ ४८ ॥ சிவ சிவ பச்யந்தி ஸமம் ஸ்ரீ காமாக்ஷி - கடாக்ஷிதா: புருஷா: விபி நம் பவ நம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம் ॥ ஆர்யா சதகம் 49 ஸ்ரீ காமாக்ஷி கடாக்ஷிகா: புருஷா: ஸ்ரீ காமாக்ஷியால் கடா க்ஷிக்கப்பட்டவர்கள், விபிநம் - காட்டை, பவநம்- வீடாகவும், அமித்ரம் - சத்ருவை, மித்ரம் - ஸ்நேஹிதனாகவும், யுவதி பிம் போஷ்டம் ச - யுவதிகளுடைய கோவைக்கனிபோன்ற அதரத்தை யும்,லோஷ்டம் - ஒட்டாஞ்சல்லிபோலும், ஸமம் பச்யந்தி - ஸம மாகப் பார்க்கிறார்கள். சிவ சிவ - அஹோ ஆச்சர்யம்! அதாவது, ஸ்ரீ காமாக்ஷியின் கடாக்ஷம் பக்தன் மீது பட்ட வுடன் அவனுக்கு ஸமத்ருஷ்டி ஏற்பட்டு, வீடு, காடு என்றாவது, மித்ரன், சத்ரு, என்றாவது, பேதமான பாவமில்லா தவனாக ஆகிவிடுகிறானென்று சொல்லப்பட்டது. அவனுக்கு ப்ரியம், அப்ரியம் என்ற இரண்டு சித்த வருத்திகளும் இல்லாமல் போய் விடுவதால் அவன் யுவதிகளுடைய பிம்பபலம்போன்ற அதரத் தைக்கூட ஒட்டாஞ்சல்லிக்கு ஸமானமாக மதிப்பானென்று சொல்லப்பட்டது. कामपरिपन्थिकामिनि कामेश्वरि कामपीठमध्यगते । कामदुधा भव कमले कामकले कामकोटि कामाक्षि ॥ ४९ ॥ காம பரிபந்த்தி காமிநி காமேச்வரி காம்பீட மத்யகதே காம துகா பவ கமலே காமகலே காமகோடி காமாக்ஷி ।! காம பரிபந்த்தி காமிநி - மன்மதனுக்குச் சத்ருவான பரம சிவனுடைய நாயகியாயும், காமேச்வரி - காமேச்வரி (லலிதாம்பிகா) ஸ்வரூபிணியாயும், காமபீட மத்யகதே- காமராஜ பீடத்தின் மத்தியிலிருப்பவளாயும்,கமலே-லக்ஷ்மீ ஸ்வரூபிணியாயும், காம காமகோடி - காமகோடி கலே ஸ்வரூபிணியாயும், யென்ற பெயருள்ளவளாயுமிருக்கும், காமாக்ஷி - ஹே காமாக்ஷி தேவியே! காமதுகா பவ -(என்னுடைய) விருப்பங்களைக்கொடுப் பவளாய் ஆகுவாயாக. . காமகலா 1. அம்பிகை சிதக்னி குண்டத்திலிருந்து லலிதா தேவியாக ஆவிர்பவித்த பிறகு தேவர்கள் அவளை விவாஹம் செய்ய -7 மூகபஞ்சசதீ அவளுக்கு எவ்வகையிலும் தகுந்தவரான புருஷன் கிடைக்க வேண்டுமே என்ற கவலையோடிருக்கும்போது பரமேச்வரன் காமேச்வரரூபமாக, 50 'கோடி கந்தர்ப்ப லாவண்ய யுக்தோ திவ்ய சரீரவாந் । திவ்யாம்பரதர: ஸ்ரக்வீ திவ்யகந்தாநுலேபா: // கிரீடஹாரகேயூர குண்டலாத்யைரலங்க்ருத: । ப்ராதுர்பபூவ புருஷோ ஜகந்மோஹந ரூபத்ருக் !!' என்றபடி அங்கு வந்ததாகவும், பிறகு இருவருக்கும் விவாஹ மான வருத்தாந்தமும் லலிதோபாக்யானத்தில் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. காமேச்வரரைப் பதியாக அடைந்த தினால் லலிதாம்பிகைக்குக் காமேச்வரீ என்று பெயர் ஏற்பட்டது. 2. கமலா என்ற பதத்தினால் மஹாவிஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மீ ரூபமாக அம்பிகையிருப்பது சொல்லப்பட்டது. இது தவிர, லக்ஷ்மீ என்ற பெயரே அம்பிகைக்கு உண்டென்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 'தஸ்யாங்க மண்டலாரூடா சக்திர் மாஹேச்வரீ பரா। மஹாலக்ஷ்மீரிதி க்யாதா ச்யாமா ஸர்வமநோஹரா II' "ச்ரியம் லக்ஷ்மீம் அம்பிகாம் ஔபலாங்காம் । ' 3. பரப்ரம்ஹஸ்வரூபிணியான அம்பிகையானவள் சிவ சக்தி ஸாமரஸ்யரூபிணியானதாலும், அவ்வித ரூபத்தில் காமேச் வரரான சிவனானவர் ஒரு கோடியாக (ஏகதேசமாக) இருப்ப தாலும் அம்பிகைக்குக் காமகோடியென்று பெயர் ஏற்பட்டது. (காமனென்ற பதமானது காமேச்வரரைக் குறிக்கும்). (விஷ்ணுபுராணம்) 4. காஞ்சீபுரியிலிருக்கும் பிலத்திற்கே காமகோடியென்று பெயர். அது ஸர்வதீர்த்தத்திற்கு மூன்று அம்சம் ஈசான்ய பாகத்தில் ஸ்ரீ காமாக்ஷியின் ஆலயத்திற்குள்ளிருக்கிறது. அதற் குப் பலவிதமான பெயர்களுண்டு. ... 'ஜகத் காமகலாகாரம் பூமே: குண்டலீநீ பதம் । ... (ஆயுஷ்யஸ நிக்தம்) ... ... தத் காமநகரம் திவ்யம் அகக்கம் ஸர்வஸித்திதம்। ஆர்யா சதகம் 51 தப:ஸ்தாநம் பிலம் ஸூக்ஷ்மபரமம் வ்யோம தத் ஸ்ம்ருதம் / ஆதிபௌதிக மர்மாங்கம் நாபிஸ்தாநம் புவ: பரம் । ததேவ ப்ரம்ஹண : சம்போ: சரீரமிதி கத்யதே ॥ லோகாநாம் வ்யங்க்ய சப்தத்வாத் நாபிரித்யபி ஸஜ்ஞிதம் । ஸ்ரீபுரஸ்ய த்ரிமூர்த்தீநாம் ஈச்வராணாம் திசாமபி ॥ லோகாநாம் மேருசைலஸ்ய கோருபாயாவநேரபி । நவத்வாரஸ்ய மார்க்கம் தம் பூயோநிஸ் தந் மஹாபிலம் ।!' 5. காமகோஷ்டம் (காமகோட்டம்) என்பது மேலேசொல் லிய காமகோடியென்ற பில மடங்கிய பெரிய ப்ரதேசத்திற்குப் பெயர். இது ருத்ரசாலைக்கும் விஷ்ணுசாலைக்கும் நடுவிலுள்ளது. பெரிய நான்கெல்லையையுடையது. இதற்கு பஞ்சபாண நிகேதனம் என்றும் பெயர் உண்டு. து காஞ்சியின் மத்ய ப்ரதேசம். ஸ்ரீ காமாக்ஷியின் ஆலயம் அடங்கியது. இங்கு எவர்கள் தங்கள் இஷ்ட தேவதையின் மந்த்ரத்தை ஜபிக்கிறார்களோ அதற்குக் கோடிமடங்கான பலனை அடைவார்களென்றும், காமங்களை விரும்புவோர்கள் இவற்றைக் கோடிக்கணக்காக அடைவார் களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஏதத் சதுர்திங்மத்யஸ்த்தம் பஞ்சபாண நிகேதநம் । தஸ்மாத் தத் காமகோஷ்டாக்யம் காஞ்ச்யாம் மத்யமபூதலம் யோ ஜபேத் காமகோஷ்டோஸ்மிந் மந்த்ரமிஷ்டார்த்ததை கோடிவர்ணபலம் ப்ராப்ய முத்திலோகம் ச கச்சதி II [வதம் காமாநாம் வர்ணதாத்பர்யாத் தத்கோடி குணஸங்க்யயா । காமகோடீதி விக்யாதம் காமகோஷ்டதராதலம் !!' 6. மேலே சொல்லிய பில ப்ரதேசத்திற்குக் காமகோடி யென்று பெயர் வந்ததற்கு அனேகம் காரணங்கள் சொல்லப்பட் டிருக்கின்றன. காமம் என்ற பதமானது பொதுவாக விருப்பத் தைக் (அதாவது, புருஷார்த்தத்தை) குறிக்கும். ஜனங்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் தர்ம, அர்த்த,காம, மோக்ஷங் களென்கிற நான்கு வகைப்பட்டனவாகச் சொல்லப்படும். இந்த வரிசையில் காமத்திற்கு அடுத்தாற்போல் (அடுத்த கோடியாக) மோக்ஷம் வருவதாலும், மோக்ஷமே (காமங்களுக்குள்) மற்ற புரு ஷார்த்தங்களைவிட உத்க்ருஷ்டமானதாலும் (பரமகோடியாயிருப் பதாலும்) காமகோடி என்ற பதமே மோக்ஷத்தையும் குறிக்கும் மூகபஞ்சசதீ 1 ஆகவே இந்தக்காமகோடி க்ஷேத்திரத்தில் ஒருவன் மேலேசொல் லிய காமங்களில் ஏதாவது ஒன்றையுத்தேசித்து உபாஸித்தாலும் அவனுக்கு அந்தக்காமமானது கோடிமடங்காகக் கிடைப்பதுடன் மற்ற புருஷார்த்தங்களும் கிடைத்து, கடைசியாக (காமகோடி (யாகிய)ரோக்ஷமும் (அவன் உத்தேசிக்கவிட்டாலும்) அவனுக்குக் கிடைக்கப்பெறுமென்று சொல்லப்படுவதால் அந்த க்ஷேத்திரத் திற்குக் 'காமகோடி' என்று பெயர் ஏற்பட்டது. 52 * 1 'யத்ர காமக்குதோ தர்மோ ஜந்துநா யேந கேந வா । ஸக்ருத்வாபி ஸுதர்மணாம் பலம் பலதி கோடிச: தேநேதம் காமகோடீதி பிஃத்வாரம் ப்ரஸித்திமத் ॥ அத காமஸ் த்ருதீயார்த்த: புருஷார்த்தேஷு விச்ருத: । தத் பரஸ்தாத் ச்ருதோ மோக்ஷ: கோடி சப்தேந சப்தித: // காமகோடி ச்ருதோ மோக்ஷ: புருஷார்த்த, சதுர்த்தக: அர்த்தோZதவா ச்ருத: காம: காமேசோ தநத : ஸ்ம்ருத: । தத்கோடிதா பீடசக்தி: காமகோடீதீ விச்ருதா I 7. அம்பிகையே அந்தக் காமகோடியெனப்படும் பிலாகாச ஸ்வரூபிணியாயிருப்பதால் அந்தப்பெயரே அம்பிகைக்கும் ஏற் பட்டதென்று சொல்லப்படும். 8. அம்பிகையின் ரூபங்கள் ஸ்தூல, ஸூக்ஷ்ம,பரரூபங்க ளென்ற மூன்றில் ஸ்தூலமென்பது கரசரணாதி அவயங்களையுடை யது. ஸூக்ஷ்மமென்பது மந்த்ரமயமானது. பரமென்பது வாஸனா மயமானது. திருமபவும் ஸூக்ஷ்மரூபமானது ஸூக்ஷ்ம, ஸூக்ஷ்மதர, ஸமதமமென்பதாக மூன்று பிரிவையுடை யது. ஸூக்ஷ்மமென்பது பஞ்சதசீ வித்யாரூபமானது. ஸ்ருக்ஷ் மதரமென்பது காமகலாக்ஷரரூபமானது. ஸ-'ூக்ஷ்மதமமென்பது குண்டலீனீ ரூபம். 9. இந்தக் காமகலையானது மிகவும் ரஹஸ்யமானதால் அ னுடைய விபரங்களைக் குருமுகமாகவே அறிந்துகொள்ளவேண்டி பது. ஆயினும் அவைகளைக் காமகலாவிலாஸம், என்ற க்ரந்தத்தி லும் பாஸ்கரராயர், ஆர்தர் ஏவலன் முதலான பெரியோர்கள் எழுதிய க்ரந்தங்களிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்ஆர்யா சதகம் அம்பிகையின் காமகலா ஸ்வரூபமானது மூன்று பிந்துக்களும் ஹகாரார்த்தமும் சேர்ந்ததாகவும், அவையிருக்குமிடம், 'அக்ர பிந்து பரிகல்பிதாநநாம் அந்ய பிந்து ரசித ஸ்தநத்வயீம் । நாதபிந்து ரசநா குணாஸ்பதாம் + என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீமதாசார்யாளும் 'ஸௌந் தர்யலஹரி'யில் 'முகம் பிந்தும் க்ருத்வா குசயுகம் அதஸ்தஸ்ய தததோ ஹரார்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மத கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நௌமி தே பரசிவே பராம் கலாம் II• मध्ये हृदयं मध्ये निटिलं मध्ये शिरोऽपि वास्तव्याम् । चण्डकर चक्रकार्मुक चन्द्रसमामां नमामि कामाक्षीम् ॥ २० ॥ மத்யே ஹ்ருதயம் மத்யே நிடிலம் மத்யே சிரோzபி வாஸ்தவ்யாம் । சண்ட-கர-சக்ர-கார்முக68 சந்த்ர-ஸமாபாம் நமாமி காமம் ॥ ✔ 1 । மத்யே ஹ்ருதயம் - ஹ்ருதயத்தின் மத்தியிலும், மத்யே நிடிலம் - நெற்றியின் நடுவிலும், மத்யே சிரோறபி - சிரஸின் நடு விலும், (முறையே) சண்டகா- ஸூர்யன், சக்ர கார்முக இந்த்ரதனுஸ், சந்த்ர - சந்த்ரன் (இவர்களுக்கு), ஸமாபாம் ஸமமான காந்தியுடையவளாய், வாஸ்தவ்யாம் - இருப்பவளான, காமாrக்ஷிம் காமாக்ஷியை, நமாமி - நமஸ்கரிக்கிறேன். அம்பிகையானவள் பக்தனுடைய சரீரத்தில், சிரஸில் சந்த் ரன் போலவும், நெற்றியில் இந்த்ர தனுஸ் மாதிரியும், ஹ்யதயத் தில் ஸூர்யன் போலவும், காந்தியோடிருப்பவளாக சொல்லப் பட்டிருக்கிறது. இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில், 'சிரஸ்த்திதா சந்த்ரநிபா பாலஸ்த்தா இந்த்ர தநுஷ்ப்ரபா । ஹருதயஸ்த்தா ரவிப்ரக்யா 1" என்று சொல்லியிருக்கிறது. 'லகுஸ்துதியில் பின்வருமாறும் சொல்லப்பட்டிருக்கிறது:+ 1 மூகபஞ்சசதீ ஐந்த்ரஸ்யேவ சராஸநஸ்ய தததீ மத்யே லலாடம் ப்ரபாம் சௌக்லீம் காந்திம் அனுஷ்ணகோரிவ சிரஸ்யாதவந்தீ ஸர்வத: ! ஏஷாzஸௌ த்ரிபுரா ஹ்ருதி த்யுதிரிவோஷ்ணாம்சோ: ஸதாzஹஸ்த்திதா சிந்த்யான் ந: ஸஹஸா பதைஸ் த்ரிபிரகம் ஜ்யோதிர்மயம் வாங்மயம் अधिकाचि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमन्त्रमयैः । अतिशीतं मम मानस-मसमशरद्रोहिजीवनोपायैः ॥ ५१ ॥ அதிகாஞ்சி கேளி லோலை: அகிலாகம - யந்த்ர-தந்த்ர-மந்த்ர-மயை: அதிசீதம் மம மாநஸம் அஸம-சர-த்ரோஹி-ஜீவநோபாயை: II அதிகாஞ்சி - காஞ்சீபுரியில், கேளிலோலை:- விளையாடுவதில் மிகவும் ப்ரியமுள்ளதாயும், அகில ஆகமயந்த்ர தந்த்ரமந்த்ரமயை:எல்லா வேதங்களாயும், யந்த்ரங்களாயும், தந்த்ரங்களாயும்,மந்த் ரங்களாயுமிருப்பதும், அஸமசர - மன்மதனுடைய, த்ரோஹிசத்ருவான பரமசிவனுடைய ஜீவநோபாயை:- ப்ராணனுக்கு ஆதாரமாயிருப்பதாயுமிருக்கிற ஒரு மூர்த்தியினால், மம மாநஸம்என்னுடைய மனதானது, அதி சீதம் - மிகவும் குளிர்ந்திருக்கிறது. 'விஷமசர' என்ற பாடாந்தரத்திலும் மன்மதன் என்றுதான் அர்த்தம். नन्द्रति मम हृदि काचन मन्दिरयन्ती निरन्तरं काञ्चीम् । इन्दुर विमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी ॥ ५२ ॥ நந்ததி மம ஹ்ரு,தி காசந மந்திரயந்தீ நிரந்தரம் காஞ்சீம் । இந்து-ரவி - மண்டல-குசா பிந்துவியந் நாத பரிணதா தருணீ !! காஞ்சீம் - காஞ்சீபுரியை, நிரந்தரம் - எப்பொழுதும், மந்திர யந்தீ - வாஸஸ்தானமாக உடையவளும், ந்து ரவி மண்டல ஆர்யா சதகம் குசா - சந்த்ர ஸூர்ய மண்டலங்களை ஸ்தனங்களாக உடைய வளும், பிந்துவியந் நாத பரிணதா - பிந்து, (வியத்) ஆகாசம், கோதம் இம்மூன்று விதமான வேறு ரூபங்களையுடையவளுமான, காசா தருணீ - ஒரு யௌவன ஸ்திரீயானவள், மம ஹ்ருதி என்னுடைய மனதில், நந்ததி - ஆனந்தத்தோடிருக்கிறாள். 1. சந்த்ர ஸூபிரியர்கள் அம்பிகையினுடைய ஸ்தனங்களா கவும் நேத்ரங்களாகவும் (காதிலணிந்த) தாடங்கங்களாகவுமிருப் யதாகச் சொல்லப்படுவார்கள். ஸூர்ய சந்த்ரௌ ஸ்தநெள தேவ்யா: தாவேவ நயநே [ஸ்ம்ருதௌ । உபௌ தாடங்கயுகளம் இத்யேஷா வைதிகீ ச்ருதி: //' 35 2. வ்யோம,பிந்து, நாத இவை நாதப்ரம்ஹ வித்யை யில் சொல்லப்படும் பதங்கள். பரமசிவன் சுக்லபிந்து ரூபமாகவும் சக்தியானவள் சோணபிந்து ரூபமாகவுமிருப்பதாகவும், அவர்கள் பரஸ்பரம் ப்ரவேசிப்பதால் மிச்சபிந்துவானது உண்டாகி அந்த பிந்துவிலிருந்து வ்யோமமும் நாதமும் ஏற்பட்டு அவற்றிலிருந்து ஸகல ஜகத்தும் உண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதின் விபரங்களை 'காமகலாவிலாஸம், 'சாரதாதிலகம்' முதலிய க்ரந் தங்களில் பார்க்கவும். இம்மூன்றும் அம்பிகையின் பரிணாமங் களென்று சொல்லப்பட்டிருக்கிறது. 'வ்யோமேதி பிந்துரிதி நாத இதீந்துலேகாரூபேதி வாக்பவதநூரிதி மாத்ருகேதி । நி:ஸ்யந்தமாந ஸுகபோத ஸுதாஸ்வரூபா வித்யோதஸே மநஸி பாக்யவதாம் ஜநாநாம் II" (அம்பாஸ்தவம்) शम्पालतासवर्ण सम्पादयितुं भवज्वरचिकित्साम् । लिम्पामि मनसि किञ्चन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥ ५३ ॥ சம்பா-லதா-ஸவர்ணம் ஸம்பாதயிதும் பவஜ்வர-சிகித்ஸாம் । லிம்பாமி - மநஸி கிஞ்சந கம்பாதட - ரோஹி ஸித்த-பைஷஜ்யம் ॥ 1 ( மூகபஞ்சசதீ பவஜ்வர சிகித்ஸாம் -ஸம்ஸாரமாகிற ஜ்வரத்திற்குச் சிகித்ஸை யை, ஸம்பாதயிதும் -அடைவதற்கரக, சம்பா-லதா-ஸவர்ணம் மின்னல்கொடிபோன்ற நிறமுள்ளதும், கம்பா-தட-ரோஹி ஸித்த கம்பா நதிக்கரையில் முளைத்ததுமான, கிஞ்சந - ஒரு பைஷஜ்யம் - ஸித்தௌஷதத்தை, மனஸி - மனதில், (மனதால்) லிம்பாமி - பூசிக்கொள்ளுகிறேன் (சிந்திக்கின்றேன்). 56 1. ஸம்ஸாரமாகிற ஜ்வரத்தைப்போக்கும் ஸித்தௌஷத் மாக அம்பிகை இங்குவர்ணிக்கப்பட்டாள். அந்த ஸித்தௌஷதம் ခ மின்னல்கொடி போன்ற ரூபத்தையுடையது. அது (கொடியென்ற உபமானத்தை மேலும் அனுஸரித்து) கம்பாநதிக்கரையில் படர்ந் ப்பேற்பட்ட ஒளஷதத்தை (ஸாதாரணமான ஜ்வரங்களைப் போக்குவதற்கு ஒளஷதங்களை மேலே பூசுவதுமாதிரி) கான் மனதால் பூசிக்கொண்டதாக கவி இங்கு வர்ணிப்பதினால், தான் அந்த ஒளஷதத்திற்கு உபமிக்கப்பட்ட அம்பிகையை மனதால் எப்போதும் த்யானம் செய்வதாகச் சொல்லப்பட்டது. தது. 2. சம்பா என்றால் மின்னல். மின்னலாவது கொடிபோல் தோன்றுவதால் அது லதையாகச் சொல்லப்பட்டது. अनुमितकुचकाठिन्या-मधिवक्ष:पीठमङ्गजन्मरिपोः । आनन्ददां भजे ता मानङ्गब्रह्मतत्त्वबोधिसिराम् ॥ ५४ ॥ அநுமித குச காடிந்யாம் அதிவக்ஷ: பீடம் அங்கஜந்மரிபோ: । ஆநந்ததாம் பஜே தாம் ஆநங்க - ப்ரும்ஹ-தத்வ-போதி-ஸிராம் ॥ அநுமித குச காடிந்யாம் - ஊஹித்தறியவேண்டிய காடின் யத்தையுடைய (உறுதியுயையுடைய) ஸ்தனங்களையுடையவளும், அங்க ஜன்ம ரிபோ: மன்மதனுடைய சத்ருவான பரமசிவ னுடைய, அதி வக்ஷ: பீடம் - மனதில் (மனத்திற்கு), தாம் - ஆனந்தத்தைக் கொடுப்பவளும், ஆநங்க ப்ரம்ஹதத்வகாம சாஸ்திரத்தை, போதி ஸிராம் -போதிக்கும் நாடியாயுமுள்ள, தாம் - அந்த ஸ்ரீகாமாக்ஷியை, பஜே - பஜிக்கிறேன். ஆனந்த ஆர்யா சதகம் அங்கமென்றால் மனது என்றர்த்தம். காமமானது மன் லிருந்து உண்டாவதால் மன்மதனை மனதிலிருந்து பிறந்தவனாக அங்கஜனென்றும் மநஸிஜனென்றும் சொல்வது வழக்கம். ARNG 57 । அங்க ஜன்ம ரிபோ:- மந்மத சத்ருவான பரமசிவனுடைய, அதி வக்ஷ: பீடம் - மார்பாகும் பீடத்தின்கண், அநுமித குச் காடிந்யாம் - ஊஹித்து அறியக்கூடிய ஸ்தாங்களின் காடின்யத்தை யுடையதும், ஆனந்தத்தைத் தருவதான சருங்காரப்ரம்மத்துவத் தைத் தெரிவிக்கும் நாடியான அந்த காமாக்ஷியை நான் பஜிக்கின் றேன். அம்பாளுடைய குச காடிந்யம் பரமசிவனின் மார்பினால் தான் அறியக்கூடியது என்பது பொருள்.] ஸெ ऐक्षिषि पाशाङ्कुशधर-इस्तान्तं विस्मयार्हवृत्तान्तम् । अधिकाञ्चि निगमवाचां सिद्धान्तं शूलपाणिशुद्धान्तम् ॥ ५५ ॥ ஐக்ஷிக்ஷி பாசாங்குசதர ஹஸ்தாந்தம் விஸ்மயார்ஹ வ்ருதாந்தம் அதிகாஞ்சி நிகமவாசாம் ஸித்தாந்தம் சூலபாணி சுத்தாந்தம் ।! பாசாங்குசதர ஹஸ்தாந்தம் - பாசம், அங்குசம் இவற்றைக் கைகளிலுடையவளும், விஸ்மயார்ஹ வ்ருத்தாந்தம் - ஆச்சர்யப் படத்தக்க சரித்திரத்தையுடையவளும், நிகமவாசாம் - வேத வாக்யங்களுக்கு (அதாவது வேதங்களுக்கு), ஸித்தாந்தம் - முடி வான தாத்பர்யமாயிருப்பவளுமான, சூலபாணி சுத்தாந்தம் பரம சிவனுடைய அந்தப்புரமான ஸ்ரீ காமாக்ஷியை, அதிகாஞ்சிகாஞ்சீபுரியில், ஐக்ஷிக்ஷி - பார்த்தேன். ள "விஸ்மயார்ஹ வ்ருத்தாந்தம் ''- இதேமாதிரி "அத்புத சாரித்ரா' என்று ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு நாமமிருக் கிறது. இதனால் அம்பிகையைப்பற்றிய பண்டாஸர வதம், மஹிஷாஸுர வதம் முதலியவைகள் சொல்லப்பட்டன. துடன் குறிப்பாக ஸ்ரீ காமாக்ஷியால் செய்யப்பட்ட தபஸ், பந்தகாஸு ரவதம், ஸ்வர்ண காமாக்ஷி ப்ராதுர்பாவம் முதலிய (ஸ்ரீகாமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்பட்ட) வருத்தாந்தங்களும் குறிக்கப்பட்டன. - 8 1 1 58 மூகபஞ்சசதீ आहितविलासननी-मा ब्रह्मस्तम्ब शिल्पकल्पनया । आश्रितकाञ्चीमतुला-माद्यां विस्फूर्तिमाद्रिये विद्याम् ॥ ५६ ॥ ஆஹித விலாஸ பங்கீம் ஆப்ரம்ஹ-ஸ்தம்ப சில்ப கல்பநயா ஆச்ரித காஞ்சிம் அதுலாம் ஆத்யாம் விஸ்பூர்த்திம் ஆத்ரியே வித்யாம் ॥ ஆப்ரம்ஹ ஸ்தம்ப - ப்ரம்ஹா முதல் புழு முடிய எல்லா ஜீவன்களையும், சில்ப கல்பநயா ஸ்ருஷ்டிப்பதனால், ஆஹித விலாஸ பங்கீம் செய்யப்பட்ட தன் லீலைகளின் பேதங்களை யுடையவளும், ஆச்ரித காஞ்சீம் - காஞ்சீபுரியை அடைந்தவளும், அதுலாம் - ஒப்பற்றவளும், ஆத்யாம் விஸ்பூர்த்திம் - ப்ரம்ஹத் தின் முதன் முதலான உணர்ச்சியாயிருப்பவளுமான, வித்யாம்வித்யா(ஞான) ரூபிணியை, ஆத்ரியே - ஆச்சயிக்கிறேன். 1. அம்பிகையானவள் ஸகல ஜீவன்களுடைய ஸ்ருஷ்டிக் கும் காரணமாயிருப்பதால் 'ஆப்ரம்ஹகீடஜரி' என்றும், 'ஆப் சம்ஹாதி பிபீலிகாந்த ஜநநீ' என்றும் இங்கு சொல்லப்பட்டது மாதிரி வர்ணிப்பது வழக்கம். ப்ரம்ஹா என்ற பதமானது ஸகல ஜீவன்களுடைய ஸ்தூலசரீரங்களின் ஸமஷ்டி ரூபமான ஹிரண்ய கர்ப்பரைக் குறிக்கும். ஜீவன்களுக்குள் முக்யமான அவரையும், ஜீவன்களில் கடைசியாக இருக்கும் புழு,எறும்பு முதலியவற்றை யும் சொல்லியிருப்பதால் நடுவாக இருக்கும் ஸகல ஜீவன்களும் சேர்த்துச் சொல்லப்பட்டார்கள். ஸ்தம்பமென்பது அதீந்த்ரிய மானதும் (இந்த்ரியங்களுக்குத் தென்படாததும்),வைத்ய சாஸ் த்ரங்களில் ககேருகம், மகேருகம் என்று இரு பெயர்களால் சொல்லப்படுவதுமான புழுப்போன்ற ஜீவ விசேஷம். 2. ப்ரளயகாலத்தின்போது (மறுபடியும் ஜனிக்கவேண்டிய) ஸகல ஜீவன்களையும் தன்னிடம் அடக்கிக்கொண்டு ப்ரம்ஹ மானது ஸ்வாத்மாராமமாய் இருக்கும்போது, அவ்விதமான ஜீவன்களுடைய கர்ம வாஸனையால் திரும்பவும் ஸ்ருஷ்டியுண் டாகவேண்டிய காலம் வந்தவுடன், அப்படி ஸ்ருஷ்டிக்கவேண்டு மென்பதான ஒரு உணர்ச்சியானது ப்ரம்ஹத்தினிடம் உண்டா கிறது. இதுவே ச்ருதியில் 'ஸோங்காமயத' என்பது முதலான ஆர்யா சதகம் வாக்கியங்களினால் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச் யை ஸ்புரணம், ஸ்பூர்த்தி, ஸ்பந்தம் என்று சொல்வது வழக்கம். இது (பாலானது காய்ச்சப்படும்போது) பொங்குவதற்கு முன்னாக இருக்கும் தோற்றத்திற்கு (கொதிப்புக்கு) உபமிக்கப்படும். இந்த ஜீஸ்பூர்த்தியானது மாயையின் (அம்பிகையின்) கார்யமானதால் அதையே அம்பிகையின் ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே ஸ்ருஷ்டிக்கு முதல் முதலாக ஏற்படுவதால் 'ஆத்யாம் விஸ்பூர்த்திம் என்று இங்கு சொல்லப்பட்டது. मूकौऽपि जटिलदुर्गति-शोकोऽपि स्मरति यः क्षणं भवतीम् । एको भवति स जन्तु लोंकोत्तरकीर्ति व कामाक्षि ॥ ५७ ॥ மூகோZபி ஜடில் துர்கதிசோகோஃபி ஸ்மரதி ய: க்ஷணம் பவதீம்। ஏகோ பவதி ஸ ஜந்து: லோகோத்தர கீர்த்திரேவ காமாக்ஷி 11 காமாக்ஷி ஹே காமாக்ஷியே! ய: எவனொருவன், மூகோ Zபி - ஊமையாயிருந்தபோதிலும், ஜடில துர்கதி சோகோzபிமிகவும் சிக்கலான கஷ்டங்களால் துக்கப்படுகிறவனாயிருந்த போதிலும், பவதீம் - உன்னை, க்ஷணம் ஸ்மரதி - ஒரு க்ஷண நேரம் ஸ்மரித்தானேயாகில், ஸஏ கா ஜந்து: ஏவ- அவன் ஒரு வன் மட்டுமே, லோகோத்தர கீர்த்தி:- லோகத்தில் மிகவும் மேன்மையான கீர்த்தியுடையவனாக, பவதி - ஆகிறான். . 59 எந்த ஜந்து உம்மை ஒரு க்ஷணம் நினைக்கின்றதோ, அந்த ஐந்து ஊமையாயினும் அடர்ந்த அக்ஞானத்தால் நேர்ந்த துக்கத் தால் சோகமுற்றதாயினும் உலகத்தில் சிறந்த கீர்த்தியுள்ள ஒப் பற்றதாக ஆகிறது என்றும் பொருள் சொல்லலாம். 99 पञ्चरीय शंभो वञ्चन वैदग्ध्यमूलमवलम्चे ॥ ५८ ॥ பஞ்சதச வர்ண ரூபம் கஞ்சந காஞ்சீ விஹார தௌரேயம் । பஞ்சசரீயம் சம்போ: வஞ்சந வைதக்த்ய மூலம் அவலம்பே ।I X 1 1 மூகபஞ்சசதீ பஞ்ச தசவர்ணரூபம் - பஞ்சதசாக்ஷரீ ரூபமுடையதும், காஞ்சி விஹார தௌரேயம் - காஞ்சீ பட்டணத்தில் விளையாடு வதில் முன்னிற்பதும், சம்போ: வஞ்சந வைதக்த்ய மூலம் - பரம சிவனை வஞ்சிப்பதில் (மோஹிப்பதில்) ஸாமரர்த்தியத்திற்கு மூல மானதும், பஞ்ச சரீயம் - மன்மதனைச் சேர்ந்ததான (காமரூபிணி யான), கஞ்சந-ஒரு மூர்த்தியை, அவலம்பே - சரணமடைகிறேன். பஞ்சதசாக்ஷரீ (ஸ்ரீ) வித்யையானது அம்பிகையின் சரீரமா 60 யிருப்பது, 'ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா । கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ । சக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ ॥ D என்ற 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம'த்திய நாமங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. (பஞ்சசரீயம் - மன்மதனுடையதான, சம்போ : - பரமசிவனை மயக்கும் ஸாமார்த்தியத்துக்குக் காரணமான, கஞ்சா - ஒரு தேவதையை, அவலம்பே சரணம் அடைகிறேன். பரமசிவனை மயக்கும் மன்மத ஸாமார்த்தியத் துக்குக் காரணமான காமாக்ஷியைச் சரணமடைகிறேன் என்றும் பொருள் சொல்லலாம்.] ஸந வஞ்சந வைதக்த்ய மூலம் 5 परिणतवतीं चतुर्था पदवीं सुधियां समेत्य सौषुम्नीम् । पञ्चाशदणकल्पित - पदशिल्पां तां नमामि कामाक्षीम् ॥ ५९ ॥ பரிணதவதீம் சதுர்த்தா பதவீம் ஸுதியாம் ஸமேத்ய ஸௌஷும்நீம் । பஞ்சாசதர்ண கல்பித பதசில்பாம் தாம் நமாமி காமாக்ஷிம் II ம ஸு- தியாம் -ஞானவான்களுடைய, ஸௌஷு எம்நீம் பத வீம்-ஸுஷம்நா மார்க்கத்தை, ஸமேத்ய - அடைந்து, சதுர் தா - நான்கு விதமாக, பரிணதவதீம் - பேதங்களையடைந்திருப் பவளாயும், பஞ்சாசதர்ண கல்பித - ஐம்பது அக்ஷரங்களாலாகிய, பதசில்பாம் - பதங்களின் ரூபமாயிருப்பவளுமான, தாம் காமா க்ஷும் - அந்த காமாக்ஷு தேவியை, நமாமி - நமஸ்கரிக்கிறேன். ஆர்யா சதகம் 1. முந்திய சலோகத்தில் அம்பிகை ஸ்ரீ வித்யாரூபிணியா யிருப்பதைச் சொல்லிவிட்டு, இந்த ச்லோகத்தில் சப்தரூபிணியா யிருப்பதைச் சொல்லுகிறார். சப்தமானது (வாக்கானது) பரா, பச்யந்தீ, மத்யமா, வைகரீ என்று நான்கு வகைப்படும். நாத மானது மூலாதாரத்தில் இருக்கும்போது பரா என்ற பெயரோடி ருக்கும், அங்கிருந்து ஸ ஷுஷம்நா மார்க்கமாக மேலேவருகை யில் ஸ்வாதிஷ்டானத்திற்கு வரும்போது பச்யந்தீ என்றும், அநாஹதத்திற்கு வரும்போது மத்யமா என்றும், அதற்கு மேலாக விசுத்தி ஸ்தானமான கண்டத்தின் மூலமாய் வெளி வரும்போது மத்யமா என்றும் பெயர்கள். 61' 'மூலாதாரே ஸமுத்பந்ந: பராக்யோ நாத ஸம்பவ: ஸ ஏவோர்த்வதயாநீத: ஸ்வாதிஷ்டாநே விஜ்ரும்பித: // பச்யந்த்யாக்யாம் அவாப்நோதி ததைவோர்த்வம் சநை:சநைட:/ அநாஹதே புத்தி தத்வ ஸமேதா மத்யமாபித:// ததா தயோர்த்வ நுந்நஸ் ஸந் விசுத்தெள கண்டதேசத: வைகர்யாக்ய: }/" தையே ஸ்ரீமதாசார்யாளும், 'மூலாதாராத் ப்ரதமமுதிதோ யச்ச பாவ: பராக்ய: பச்சாத் பச்யந்த்யத ஹ்ருதயகோ புத்தியுக் மத்யா மாக்ய: । வ்யக்தே வைகர்யத ருருதிஷோஸ் தஸ்ய ஜந்தோ: [ஸுஷூம்நா பக்தஸ் தஸ்மாத் பவதி பவந ப்ரேரிதா வர்ணஸம்ஞா }!' என்பதாக 'ப்ரபஞ்சஸாரத்தில் சொல்லியிருக்கிறார்கள். 2. இந்த வைகரீ என்ற வாக்கானது நாம் ஸாதாரணமாகப் பேசுவது. இதையே தான் வாக்கென்று தெரியாதவர்கள் சொல் வார்களே தவிர, அறிஞர்கள் வாக்கானது மேலே சொல்லியபடி நான்குவகைப்பட்டதென்றும் அவற்றில் கடைசியானது தான் வைகரீ வாக்கென்றும் சொல்லுவார்கள். 'சத்வாரி வாக் பரிமிதா பதாநி தாநி விதுர் ப்ராஹ்மணா யே மரீஷிண: । குஹா த்ரீணி நிஹிதா நேங்கயந்தி துரீயம் வாசோ மனுஷ்யா வதந்தி !!' மூகபஞ்சசதீ 3. வைகரீ வாக்கானது அ முதல் க்ஷ வரையிலுள்ள ஐம் பறு அக்ஷரங்களாலும் அவற்றின் சேர்க்கைகளான பதங்களா லும் உண்டாவது. அது இங்கு 'பஞ்சாசதர்ண கல்பித பத சில்பாம்' என்று சொல்லப்பட்டது. வர்ணங்கள் அ முதல் க்ஷ வரையில் இருப்பதால் பஞ்சாசத் வர்ணங்களையும் (வைகரீ வாக் கையும்) அக்ஷமாலை என்று சொல்லுவது வழக்கம். #. 62 'பரா பூஜந்ம பச்யந்தீ வல்லீ குச்சஸமுத்பவா 1 மத்யமா ஸௌரபா வைகர்யக்ஷமாலா ஜயத்யஸௌ ॥" 4. இந்த நாலுவிதமான வாக்குகளும் அம்பிகையின் களென்பதாக, 'பரா ப்ரத்யக்சிதீ ரூபா பச்யந்தீ பரதேவதா । மத்யமா வைகரீ ரூபா //'º என்பதாக 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்ட தைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ள விருப்பமுள்ள வர்கள் பாஸ்கரராயருடைய ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் காம கலாவிலாஸம், சாரதா திலகம், ஆர்தர் ஏவலனுடைய கார் தங்கள் முதலியவற்றைப் பார்க்கவும். 1 ... आदिक्षन्मम गुरुराडा दिक्षान्ताक्षरात्मिकां विद्याम् । स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् ॥ ६० ॥ ஆதிக்ஷத் மம குருராட் ஆதி க்ஷாந்தாக்ஷராத்மிகாம் வித்யாம் 1 ஸ்வாதிஷ்ட சாபதண்டாம் நேதிஷ்டாமேவ காமபீடகதாம் ॥ மம குருராட் என்னுடைய குருநாதனானவர், ஸ்வாதிஷ்ட மிகவும் இனிப்பான, சாபதண்டாம் - (கரும்பு) வில்லையுடைய வளும், காமபீடகதாம் - காமகோடிபீடத்திலிருப்பவளும், ஆதிஇப்பாஷ்யத்திற்கு தமிழில் அர்த்த வ்யாக்யானங்களுடன் கூடிய மொழி பெயர்ப்பு ஸ்ரீமான் G. V. கணேசய்யரால் எழுதப் பட்டு, ஸ்ரீ ஜனார்த்தனா அச்சுக்கூடத்தாரால் பிரசுரிக்கப்பட்டிருக் கிறது. சுமார் 1000 பக்கங்கள் கொண்ட விலை 1000 ஆர்யா சதகம் அ முதலாக, க்ஷாந்த -கூ முடிவாகவுள்ள, அக்ஷராத்மிகாம் அக்ஷங்களின் ஸ்வரூபமாயுள்ள,வித்யாம் - வித்யாரூபிணியு மான ஸ்ரீ காமாக்ஷியை, நேதிஷ்டாம் ஏவ - மிகவும் ஸமீபத்து திலிருப்பவளாகவே, ஆதிக்ஷத் - காட்டினார் (உபதேசித்தார்). அதாவது, தன் குருநாதருடைய அனுக்ரஹத்தினால் வித்யா ரூபிணியான ஸ்ரீ காமாக்ஷியின் தர்சனம் தனக்குக்கிடைத்ததா கச் சொல்லுகிறார். தனசி கணககரின் தா72 । स्वासनया लकलजग-द्वासनया कलितशम्बरासनया ॥ ६१ ॥ துஷ்யாமி ஹர்ஷிதஸ்மர63 சாஸநயா காஞ்சிபுரி(ர) க்ருதாஸ்நயா ) ஸ்வாஸநயா ஸகல ஜகத் பாஸநயா கலித சம்பராஸநயா ॥ ஹர்ஷிதஸ்மரசாஸநயா-ஸ்மரனை (மன்மதனை)த்தண்டித்தவ ரான பரமசிவனை ஸந்தோஷப்படுத்தியவளும், காஞ்சியுரி - காஞ்சீ புரியில், க்ருதாஸநயா - வாஸஸ்தானத்தையுடையவளும், ஸ்வா ஸ்நயா தன்னிடமே நிலையோடிருப்பவளும், ஸகல ஜகத் பாஸ நயா - ஸகல ஜகத்தையும் ப்ரகாசத்தோடு இருக்கச் செய்பவளும் கலித சம்பராஸநயா - மன்மதன் (திரும்பவும்) உண்டாகும்படி செய்தவளுமான (ஸ்ரீ காமாக்ஷியால்), துஷ்யாமி - ஸந்தோஷப் படுகிறேன். 1. ஜகத்திலுள்ள எல்லா வஸ்துக்களும் ப்ரம்ஹத்தினிடம் நிலையோடிருக்கையில், ப்ரம்மமானது தன்னிடமே நினைத்திருப் பதாகச் சொல்லப்படும். இப்படி தான் நிலைத்திருப்பதற்குப் பிற வஸ்துக்களை அபேக்ஷிக்காமல் தன்னிடமே ப்ரதிஷ்டிதமாக ப்ரம் ஹமிருப்பது 'ஸ்வாஸநயா' என்ற பதத்தினால் இங்கு குறிக்கப் பட்டது து. 2. சம்பரன் என்ற மஹா மாயாவியான அஸுரனை மன் மதன் ஸம்ஹாரம் செய்ததால் அவனுக்கு சம்பராஸனன் என்று பெயர். அவனை அம்பாள் உஜ்ஜீவிக்கச் செய்தது 'கலித சம்ப ராஸநயா' என்பதால் சொல்லப்பட்டது. மூகபஞ்சசதீ 3. சம்பாமென்றால் மிகவும் சிரேஷ்டமானது என்றும். அர்த்தமுண்டு. ஸர்வோத்க்ருஷ்டமான ஆஸனமான காமகோடி பீடத்தில் அம்பிகை இருப்பதை 'கலித சம்பராஸாயா' என்று சொன்னதாகவும் சொல்லலாம். 64 प्रेमवती कम्पायां स्थमवती यतिमनःसु भूमवती । 1 सामवती नित्यगिरा सोमवती शिरसि भाति हैमवती ॥ ६२ ॥ ப்ரேமவதி கம்பாயாம் ஸ்தேமவதீ யதிமன:ஸு பூமவதீ । ஸாமவதீ நித்யகிரா ஸோமவதி சிரஸி பாதி ஹைமவதீ 11 ஹைமவதீ - ஹிமவானுடைய பெண்ணான காமாக்ஷியான வள், கம்பாயாம் - கம்பாநதியிடத்தில், ப்ரேமவதீ - ப்ரியமுள்ள ள வளாயும், யதிமன: ஸு-- - யதிகளுடைய மனதுகளில், ஸ்தேம தீ - ஸ்திரமான நிலையோடிருப்பவளும், பூமவதீ - ஐச்வர்யம் (மஹிமை) பொருந்தியவளும், நித்யகிரா - அழிவில்லாத வாக்கா கிய வேதங்களால், ஸாமவதீ - புகழப்பட்டவளும், சிரஸி-சிரஸில், ஸோமவதீ - சந்திரனையுடையவளுமாக, பாதி - விளங்குகிறாள். कौतुकिना कम्पायां कौसुमचापेन कीलितेनान्तः । कुलदैवतेन महता कुड्मलमुद्रां धुनोतु नः प्रतिभा ॥ ६३ ॥ கௌதுகிநா கம்பாயாம் கௌஸும் சாபேந கீலிதே நாந்த: குலதைவதேந் மஹதா குட்மள முத்ராம் துநோது ந: ப்ரதிபா II கம்பாயாம் கௌதுகிநா - கம்பா நதியில் (கம்பாநதீ தீரத்தில் இருப்பதில்)உத்ஸாஹத்தோடு கூடியதும், அந்த :- உள்ளுக்குள் (மனதில்), கௌஸு மசாபோ - மன்தனால், கீலிதோ- செய்யப் பட்ட அடையாளத்தோடு கூடியதுமான (அதாவது, ச்ருங்கார ரஸம் நிரம்பிய மனதையுடையதுமான), மஹதா குலதைவதோ உயர்ந்த ஸர்வோத்க்ருஷ்டமான) குலதெய்வத்தினால், நஃப்ரதிபாநம்முடைய புத்தியானது, குட்மள முத்ராம் துநோது-அரும் பின் நிலைமைமாறி மலர்ச்சியடையட்டும். ஆர்யா சதகம் 65 1. மன்மதன் புஷ்பங்களாலாகிய தனுஸ்ஸை உடையவனா கையால் இங்கு 'கௌஸ மசாபோ' என்று சொல்லப்பட்டது. 2. மலரும் தருணத்திலிருக்கும் மொட்டுக்குக் குட்மனம் என்று பெயர். கௌஸும சாபோ - புஷ்ப பாணங்களையுடைய வில்லைத் ரித்துள்ளதும், அல்லது; புஷ்பங்களையே வில்லாகக்கொண்ட தும், அந்த : கீலிதேந் - எனது உள்ளத்தில் உறைந்திருப்பதும் என்றும் பொருள் சொல்லலாம். केनापि मिलितदेहा यूना स्वाहासहायतिलकेन । सहकारमूलदेशे संविद्रूपा कुटुम्बिनी रमते ॥ ६४ ॥ கேநாபி மிளித தேஹா யூநா ஸ்வாஹாஸஹாய திலகேந ஸஹகார மூலதேசே ஸம்வித்ரூபா குடும்பிநீ ரமதே ।! ஸம்வித்ரூபா - ஞான ரூபிணியான், குடும்பிநீ - ஒரு குல ஸ்திரீயானவள், ஸ்வாஹா ஸஹாய் - அக்னியை, திலகோ- திலக மாகவுடைய (அதாவது அக்னியை நெற்றிக்கண்ணாக உடைய), கேநாபி யூநா - யாதோ ஒரு (வர்ணிக்க முடியாத) யௌவன புருஷனுடன், மிளித்தேஹா - சேர்ந்ததான சரீரத்தையுடை வளாய், ஸஹகார மூலதேசே-ஆம்ரமரத்தின் மூல தில் (அடியில்), ரமதே - ரமித்துக்கொண்டிருக்கிறாள். 1. இங்கு சிவதம்பதிகளுடைய அர்த்தநாசரீவர ஸ்வரூப மானது 'மிளித்தேஹா' என்பதினால் சொல்லப்பட்டது. 2. அக்னியினுடைய பத்னிக்கு ஸ்வாஹா என்று பெயரா கையால் இங்கு 'ஸ்வாஹா ஸஹாய' என்பதால் அக்னி சொல்லப் பட்டான். कुसुमशरगर्वसंपत्-कोशगृहं भाति काञ्चिमध्यगतम् । स्थापितमस्मिन्कथमपि गोपितमन्तर्मया मनोरत्नम् ॥ ६५ ॥ 66 மூகபஞ்சசதீ குஸுமசர கர்வ ஸம்பத்கோசக்ரு,ஹம் பாதி காஞ்சிமத்யகதம்। ஸ்தாபிதம் அஸ்மின் கதமபி கோபிதம் அந்தர்மயா மநோரத்னம் ॥ ஸுமசர- புஷ்பங்களைப் பாணங்களாகக்கொண்ட மன்ம தனுடைய, கர்வஸம்பத் - கர்வமாகிய தனத்தின், கோசக்ருஹம்பொக்கிஷமானது, காஞ்சிமத்யகதம் - காஞ்சீபுரியின் நடுவிலி ருந்துகொண்டு, பாதி - விளங்குகிறது. அஸ்மின் ஸ்தாபிதம்அதில் ஸ்தாபிக்கப்பட்டதாயிருக்கும், மனோரத்னம் - என் மனோ ரத்னமானது, மயா- என்னால், அந்த: - என் மனத்திற்குள், கதமபி கோபிதம் - எப்படியோ காப்பாற்றப்பட்டுவருகிறது. காஞ்சிமத்யகதமான காமகோடி பீடமானது மன்மதனுடைய கர்வத்திற்குக் காரணமாயிருக்கும் காமத்திற்கு பொக்கிஷம்போல் விளங்குகிறதென்றும், அதில் ஸ்தாபிக்கப்பட்ட மூர்த்தியான ஸ்ரீ காமாக்ஷியானவள் ஒரு ரத்னம்போல் தன் மனதில் விளங்கிக் கொண்டு தன்னால் எப்போதும் காப்பாற்றப்பட்டு (அதாவது, த்யானிக்கப்பட்டு) வருகிறாள் என்றும் கவியால் சொல்லப்பட்டது. அவ்விதமான கோசக்ருஹத்திற்குள் ஸ்தாபிதமான (ஸ்ரீ காமாக்ஷி யாகிற) ரத்னத்தைத் தான் கொண்டுவந்து தன் மனதிற்குள் வைத்து எப்படியோ காப்பாற்றிவருவதாக வர்ணித்திருக்கிறார். அஸ்மிந் - அந்தப் பொக்கிஷத்தில், மநோரத்தம் - என் மன தென்னும் ரத்னமானது, கதமபி - மிகவும் சிரமப்பட்டு, கோபி தம் - பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் பொருள் சொல்லலாம். दग्धषडध्वारण्यं दरदलितकुसुम्भसंभृतारुण्यम् । कलये नवतारुण्य कम्पातटसीम्झि किमपि कारुण्यम् ॥ ६६ ॥ தக்த ஷ்டத்வாரண்யம் தரதளித குஸும்ப ஸம்ப்ருதாருண்யம் கலயே நவ தாருண்யம் கம்பா தடஸீம்நி கிமபி காருண்யம் !! தக்த ஷடத்வாரண்யம் - ஆறு அத்வாக்களாகிய ஆபரண் யத்தை எரித்ததும் (அதாவது, அவற்றைக் கடந்ததும்), தாதளிதஆர்யா சதகம் கொஞ்சம் மலர்ந்ததான, குஸும்ப - குங்குமப்பூவின், ஸம்ப்ருதசேர்க்கையான, ஆருண்யம் - சிகப்பு நிறத்தையுடையதும், நவ தாருண்யம் - புதிதான (ஆரம்பித்ததான) யௌவனத்தையுடையது மான, கிமபி காருண்யம் - ஏதோ ஒரு கருணாரூபிணியை, கம்பா கடஸீம்நி - கம்பா நதிக்கரையில், கலயே - அறிகிறேன் (த்யானிக் கிறேன்.) 1. ஜகத்தானது ஷட் (ஆறு வகையான) அத்வாக்களாய் (வழிகளாய்) சித்ரூபிணியான அம்பிகையிடமிருந்து ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது. 'வர்ண: கலா பதம் தத்வம் மந்த்ரோ புவநமேவ ச । இத்யத்வ ஷட்கம் தேவேசி பாதி த்வயி சிதாத்மநி ॥ ' > 67 2. இந்த ஆறு அத்வாக்களில் வர்ண, பத,மந்த்ரமென்ப வைகள் வாக்கைச் சேர்ந்தவைகளென்றும், கலா, தத்வ, புவன மென்றவைகள் அர்த்தத்தைச் சேர்ந்தவைகளென்றும், அந்த வாக்கும் அர்த்தமும் முறையே ப்ரகாச, விமர்சாத்மகமான வையென்றும், அவற்றிலிருந்து இந்த ஜகத்தானது ஏற்படுகிற தென்றும் சொல்லப்படும். 3. அம்பிகை இந்த ஆறு அத்வாக்களுக்கும் அப்பாலிருப் பதை, 'ஷ்டத்வாதீத ரூபிணீ" என்று 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத் தில் சொல்லியிருக்கிறது. அல்லது, காம, க்ரோத, லோப, மோஹ,மத,மாத்ஸர் யங்களென்ற ஷட்ரிபுக்களை 'ஷடத்வா' என்ற பதத்தினால் குறிப் பிட்டதாகவும் சொல்லலாம். அவை காட்டிலுள்ள மரங்கள் மாதிரி மேலுக்குமேல் உண்டாவதால் அவற்றை ஒரு அரண்யத் திற்கு ஸமானமாக வர்ணிப்பது வழக்கம். அம்பிகையின் அனு க்ரஹம் ஏற்பட்டால் அவை நசித்துவிடுவதால் 'தக்த ஷடத்வா ரண்யம்' என்று சொல்லப்பட்ட 5. இதேமாதிரி 'ஸகல ஜனனீஸ்தவ'த்திலும் வர்ணிக்கப் பட்டிருக்கிறது. 'ஷடத்வாரண்யாநீம் ப்ரளய ரவி கோடி ப்ரதிருசா ருசா பஸ்மீக்ருத்ய ஸ்வபத கமல ப்ரஹ்வ சிரஸாம் । 68 மூகபஞ்சசதீ விதந்வாந: சைவம் கிமபி வபுரிந்தீவரருசி: குசாப்யாம் ஆநம்ரஸ்தவ புருஷகாரோ விஜயதே /i • अधिकाश्चि वर्षमाना-मतुलां करवाणि पारणामक्ष्णोः । आनन्दपाकमेदा-मरुणिमपरिणामगर्वपल्लविताम् ॥ ६७ ॥ அதிகாஞ்சி வர்தமா நாம் அதுலாம் கரவாணி பாரணாம் அஷ்ணோ: ஆநந்த பாக பேதாம் அருணிம் பரிணாம கர்வபல்லவிதாம் ॥ அதிகாஞ்சி - காஞ்சிபுரியில், வர்தமாநாம் - விருத்தியடைகிற தாயும்,(அதாவது, விளங்குகிறதாயும்) அதுலாம் - தனக்கு ஸமானமில்லாததாயும், ஆனந்த பாகபேதாம் - ஆனந்தம் நிறைந்த ரூபத்தையுடையதாயும், அருணிமபரிணாம கர்வபல்லவிதாம் - அதிக வளர்ந்தோங்கிய துளிர்போலிருப்பதாயு முள்ள ஒரு மூர்த்தியை, அக்ஷ்ணோ: பாரணாம் கரவாணி - என் கண்ணாரப் பார்க்கிறேன். மான சிகப்பானது बाणसृणि पाशकार्मुक-पाणिमर्मु कमपि कामपीठगतम् । एणधरकोणचूडं शोजिमपरिपाकभेदमकालये ॥ ६८ ॥ பாண ஸ்ருணி பாச கார்முக பாணிம் அமும் கமபி காமபீடகதம் । ஏணதர கோண சூடம் சோணிம பரிபாக பேதம் ஆகலயே !! பாண ஸ்ருணி பாச கார்முக -(புஷ்ப ) பாணம், அங்குசம், பாசம், (இக்ஷு) கோதண்டம் இவற்றையுடைய, பாணிம் கை களையுடையதும்,காமபீடகதம் - காமகோடி பீடத்திலிருப்பதும், ஏணதரகோண சூடம் - மானைத் தரிக்கும் சந்த்ரனுடைய கலையை சிரஸில் தரித்ததும், சோணிமபரிபாக பேதம் - உயர்ந்ததான கிகப்பு நிறத்தோடு கூடியதுமான, அமும் - இந்த, கமபி ஒரு மூர்த்தியை, ஆகலயே - த்யானிக்கிறேன். ஏணமென்றால் மான் என்று அர்த்தம். சந்த்ர மண்டலித் திலிருக்கும் களங்கத்தை மானென்று வர்ணிப்பது கலி வழக்கமா கையால் சந்த்ரனுக்கு ஏணதாளெ று பெயர் சொல்லப்படும். ஆர்யா சதகம் किं वा फलति ममान्यै बिम्बाधरचुम्बिमन्दहासमुखी । संबाधकरी तमसा-मम्बा जागर्ति मनसि कामाक्षी ॥ ६९ ॥ கிம் வா பலதி மமாந்யை: பிம்பாதர சும்பி மந்தஹாஸமுகீ । ஸம்பாதகரீ தமஸாம் அம்பா ஜாகர்த்தி மநஸி காமாக்ஷி II मञ्चे सदाशिवमये परशिवमयललितपौष्पपर्यते । अधिचक्र मध्यमास्ते कामाक्षी नाम किमपि मम भाग्यम् ॥ ७० ॥ 69 பிம்பாதர சும்பி- கோவைக் கனிபோன்ற அதரங்களில் யரவும், மந்தஹாஸ முகீ - புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய வளும், தமஸாம் ஸம்பாதகரீ-அக்ஞானத்தை அறவே போக்கடிப் பவளுமான, அம்பா காமாக்ஷி - தாயாரான காமாக்ஷியானவள், மனஸி - என்னுடைய மனதில், ஜாகர்த்தி - விளங்கிக்கொண்டிருக் கிறாள், அந்யை:-பிறரால்,மம - எனக்கு, கிம் வா பலதி- என்ன கார்யம் ஆகவேண்டியிருக்கிறது. ஒன்றுமில்லையென்று கருத்து. மஞ்சே ஸதாசிவமயே பரசிவ மய லலித பௌஷ்ப பர்யங்கே ! அதிசக்ரமத்யம் ஆஸ்தே காமாக்ஷி நாம் கிமபி மம பாக்யம் ॥ 1.* காமாக்ஷி நாம் காமாக்ஷ என்ற பெயரோடு கூடிய, கிமபிஏதோ ஒரு, மம பாக்யம் - என்னுடைய பாக்யமானது, அதி சக்ர மத்யம் - ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில், ஸதாசிவமயே மஞ்சேதாசிவனாகிற மஞ்சத்தில் (கட்டிலில்), பரசிவமய - பரசிவனாகிய லலித - அழகான, பௌஷ்ப பர்யங்கே - புஷ்ப மெத்தையின் த மீது, ஆஸ்தே - விளங்கிக்கொண்டிருக்கிறது. The 1.ஸ்ரீசக்ரத்தின் நடுநாயகமாக விளங்கும் ஸர்வானந்தமய சக்மென்ற பிந்து இங்கு 'அதிசக்ரமத்யம் என்பதால் சொல்லப் பட்டது. அதில் பஞ்சப்ரம்ஹாகாரமான மஞ்சத்தில் காமேச் வரரும் அவருடைய வாமாங்கத்தில் ஸ்ரீ லலிதாதாம்பிகையும் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மூகபஞ்சசதீ ஸதநஸ்யோபரி தாஸாம் ஸர்வானந்தமய நாமகே பிந்தௌ பஞ்சப்ரம்ஹாகாரம் மஞ்சம் ப்ரணமாமி மணிகணாகீர்ணம்!!' 70 இந்த மஞ்சத்திற்கு ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன்,ஈச்வரன் இந்நால்வரும் கால்களாயிருப்பதாகச் சொல்லப்படுவார்கள். பர்யங்கஸ்ய பஜாம: பாதாந் பிம்பாம்புதேந்துஹேமருச: அஜஹரிருத்ரேசமயாந் அநலாஸுர மாருதேசகோண ஸ்த்தாந் ॥' இந்த மஞ்சத்திற்கு ஸதாசிவன் மேல் தட்டாயிருப்பதாகச் சொல்லப்படும். 'பலகம் ஸதாசிவமயம் ப்ரணௌமி ஸிந்தூர ரேணு கிரணாபம் ।" மேலே சொல்லிய ஐவரும் தங்களுடைய சக்திகளோடு இல்லாதிருக்கும்போது ப்ரேதங்களாக இருக்கிறபடியால் அவர் களாலான கட்டிலானது 'பஞ்சப்ரேத மஞ்சம்' என்று சொல்லப் படும். (இதைப்பற்றி அதிகமாகத் தெரியவேண்டுமானால் ஞானார் ணவம் முதலியவற்றைப் பார்க்கவும்). 2. இந்த மஞ்சத்தைப் பொதுவாக 'மஞ்சே ஸதாசிவமயே என்று இங்கு சொல்லியதுபோல் 'சிவாகாரே மஞ்சே' என்று 'ஸௌந்தர்யலஹரி'யிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 3. இப்பேர்ப்பட்ட மஞ்சத்தின்மீது காமேச்வாருடைய வாமாங்கத்தில் அம்பிகை வீற்றிருப்பதால் அவ்விதமான அவரு டைய (அழகியதும் புஷ்யம்போல் ம்ருதுவானதுமான) அங்க மானது 'பரமசிவ மய லலித பௌஷ்ய பர்யங்கே' என்று இங்கு சொல்லப்பட்டது. இதே மாதிரி ஸ்ரீ மதாச்சார்யாளும், 'சிவாகாரே மஞ்சே பரமசிவ பாயங்க நிலயாம்' என்று 'வௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள். लक्ष्योऽस्मि कामपीठी-लासिकया घनकृपाम्बुराशिकया । श्रुतियुवतिकुन्दलीमणि-मालिकया तुहिनशैलबालिकया ॥७१॥ லக்ஷ்யோzஸ்மி காமபீடி லாஸிகயா கநக்ருபாம்பு ராசிகயா । ச்ருதியுவதி குந்தளீமணிமாலிகயா துஹிநசைல பாலிகயா ॥ ஆர்யா சதகம் காமபீட லாஸிகயா - காமபீடத்தில் நர்த்தனம் செய்கிற வளும், காக்ரூபாம்பு ராசிகயா - கனீபூதமான கருணாரஸத்தின் ஸமுத்தமாக விளங்குபவளும், ச்ருதியுவதி - வேதங்களாகிற யுவ திகளின், குந்தளீ மணிமாலிகயா - கேசங்களில் அணிந்திருக்கும் ரத்னங்களின் மாலைபோன்றவளும், துஹிந சைல பாலிகயா மவானுடைய குமாரியாயுமிருக்கிற ஸ்ரீ காமாக்ஷியால், லக்ஷ் யோரஸ்மி - பார்க்க (காப்பாற்ற)த்தக்கவனாயிருக்கிறேன். 71 1. லாஸிகா என்பது நர்த்தனம் செய்யும் ஸ்திரீக்குப்பெயர். 2. அம்பிகையானவள் ஸகல வேதங்களுக்கும் பரம தாத் பயமாயிருப்பதால், வேதங்களை ஸ்திரீகளாகவும், அம்பிகையை அவர்களுடைய சிரஸில் கேசங்களிலணிந்திருக்கும் ரத்னங்களின் கோர்வையாகவும் இங்கு வர்ணிக்கப்பட்டன். அம்பிகையை அந்த ஸ்திரீகள் இடைவிடாமல் நமஸ்கரிப்பதால் அவளுடைய பாதங்களின் (செம்பஞ்சுக்குழம்பு கலந்ததால் சிகப்பாயிருக்கும்) தூளிகள் அவர்களுடைய வகுட்டிலணியப்பட்ட ஸிந்தூரமாயிருப் பதாக, 'ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூளிகா' என்று ஸ்ரீ லலிதாஸஹஸ்ரநாம'த்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये । चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥ ७२ ॥ லீயே புரஹரஜாயே மாயே தவ தருண பல்லவச்சாயே । சரணே சந்த்ராபரணே காஞ்சீசரணே நதார்த்திஸம்ஹரணே !! புரஹா ஜாயே - முப்புரங்களையும் அழித்தவரான பரமசிவ னுடைய பத்னியே, மாயே - மஹாமாயாரூபிணியே, தருணபல் வைச்சாயே - இளந்துளிர் போன்ற (சிவந்த) காந்தியுடையவளே, சந்த்ராபரணே ண் - சந்த்ரனை (சிரஸின்) ஆபரணமாக உடையவளே, காஞ்சீ சரணே - காஞ்சீபுரியை வாஸஸ்தானமாக உடையவளே, நதார்த்தி ஸம்ஹரணே - நமஸ்கரிக்கின்றவர்களுடைய கஷ்டத் தைப் போக்குகிறவளே, தவ சரணே-உ உன்னுடைய பாதத்தில், லீயே - லயித்திருக்கிறேன். 72 மூகபஞ்சசதீ இங்கு வந்த பதங்களில் 'தருணபல்லவச்சாயே', 'காஞ்சீ சாணே', 'நதார்த்திஸம்ஹாணே' என்றவைகள் அம்பாளுடைய சாணத்தைப்பற்றிச் சொன்னதாகவும் சொல்லலாம். இதர தேவ ணங்களாலேயே தைகள் போலல்லாமல் அம்பாள் தன்னுடைய சரண பக்தர்களுடைய பயத்தைப்போக்க வேண்டிய அளவுக்கு மிஞ்சி அனுக்ரஹம் செய்யும் மஹிமை வாய்ந்தவளென்பதாக ஸ்ரீ மதா சார்யாள் 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள். 'த்வதந்ய: பாணிப்யாம் அபயவரதோ தைவதகண: த்வமேகா நைவாஸீ: ப்ரக்டித வராzபீத்யபிநயா பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா ஸமதிகம் சரண்யே லோகாநாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள II' मूर्तिमपि मुक्तिबीजे मूर्धिनस्तबकितच कोरसांराज्ये । मोदितकम्पाकूले मुहुर्मुहुर्मनसि मुमुदिषाऽस्माकम् ॥ ७३ ॥ மூர்த்திமதி முக் திபீஜே மூர்த்நி ஸ்தபகித சகோர ஸாம்ராஜ்யே । மோதித கம்பா கூலே முஹுர் முஹுர்மநஸி முமுதிஷாகஸ்மாகம் ॥ மூர்த்திமதி - உருவத்தோடு கூடிய,முக்திபீஜே - முக்திக்கு வித்தாயிருப்பவளும் (அதாவது முக்திக்கு வித்தே உருவெடுத் தாற் போலிருப்பவளும்), மூர்த்நி - சிரஸில், ஸ்தபகித சகோர ஸாம்ராஜ்யே -சகோரங்களுக்கு சாம்ராஜ்யமான சந்த்ரனைச் செண்டு போல் அணிந்திருப்பவளும், மோதித கம்பா கூலே - கம்பா கதி யின் கரையிலிருப்பதற்கு ப்ரியமுள்ளவளுமான ஒரு மூர்த்தி யிடத்தில், முமுதிஷா-ஆனந்தமடைய வேண்டுமென்ற யானது, அஸ்மாகம் மநஸி - நம்முடைய மனதில், முஹ'ு:- அடிக்கடி (மேலுக்குமேல்),உண்டாகிறது. சை முஹு'ு: லவையே ஆஹா சகோர பக்ஷியானது சந்த்ரனுடைய மாகஉடையதென்பதாகச் சொல்லப்படுமாதலால் சந்த்ரனைச் சகோ ரங்களுக்கு ஸம்ராஜ்யமாகச் சொல்லப்பட்டது. वेदमयीं नादमयीं बिन्दुमयीं परपदोद्यदिन्दुमयीम् । मन्त्रमयीं तन्त्रमयीं प्रकृतिमयीं नौमि विश्वविकृतिमयीम् ॥ ७४॥ ஆர்யா சதகம் வேதமயீம் நாதமயீம் பிந்துமயீம் பரபதோத்யத் இந்துமயீம் । மந்த்ரமயீம் தந்த்ரமயீம் ப்ரக்ருதிமயீம் நௌமி விச்வ விக்ருதிமயீம் ॥ நா வேதமயீம் - வேதங்களின் ரூபமாயும், நாதமயீம் ஸ்வரூபிணியாயும், பிந்துமயீம் - பிந்து ஸ்வரூபிணியாயும், பாப் தோத்யத் - மோக்ஷத்தில் உதிக்கும், இந்துமயீம் - சந்த்ரரூபிணி யாயும், மந்த்ரமயீம் - மந்த்ரரூபிணியாயும், தந்த்ரமயீம் - தந்த்ர ரூபிணியாயும்,ப்ரக்ருதிமயீம் - ப்ரக்ருதி ரூபிணியாயும், விசவ விக்ருதிமயீம் - ஜகத்திலுள்ள எல்லாவற்றையும் தன்னுடைய பரிணாமங்களாயுடையவளுமான ஸ்ரீ காமாக்ஷியை, நௌமி - நமஸ் 78 . கரிக்கிறேன். 1. பரப்ரம்ஹமானது ஸ்ருஷ்டிக்கு உன்முகமாக ஆகும் போது தன்னுடைய விமர்சரூபமான சக்தியிலிருந்து மஹாபிந்து வாக ஆவிர்பவித்து அதிலிருந்து நாதமும், அதிலிருந்து ஸகல ப்ரபஞ்சமும் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. 'பரசிவ ரவிகர நிகரே ப்ரதிபலதி விமர்ச தர்பணே விசதே । ப்ரதிருசிருசிரே குட்யே சித்தமயே நிவிசதே மஹாபிந்து: // ஸ்புரிதாத் அருணாத்பிந்தோ: நாதப்ரம்ஹாங்குரோ ரவோ [வ்யக்த: { தஸ்மாத் ககா ஸமீரணதஹநோதக பூமி வர்ண ஸம்பூதி: // ग 2.இவ்வி இவ்விதமாக ஏற்படும் விசவமானது (ப்ரபஞ்சமானது) ப்ரக்ருதிமயியான (ஆதிகரண வஸ்துவான) அம்பாளுடைய விக் ருதியாக (பரிணாமமாக) இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படிப் பாலிலிருந்து தயிரும், வெண்ணையும், நெய்யும்,விகா ரங்களாக (வேறு ரூபங்களாக)ஏற்படுகின்றனவோ, அம்மாதிரி ஸகல ப்ரபஞ்சமும் அம்பாளுடைய விகாரங்களாய் இருப்பதாக சாக்தர்களால் சொல்லப்படும். (இது பரிணாமவாதமென்று சொல்லப்படும்). இது சாக்தர்களுடைய ஸித்தாந்தம். - 10 74 4 மூகபஞ்சசதீ पुरमथनपुण्यकोटी पुत्रि तकविलोकसूक्तिरसाघाटी । मनसि मम कामकोटी विहरतु करुणाविपाकपरिपाटी ॥७५॥ புரமதந புண்யகோடீ புஞ்ஜித கவிலோக ஸூக்தி ரஸதாடீ ! மநஸி மம காமகோடீ விஹரது கருணா விபாக பரிபாடீ புரமதந -புரங்களை அழித்த பரமசிவனுடைய, புண்யகோடீ புண்ணியத்தின் எல்லையாயிருப்பவளும் (அதாவது, அவர் செய்த பாக்யத்தால் கிடைக்கப்பெற்றவளும்), புஞ்ஜித கவிலோகல பிக்தி ரஸதாடீ - கவிலோகத்தினுடைய (கவிகளுடைய)வாக்குகளின் ரஸங்களுடைய சேர்க்கையான ரூபமாயிருப்பவளும், (அதாவது, கவிகளுடைய உயர்ந்ததான வாக்குக்களால் ஸ்துதி செய்யப்பட்ட வளும்), கருணாவிபாக பரிபாடீ - அதிகமான கருனையே உரு எடுத்தாற்போல் இருப்பவளுமான, காமகோடீ ஸ்ரீ காமாக்ஷி யானவள், மம மாஸி - என்னுடைய மனதில், விஹரது- விளை யாடிக்கொண்டிருக்கட்டும். कुटिलं चटुलं पृथुलं मृदुलं कचनयनजघनचरणेषु । अवलोकितमवलम्बित-मधिकम्पातटममेयमस्माभिः ॥ ७६ ॥ குடிலம் சடுலம் ப்ருதுளம் மருதுளம் கச நயந ஜகந சரணேஷு। அவலோகிதம் அவலம்பிதம் அதிகம்பாதடம் அமேயம் அஸ்மாபி: // கச நயந ஜகா சரணேஷ- கூந்தல்களிலும், கண்களிலும், நிதம்ப ப்ரதேசத்திலும்,சரணங்களிலும், குடிலம் சடுலம் ப்ருது ளம் மருதுளம் -(முறையே) வளைந்தும், சஞ்சலத்தோடும், பருத் தும்,மருதுவாயும் இருக்கிற, அமேயம் - அளவிடமுடியாத (அதா வது, மனதிற்கு எட்டாததான) ஒரு மூர்த்தியானது, அஸ்மாபி:நம்மால், அதிகம்பாதடம் - கம்பா நதிக்கரையில், அவலோகிதம் பார்க்கப்பட்டது, அவலம்பிதம் - சரணமடையப்பட்டது. கசங்களில் குடிலமாயும்,நயனங்களில் சடுலமாயும், ஜகனத் தில் ப்ருதுளமாயும்,சரணங்களில் மருதுளமாயும் அம்பிகையின் ஆர்யா சதகம் ரூபமிருப்பதாக இதில் வர்ணிக்கப்பட்டது. மதாசார்யாளும், 'அராளா கேசே ப்ரக்ருதிஸரளா மந்தஹஸிதே சிரீஷாபா சித்தே த்ருஷதுபல சோபா குசதடே । ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா ॥' என்று 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள். 75 இதேமாதிரி ஸ்ரீ प्रत्यङ्मुख्या दृष्ट्या प्रसाद दीपाङ्कुरण कामाक्ष्याः । पश्यामि निस्तुलमहो पचेलिमं किमपि परशिवोल्लासम् ॥७७॥ ப்ரத்யங் முக்யா திருஷ்டியா ப்ரஸாத தீபாங்குரேண காமாக்ஷியா: பச்யாமி நிஸ்துல மஹோ பசேளிமம் கிமபி பரசிவோல்லாஸம் !! காமாக்ஷயா:- காமாக்ஷியினுடைய,ப்ரஸாத தீபாங்குரேண அனுக்ரஹமாகிற தீபச்சுடரால் (உண்டான), ப்ரத்யங்முக்யா - அந் தர்முகமான, த்ருஷ்ட்யா - பார்வையால், நிஸ்தூலம் - இணையற்ற தும், பசேளிமம் - பழுத்ததுமான, கிமபி - ஒரு (வர்ணனையில் டங்காத), பரசிவோல்லாஸம் பரமசிவனுடைய உல்லாஸத்தை (ஸ்வரூபத்தை, அதாவது மோக்ஷானந்தத்தை), பச்யாமி - பார்க் கிறேன். ✔ அம்பிகையின் அனுக்ரஹத்தால் சிவஞானம் ஏற்படுவதாக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் 'சிவஞான ப்ரதாயிநீ"என்று சொல்லப்படுகிறது. विद्ये विधानृविषये कात्यायनि कालि कामकोटि कले। भारति भरवि भद्रे शाकिनि शांभवि शिवे स्तुवे भवतीम् ॥७८॥ வித்யே விதாத்ரு விஷயே காத்யாயநி காமகோடி கலே 1 பாரதி பைரவி பத்ரே சாகிநி சாம்பவி சிவே ஸ்துவே பவதீம் ॥ மூகபஞ்சசதீ வித்யே-(வித்யா ரூபிணியான) ஸரஸ்வதி ரூபத்தையுடைய வளே, விதாத்ரு விஷயே - (அந்த ஸரஸ்வதீ ரூபத்தில்)ப்ரம்ஹா வின் காந்தையாயிருப்பவளே, காத்யாயநி காளி காமகோடி கலே பாரதி பைரவி பத்ரே சாகிகி சாம்பவி சிவே - காத்யாயனீ, காளீ, காமகோடி, கலா, பாரதீ, பைரவி, பத்ரா,சாகினீ, சாம்பவி, சிவா என்ற பெயர்களையுடையவளே, பவதீம்-உன்னை, ஸ்துவேஸ்துதி செய்கிறேன். 76 அம்பிகையானவள் தேவர்களுக்கு ஒத்தாசை செய்யவேண்டி காத்யாயன மஹர்ஷியுடைய ஆச்ரமத்தில் ஆவிர்பவித்து அவரால் தன் பெண்ணாக ஸ்வீகரிக்கப்பட்டதினால் காத்யாயனீ என்று பெயர் ஏற்பட்டது. காளீ என்ற நாமம் அம்பாளுக்கு ஏற்பட்ட தற்கு அனேகம் காரணங்களுண்டு. கருப்பு வர்ணமாய் இருப் பதையும், காலத்திற்கு அதீதமாயிருப்பதையும் இந்தப்பெயருக்கு இரண்டு காரணங்களாகச் சொல்லலாம். 'காலாத்மிகா' 'கலா நாதா' 'கலாமாலா 'கலாவதீ' என்ற ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத் திய நாமங்களின் பாஷ்யத்தில் கலா என்ற பதத்திற்கு அனேக அர்த்தங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளின் ரூபமாக அம்பிகையிருப்பதால் கலா என்ற பெயர் ஏற்பட்டது. வித்யா, விதாத்ருவிஷயா, பாரதீ என்றவை ஸரஸ்வதியின் பெயர்கள். பைரவராகிய சிவனுடைய பத்னியாக இருப்பதாலும் பீருக்கள் (ஸ்த்ரீகள்) ஸமூஹ ரூபமாயிருப்பதாலும் அம்பிகைக்கு பைரவி என்ற பெயர் ஏற்பட்டது. மங்கள ரூபிணியாயும் மங்கள் ப்ரதை யாயுமிருப்பதால் பத்ரா என்று பெயர். சாகினீ என்பது மூலா தார பத்மத்திலிருக்கும் (அம்பிகையின் ரூபிணியான) யோகினிக் குப்பெயர். தவிரவும் தேவீமாஹாத்ம்யம், தேவீபாகவதம் இவற் றில் சொல்லப்பட்ட (அம்பிகா ரூபிணியான) சாகம்பரீ தேவியைக் குறித்ததாகவும் சொல்லலாம். சாம்பவீ, சிவா என்பவை சம்பு, சிவன் என்ற சிவனுடைய பெயர்களிலிருந்து ஏற்பட்டவை. "QgfAaa Az" (வித்யே விதாத்ரு அவிஷயே)என்ற பாடத்தில் சதுர்முக ப்ரம்ஹாவின் ஸிருஷ்டிக்கு அதீதமான வித்யா ஸ்வரூபிணியே - என்பது பொருள். मालिनि महेशचारिणि काञ्चीकेलिनि विपक्षकालिनि ते । शूलिनि विद्रुमशालिनि सुरजनपालिनि कपालिनि नमोऽस्तु ॥ ७९ ॥ ஆர்யா சதகம் மாலிநி மஹேச சாரிணி காஞ்சீ கேலிநி விபக்ஷகாலிநி தே। சூலிநி வித்ருமசாலி நி ► ஸுரஜந் பாலிநி கபாலிநி நமோzஸ்து !! 77 மாலிநி - மாலினியாயும், மஹேச்சாரிணி - பரமசிவனுடைய பத்னியாயும், காஞ்சீ கேலிநி - காஞ்சீபுரியில் விளையாடிக்கொண் டிருப்பவளாயும், விபக்ஷகாலிநி - சத்ருக்களை ஸம்ஹாரம் செய் பவளாயும், சூலிநி - சூலத்தைத் தரித்தவளாயும், வித்ருமசாலிநி பவழம் போன்ற நிறத்துடன் விளங்குகிறவளாயும், ஸுரஜன பாலிநி - தேவர்களைக் காப்பாற்றுகிறவளாயும், கபாலிநி - கபாலத் தைக் கையில் வைத்திருப்பவளாயுமிருக்கும், தே - உனக்கு, நம: அஸ்து நமஸ்காரம் இருக்கட்டும். மாலையைத் தரித்திருப்பதாலும், பஞ்சாசத் வர்ணங்களா லான (அக்ஷரங்களாலான) மாலையை(வர்ணமாலையை) தரித்திருப் பதாலும் (அதாவது அக்ஷர ஸ்வரூபிணியாக) இருப்பதாலும் அம்பிகைக்கு மாலினீ என்று பெயர். அம்பிகை தனது விசேஷங்களில் சூலம், கபாலம், இவற்றைக் கைகளில் தரித்திருப் பதால் சூளின் என்றும், கபாலினீ என்றும் பெயர்கள் ஏற்பட் பரமசிவனும் கையில் கபாலத்தைத் தரித்திருப்பதால் அவருக்குக் கபாலியென்றும் அவருடைய பத்னியாகிய அம்பிகைக் கும் கபாலினியென்றும் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லலாம். டன். என்பது '"எத்தன எfjA" (மஹேசசாலிநி) என்ற பாடத்தில், பர மேசுவரனையும் சலிக்கச் செய்பவளாயிருப்பவளே பொருள். 78 மூகபஞ்சசதீ காமாக்ஷி - ஹே காமாக்ஷியே! சூலபாணே:- பரமசிவனு டைய, காமாகம தந்த்ர யக்ஞ தீக்ஷாயாம் - காம சாஸ்த்திரத்தை அப்யஸிப்பதாகிய யாகத்திற்கு தீக்ஷையடைவதில், தவ - உன் னுடைய, தாத்ருக் - அப்பேர்ப்பட்ட (விசேஷமான), தத் - அந்த, தருணிமோந்மேஷ:- யௌவனத்தின் விகாஸமானது, தேசிக கிம் இதி - குருவா என்ன என்று,சங்கே- ஸந்தேஹப்படுகிறேன். எ காமாகம ஸமயயஜ்ஞ - என்றும் பாடம். "தேசிசதி கிமேஷ சிவே" என்ற பாடாந்தரத்தில்,ஏ சிவே! மங்களரூபிணியான காமாக்ஷியே! ஏஷ :- இந்த, தருணிமோந்மேஷ:- யௌவனத் தின் விகஸமானது, தேசிகதி - ஆசாரியனாக இருக்கிறது என்று நினைக்கிறேன் என்பது பொருள். वेदण्डकुम्भडम्बर वैदण्डिककुचभरातमव्याय । कुङ्कुमरुचे नमस्यां शङ्करनयनामृताय रचनामः ॥ ८१ ॥ வேதண்ட கும்ப டம்பர வைதண்டிக குச பரார்த்த மத்யாய குங்கும் ருசே நமஸ்யாம் சங்கர நயநாம்ருதாய ரசயாம: // வேதண்ட - யானையின்,கும்ப-கும்பங்களின், டம்பாஆடம்பரத்தோடு, வைதண்டிக - விதண்டாவாதம்போல் போர் செய்யும்,(அதாவது- யானையின் மஸ்தகத்தைத் தோற்கச்செய் யும்படியான), குச பரஆர்த்த - ஸ்தனங்களின் பாரத்தினால் கஷ் டப்படும், மத்யாய - இடுப்பை உடையவளும், குங்கும ருசே குங்குமம் (குங்குமப்பூ) போன்ற காந்தியுடையவளும், சங்கரநய நாம்ருதாய - பரமசிவனுடைய நேத்ரங்களுக்கு அம்ருதம்போன்ற வளுமான ஸ்ரீ காமாக்ஷிக்கு, நமஸ்யாம் ரசயாம்: நமஸ்கார தைச் செய்கிறோம். अधिकाश्चितमणिकाञ्चन - काञ्चीमधिकाञ्चिकांचिदद्राक्षम् । अवनतजनानुकम्पा -मनुकम्पा कूलमस्मदनुकूलाम् ॥ ८२ ॥ அதிகாஞ்சித மணிகாஞ்சந காஞ்சீம் அதிகாஞ்சி காஞ்சித் அத்ராக்ஷம் அவந்த ஜநாநுகம்பாம் அநுகம்பாகூலம் அஸ்மத் அநுகூலாம் ॥ ஆர்யா சதகம் 79 அதிக அஞ்சித - அதிகமாக இழைக்கப்பட்ட, மணி ரத்னங் களோடுகூடிய, காஞ்சங காஞ்சீம் - தங்க ஒட்யாணத்தையுடைய வளும், அவாத ஜநா நுகம்பாம் -வணங்கிய ஜனங்களிடத்தில் தயையுடையவளும், அஸ்மத் அநுகூலாம் - நம்மிடத்தில் அனு கூலமாயிருப்பவளுமான, காஞ்சித் - ஒரு ஸ்த்ரீயை, அதிகாஞ்சிகாஞ்சீபுரியில், அநுகம்பாகூலம் - கம்பாநதிக்கரையில், அத்ரா க்ஷம் - பார்த்தேன். परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् । परगुरुकृपया वीओ परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥ ८३ ॥ பரிசித கம்பாதீரம் பர்வத ராஜந்ய ஸுக்ருத ஸந்நாஹம் பரகுரு க்ருபயா வீக்ஷே பரமசிவோத்ஸங்க மங்களாபரணம் ॥ பரிசித கம்பாதீரம் - கம்பா நதிக்கரையில் இருந்து பழக்கப் பட்டதும் பர்வத ராஜந்ய - பர்வதங்களின் அரசனான ஹிமவா னுடைய, ஸுக்ருத ஸந்நாஹம் - புண்யத்தின் ஆவிர்பாவமாயி ருப்பதும், பரமசிவ உத்ஸங்க - பரமசிவனுடைய மடிக்கு, மங்கள ஆபரணம் - மங்களமான ஆபர ணமாயிருப்பதுமான ஒரு மூர்த் தியை,பரகுருக்ருபயா - என் குருநாதருடைய க்ருபையால், விக்ஷே - பார்க்கிறேன். दग्यमदनस्य शम्भोः प्रथीयसीं ब्रह्मचर्यवैदग्धीम् । तत्र देवी तरुणिमश्रीचतुरिमपाको न चक्षमे मातः ॥ ८४ ॥ தந்த மாநஸ்ய சம்போ: உற்சியம் ப்ரம்ஹசர்ய வை தக் தீம் । தவி தே தருணிமஸ்ரீ சத்திய பாகோ ந சக்ஷக்ஷிமே மாத: II தேவி - தேவியே! மாத:- ஜனனீ! தக்த மதநஸ்ய -மன் மதனை எரித்தவரான, சம்போ : - பரமசிவனுடைய, ப்ரதீயஸீம் பெரிதாகச்சொல்லப்பட்ட, ப்ரம்ஹசர்ய வைதக்தீம் - ப்ரம்ஹ சர்ய நிலைமையின் ப்ரபாவத்தை, தவ உன்னுடைய, தருணிம + 80 மூகபஞ்சசதீ ஸ்ரீ - யௌவனத்திய அழகின், சதுரிம பாக:- ஸாமார்த்தியத் தின் வைபவமானது,ந சக்ஷமே - பொறுக்கிறதில்லை. காமத்திற்கு அரசனான மன்மதனைக்கூட பரமசிவன் (அவன் வசப்படாமல்) எரித்துவிட்டதால், அவருடைய ப்ரம்ஹசர்ய நிய மத்தின் புகழானது எங்கும் பரவத்தலைப்பட்டது. ஆயினும் அம்பிகையின் யௌவனத்தின் ஸௌந்தர்யமானது அதைப் பொறுக்காமல் பங்கப்படுத்தி விட்டதில் பரமசிவனுடைய புக ழானது இருந்தவிடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இவ்வித மாக அம்பிகையின் ஸௌந்தர்யத்தையும், பரமசிவன் அம்பிகை யிடத்தில் கொண்டிருக்கும் மோஹத்தையும் இந்த ஸ்தோத்ரம் முழுவதிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குமேல் அம்பிகையின் ரூபவிசேஷங்கள் தனித்தனி யாக வர்ணிக்கப்படுகின்றன. मदजलतमालपत्रा वसनितपत्रा कराहतस्खनित्रा । विहरति पुलिन्द्रयोषा गुञ्जाभूषा फणीन्द्रकृतवेषा ॥ ८५ ॥ மதஜல தமால பத்ரா வஸநித பத்ரா கராத்ருத கநித்ரா விஹரதி புளிந்தயோஷா குஞ்ஜாபூஷா பணீந்த்ர க்ருதவேஷா ॥ மத ஜலதமால பத்ரா -மதஜலத்தால் இடப்பட்ட திலகம் முதலிய அலங்காரத்தையுடையவளும், வணநித பத்ரா-இலைகளை வஸனமாகத் (ஆடையாக) தரித்தவளும், காஆத்ருத கநித்ராமண்வெட்டியைக் கையில் கொண்டவளும், குஞ்ஜா பூஷா - குந்து மணிகளாலான அலங்காரங்களை டைடயவளும்,பணீந்த்ர க்ருத வேஷா - ஸர்ப்பராஜங்களை அணிந்து கொண்டவளுமான, புளிந்த யோஷா - வேட ஸ்த்ரீயானவள், விஹாதி-விளையாடிக்கொண் டிருக்கிறாள். 1. இதில் அம்பாளுடைய சபரீ ரூபமானது வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அர்ஜுனன் பாசுபதாஸ்த்ரத்தையுத்தேசித்து தபஸ் செய்யும்போது பரமசிவனானவர் அவனுடைய பக்தியின் அதிசயத்தை அறியவேண்டித் தான் கிராத (வேட) வேஷத்தை ஆர்யா சதகம் தரித்தும், வேடஸ்த்ரீ வேஷம்பூண்ட அம்பிகையுடனும் நாய்கள் வேஷமுடைய நான்கு வேதங்களோடும் மற்றும் கிராதர்களுக் குரிய சின்னங்களோடும் அவ்விடம் ஆவிர்பவித்ததும், அப் போது அவருக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம் நடந்ததும், பிறகு அவர் அவனுக்கு பாசுபதாஸ்த்ரத்தை அளித்ததும், மஹாபார தத்திலும் கிராதார்ஜூ னீயத்திலும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஸமயம் அம்பிகைகொண்ட வேடஸ்த்ரீ வேஷம் இதில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இங்குச்சொல்லப்பட்ட ஆடையாபர ணங்களெல்லாம் வேடஸ்த்ரீகள் வழக்கமாக அணிந்துகொள்வதே. 2. அம்பிகையின் சபரீ ரூபம் பின்வருமாறும் வர்ணிக் கப்பட்டிருக்கிறது: 'பர்ஹாவதம்ஸயுத பர்பர கேசபாசாம் குஞ்ஜாவளீக்ருத காஸ்தந ஹாரசோபாம் । சயாமாம் ப்ரவாளவா ஸுகுமாரஹஸ்தாம் த்வாமேவ நௌமி சபரீம் சபரஸ்ய ஜாயாம் ॥• 81 'லுடத் குஞ்ஜாஹார ஸ்தநபரநமந் மத்யலதிகாம் உதஞ்சத் கர்மாம்ப: கண குணித வக்த்ராம்புஜருசம் । சிவம் பார்த்தத்ராண ப்ரவண ம்ருகயாகாரகுணிதம் சிவாம் அந்வக் யாந்தீம் சபரமஹம் அந்வேமி சபரீம் ॥' ஸகல ஜனனீ ஸ்தவம்) மாகந்த தரும பல்லவாருணபடீம் பூர்ணேந்து பிம்பாநநாம் தேவீம் திவ்யமயிம் ப்ரஸந்ந ஹ்ருதயாம் த்யாயேத் . (அம்பாஸ்தவம்) ● [கிராதாவ்ருதாம்। பர்ஹாபீத கசாபிராமசிகுராம் பிம்போஜ்வலச் சந்த்ரிகாம் குஞ்ஜாஹார லதாம்சுஜால விலஸத் க்ரீவாம் மதீரேக்ஷணாம்// (ஆகாச பைரவ கல்பம்) 11 'ச்யாமாம் வன்ஹிகலாப சேகரயுதாம் ஆபத்த பர்ணாம்சுகாம் குஞ்ஜாஹாரலஸத் பயோதரநதாம் அஷ்டாஹிபார் பிப்ரதீம் / தாடங்காங்கத மேகலா குணரணந் மஞ்ஜீரதாம் ப்ராபி தாந் கைராதீம் வரதாபயோத்யதகராம் தேவீம் த்ரிநேத்ராம்பஜே!!' மூகபஞ்சசதீ 3. அம்பிகைக்கு இந்த ரூபத்தில் புளிந்திநீ என்ற பெயர். இந்த ரூபத்திய உபாஸனையானது மிகவும் விசேஷமாகச் சொல் லியிருகிறது. 82 4.கமாலமென்றால் நெற்றியிலணியப்படும் (சந்தனம் முதலிய) ஜாதிக்குறி. பத்ரமென்பது ஸ்த்ரீகள் முகம், ஸ்தனம் முதலிய இடங்களில் செய்துகொள்ளும் அலங்கார விசேஷம். अङ्के शुकिनी गीते कौतुकिनी परितं च गायकिनी । च जयसि सविवेऽम्च भरवमण्डलिनी श्रवसि कुण्टलिनी ॥ ८६॥ அங்கே சுகிநீ இதே கௌதுகிநீ பரிஸரே ச காயகிந் ஜயஸி ஸவிதேzம்ப பைரவ மண்டலிநீ ச்ரவஸி சங்க குண்டலிநீ !! அங்கே சுகிநீ - முன்கையில் கிளியையுடையவளும், கீதே கௌதுகிநீ - ஸங்கீதத்தில் உத்ஸாஹமுடையவளும், -ஸமீபத்திலும் (தன்னைச் சுற்றியும்), பரிஸரே ச காயகர்களை யுடையவளும் (அதாவது, பாடிக்கொண்டிருக்கும் சக்திகளால் சூழப்பட்டவளும்), ஸவிதே - பக்கத்தில், பைரவ மண்டலிநீ பைரவர்களுடைய மண்டலங்களையவளும், ச்ரவஸி - காதில், சங்க குண்டலிநீ - சங்கினாலான குண்டலங்களையுடையவளுமான, அம்ப-ஹே ஜனனி ! ஜயஸி -நீ ஸர்வோத்கர்ஷத்துடன் விளங்கு கிறாய். காயகிநீ € 1. இதில் மந்த்ரிணீ ரூபமாக அம்பாள் வர்ணிக்கப்பட்டு இருக்கிறாள். மந்த்ரிணியானவள் லலிதாம்பிகைக்கு ப்ரதான மந்த்ரீ. அம்பிகையானவள் தனது ஸமஸ்த ராஜ்யபாரத்தையும் அவளிடம் ஒப்புவித்திருப்பதாகச் சொல்லப்படும். ஸங்கீதத்திற்கு அதிஷ்டான தேவதை. கையில் கிளியைத் தரித்திருப்பவளா கவும், ஸங்கீதத்தோடு கூடிய சக்தி ஸமூஹங்களால் சூழப்பட்ட வளாகவும் த்யானிப்பது வழக்கம். மந்த்ரிணிக்கு சுகச்யாமனை என்றும், ராஜ ச்யாமளை என்றும், ஸங்கீத ச்யாமளை என்றும் இன்னும் அனேகம் பெயர்களுண்டு. ஆர்யா சதகம் "ஸங்கீதயோகிநீ ச்யாமா சயாமளா மந்த்ரிநாயிகா । மந்த்ரிணீ ஸசிவேசாநீ ப்ரதாசீ சுகப்ரியா । வீணாவதீ வைணிக் ச முத்ரிணீ ப்ரியகப்ரியா । நீபப்ரியா கதம்பேசீ கதம்பவாவாஸிநீ ] ஸ்தாமதா ச நாமாநி ஷோடசைதாநி கும்பஜ II' (லலிதோபாக்யானம்) 83 2. ச்யாமளையின் ஆவரண தேவதைகளில், 'அஸிதாங்கோ ருரு: சண்ட க்ரோதநோந் மத்தோ பயங்கர: கபாலீ பீஷணச்சைவ ஸம்ஹாரீத்யஷ்ட பைரவா: II' என்ற பைரவாஷ்டகமடங்கிய பைரவமண்டலமானது ஐந்தாவது ஆவரணத்திலிருப்பதாகச் சொல்லப்படும். 3. சயாமளையின் காதில் சங்ககுண்டலம் தவிர தாளீபலாச தாடங்கம் (பனையோலைச்சுருள்) இருப்பதாகவும் வர்ணிக்கப்படும். प्रणतजनतापवर्गा कृतरणमर्गा ससिंह संसर्गा । कामाक्षि मुदितभर्गा हतुरिश्वर्गा त्वमेव सा दुर्गा ।॥ ८७ ॥ ப்ரணத ஜந்தாபவர்கா க்ருதரணஸர்கா ஸஸிம்ஹ ஸம்ஸர்கா । காமா முதித பர்கா ஒருதரிபுவர்கா த்வமேவ ஸா துர்கா II ப்ரணத ஜந்தா (அ) பவர்கா நமஸ்கரிக்கும் ஜனக்கூட்டங் களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பவளும், க்ருதரணஸர்கா யுத் தத்துக்குப் போகிறவளும், ஸஸிம்ஹ ஸம்ஸர்கா- ஸிம்ஹத் தோடிருப்பவளும், முதித பர்கா - பரமசிவனை ஸந்தோஷிக்கச் செய்தவளும்,ஹதரிபுவர்கா-சத்ருக்கூட்டங்களை நாசம் செய் தவளுமான ஸா துர்கா - அந்த துர்க்கையானவள், காமாக்ஷி ஹே காமாக்ஷி! த்வமேவ நீ தான். இதில் அம்பிகை துர்கா ரூபிணியாக வர்ணிக்கப்பட்டிருக் கிறாள். துர்கா தேவியின் ஆவிர்பாவம், பராக்ரமம்,அனுக்ரஹம் முதலியவற்றைப்பற்றி தேவி மாஹாத்ம்யம்,தேவி பாகவதம் முதலியவற்றில் பார்க்கவும். மூகபஞ்சசதீ "தாரி" "க்ருதபஹு ஸர்க்கா" என்ற பாடத்தில் நாநாவிதமான ஸிருஷ்டியைச் செய்பவளும் என்பது பொருள். श्रवणचलद्वेतण्डा समरोद्दण्डा धुतासुर शिखण्डा । देवि कलितान्त्रषण्डा घृतनरमुण्डा त्वमेव चामुण्डा ॥ ८८ ॥ 84 ச்ரவண சலத் வேதண்டா ஸமரோத்தண்டா துதாஸுரசிகண்டா । தேவி கலிதாந்த்ரஷண்டா த்ருத நரமுண்டா த்வமேவ சாமுண்டா । யானை தேவி-ஹே காமாக்ஷி! ச்ரவண சலத் வேதண்டா கள் ஆடிடும் காதுகளையுடையவளும், ஸமரோத்தண்டா - யுத்தத்தில் பயங்கரமாயிருப்பவளும், துத அஸ்ர சிகண்டா - அஸ்வர ச்ரேஷ்டர்களை ஸம்ஹாரம் செய்தவளும், கலித ஆந்த்ர ஷண்டாகுடல்களின் கொத்துக்களை (வாயில்)உடையவளும், த்ருத நர முண்டா -நரர்களின் முண்டங்களை (மாலையாக) அணிந்தவளு மான, சாமுண்டா -சாமுண்டா தேவியும், த்வமேவ - நீயே. இதில் அம்பிகை "சாமுண்டா" ரூபிணியாக வர்ணிக்கப்பட் டிருக்கிறாள். சண்டன், முண்டன் என்ற இரண்டு அவர்களை ஸம்ஹாரம் செய்ததால் காளிகாதேவிக்குச் சாமுண்டா என்று பெயர் ஏற்பட்டது. காளிகாதேவியைப்பற்றி தேவீமாஹாத்ம்யம் காளிகா புராணம் முதலிய க்ரந்தங்களில் பார்க்கவும். "ச்ரவணசலத் வேதண்டா" என்பதற்கு காதில் அசைந் தாடும் தந்தநகைகளுள்ளவளாயும் என்றும், "கவிதாந்தந் ஷண்டா" என்பதற்கு நரம்பு மாலையணிந்தவளாயும் என்றும் பொருள் சொல்லலாம். उर्वीधरेन्द्रकन्ये दवभरितेन भक्तपूरेण । गुर्वीमकिञ्चनार्ति स्वर्वीकुरुपे त्मेव कामाक्षि ॥ ८९ ॥ உர்வீதரேந்த்ர கந்யே தர்வீபரிதேந பக்த பூரேண । குர்வீம் அகிஞ்சநார்த்திம் கர்வீகுருஷே த்வமேவ காமாக்ஷி !! PADANG ஆர்யா சதகம் உர்விதரேந்த்ர- பர்வதராஜனான ஹிமவானுடைய,கந்யேபெண்ணே! காமாக்ஷி - ஹே காமாக்ஷி! தர்வீபரிதோ - (உன் கையிலுள்ள) காண்டி நிறைந்ததான, பக்தபூரேண அன்ன ப்ரவாஹத்தால், குர்வீம் அகிஞ்சநஆர்த்திம் - அகிஞ்சனனுடைய (ஒன்றுமே யில்லாதவனுடைய, பரம ஏழையினுடைய) மிகக் கொடியதான (தாரித்ரியத்தின்) கஷ்டத்தை, த்வமேவ -நீயே, கர் வீகுருஷே- குறைத்துவிடுகிறாய் (போக்கடித்து விடுகிறாய்). இதில் அம்பிகை அன்னபூர்ணா ரூபிணியாக வர்ணிக்கப் பட்டிருக்கிறாள். அன்னபூர்ணா தேவியானலள் இடது கையில் அன்னம் நிறைந்த பாத்ரத்தையும், வலது கையில் கரண்டியையும் வைத்துக்கொண்டு பக்தர்களுடைய பசியை (தாரித்ரியத்தை) போக்குவதாகச் சொல்லப்படுவாள். 'ஆதாய தக்ஷிணகரேண ஸுவர்ண தர்வீம் துக்தாந்ந பூர்ணமிதரேண ச ரத்நபாத்ரம் அந்நப்ரதாந நிரதாம் நவஹேமவர்ணாம் அம்பாம் பஜே கநகபூஷண மால்யசோபாம் ॥' அன்னபூர்ணா தேவியைப்பற்றி "நித்யாநந்தகரீ வராபயகரீ" என்று ஆரம்பிக்கும் அழகிய ஸ்தோத்ரமொன்று ஸ்ரீ மதாசார் யாளால் செய்யப்பட்டிருக்கிறது. 85 ताडित रिपुपरिपीडन-भबहरणनिपुणहलमुसला । क्रोडपति भोषणमुखी क्रीडसि जगति त्वमेव कामाक्षि ।॥ ९०॥ தாடிதரிபுபரி பீடநwy பயஹரண நிபுண் ஹலமுஸலா । க்ரோடபதி பீஷன் முக் க்ரீட்ஸி ஜகதி த்வமேவ காமாக்ஷி !! தாடித - அவமானப்படுத்தப்பட்ட (தோற்கடிக்கப்பட்ட) ரிபு - சத்ருக்களுடைய, பரிபீடா பய - உபத்ரவத்தின் பயத்தை, ஹரண - போக்குவதில், நிபுண - ஸாமர்த்யமுள்ள, ஹல முஸலா கலப்பையையும், உலக்கையையும் கைகளில் வைத்துக்கொண் டிப்ருபவளும், க்ரோடபதி - மஹத்தான வராஹத்தின், பீஷண முக- பயங்கரமான முகத்தையுடையவளுமான வாராஹி ரூபத்து டன், த்வமேவ - நீயே, ஜகதி க்ரீடஸி - உலகத்தில் விளங்குகிறாய். .உ 86 மூகபஞ்சசதீ 1. இதில் அம்பிகை வாராஹீ ரூபிணியாக வர்ணிக்கப் பட்டிருக்கிறாள். வாராஹியானவள் லலிதாம்பிகையின் சதுரங்க ஸைன்யங்களுக்கு யஜமானி. துஷ்ட நிக்ரஹத்திற்கும் சிஷ்டா னுக்கஹத்திற்கும் பூர்ணமான அதிகாரம் கொடுக்கப்பட்டவன். வாராஹியின் பெயர்கள் பின்வருமாறு: 'பஞ்சமீ தண்டநாதா ச ஸங்கேதா ஸமயேச்வரீ ! ததா ஸமயஸங்கேதா வாராஹீ போத்ரிணீ சவா ।! வார்த்தாளீ ச மஹாஸேநாப்யாக்ஞா சக்ரேச்வரீ ததா । அரிக்நீ சேதி ஸம்ப்ரோக்தம் நாமத்வாதசகம் முநே ॥' (லலிதோபாக்யானம்) 2. வாராஹீதேவியின் அனுக்கஹ சக்தியைப்பற்றியும் நிக் ரஹ சக்தியைப்பற்றியும் இரண்டு அஷ்டகங்கள் இருக்கின்றன. "करटवरिपरिपीडन भयहरण हलमुसन्य" "கரத்ருத ரிபுபரிபீடா பயஹரண நிபுணஹலமுஸலா"- என்று ஒரு பாடம். கரத்ருதகைகளில் தரிக்கப்பட்டதும், ரிபுபரிபீடந் - சத்துருக்களின் பீடை யையும்,பய - பயத்தையும், ஹரண போக்குவதில், நிபுண ஸாமார்த்தியமுள்ளதுமான, ஹலமுஸ்லா கலப்பை, உலக்கை இவைகளையுடையவள் - என்பது பொருள். "faf नभयहरण निपुण हलमुसला" தாடிதரிபுபரிவாரர் பீடாபயஹாண நிபுணஹலமுஸலா " என்று ஒரு பாடம். தாடிதரிபுபரிவாராஅடிக்கப்பட்ட சத்ருக்களின் பரிவாரங்களையுடையவளும், பீடா பயஹரண நிபுணஹலமுஸலா - சத்ருக்களின் பீடாபயத்தைப் போக்குவதில் ஸமர்த்தமான கலப்பை, உலக்கை இவைகளையுடை யவள் - என்பது பொருள். 56 स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला । कनकरुचिशौर्यशीला त्वमम्ब बाला कराब्जघृतमाला ॥ ९१ ॥ ஸ்மர-மதந-வரண-லோலா மந்மத ஹேலா-விலாஸ-மணிசாலா கநகருசி சௌர்யசீலா த்வமம்பு பாலா கராப்ஜ-த்ருதமாலா !! ஆர்யா சதகம் மத மன்மதனுடைய, அம்ப-தாயே! ஸ்மரமதா - பரமசிவனை, வரணலோலா பணிக்ரஹணம் செய்துகொள்வதில் பரபரப்புள்ளவளும், மன் ஹேலாவிலாஸ - ச்ருங்கார விலாஸங் களுக்கு (இருப்பிடமான), மணிசாலா -ரத்னக்ருஹமாயிருப்பவ ளும், கநகருசி சௌர்ய சீலா - ஸ்வர்ணத்தின் காந்தியை அப ஹரிப்பதில் ஸாமார்த்தியமுள்ளவளும், கராப்ஜ த்ருத மாலா தாமரஸ புஷ்பம் போன்ற கையில் மாலையைத் தரித்திருப்பவளு மான, பாலா த்வம்-குமாரீ (பாலாஸ்வரூப ஸ்வயம்வர கல்யாணி யும்) நீ தான். 87 இதில் அம்பிகை ஸ்வயம்வரையாக வர்ணிக்கப்பட்டிருக் கிறாள். இந்த ரூபத்திய த்யானம் பின்வருமாறு:- विमलग्टी कमलकुटी पुस्तक रुद्राक्षशस्तहस्तपुटी । कामाक्षि पक्षमलाक्षी कलितविपञ्ची विभासि वैरिश्ची ॥ ९२ ॥ விமலபடீ கமலகும் புஸ்தக ருத்ராக்ஷ சஸ்த ஹஸ்தபுடீ । காமாசு ப மலாக்ஷி கலித விபஞ்சீ விபாஸி வைரிஞ்சீ ॥ விமல்படீ பாலார்க்காயுத ஸுப்ரபாம் கரதலைர் லோலம்பமாலா குலாம் மாலாம் ஸந்தததீம் மநோஹரதனும் மந்தஸ்மிதோத்யர்முகீம்! மந்தம் மந்தமுபேயுஷீம் வரயிதும் சம்பும் ஜகன்மோஹிரீம் வந்தே தேவமுநீந்த்ர வந்திதபதாம் இஷ்டார்த்ததாம் [பார்வதீம் 11 வெண்மையான காமாக்ஷி -ஹே காமாக்ஷி! வஸ்த்ரத்தையுடையவளும், கமலகுடீ தாமரஸ புஷ்பத்தை வாஸஸ்தானமாக உடையவளும், புஸ்தக ருத்ராக்ஷ சஸ்த ஹஸ் தபுடீ - புஸ்தகம், ருத்ராக்ஷமாலை இவைகளையுடைய அழகிய கைகளையுடையவளும், பக்ஷ்மலாக்ஷுக்ஷி - அழகிய (இமை மயிர் களோடு கூடிய) கண்களையுடையவளும், கலித விபஞ்சீ-வீணை யை (கைகளில்) உடையவளுமான், வைரிஞ்சீ - (ப்ரம்ஹ பத்னி யான) ஸரஸ்வதியாக, த்வமேவ-நீயே, விபாஸி - விளங்குகிறாய். இதிலும், இதனடுத்துவரும் இரண்டு சலோகங்களிலும், முறையே ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் ப்ரதானமாயிருக்கும் 88 மூகபஞ்சசதீ அம்பிகையின் மூன்று ரூப விசேஷங்கள் வர்ணிக்கப்பட்டிருக் கின்றன. இந்த சலோகத்தில் அம்பிகை சாரதா ரூபிணியாக வர்ணிக்கப்பட்டாள். कुङ्कुमरु/चपिङ्गमसृक्पङ्किलमुण्डालि मण्डितं मातः । जयति तव रूपधेयं जपपटपुस्तकवरामयाब्जकरम् ॥ ९३ ॥ குங்குமருசி பிங்கம் அஸ்ருக்பங்கில முண்டாலி மண்டிதம் மாத: ஜயதி தவ ரூபதேயம் ஜப்பட புஸ்தக வராபயாப்ஜகரம் Ii மாத:தாயே! குங்குமருசிபிங்கம்-குங்குமம்போல் சிவந்த நிறத்தையுடையதும், அஸ்ருக் பங்கில - ரத்தம் வழிந்து அழுக் கானதுமான, முண்ட அலி மண்டிதம் - (தலை) முண்டங்களின் வரிசையால் அலங்கரிக்கப்பட்டதும், ஜபபட புஸ்தக வராபயாப்ஜ கரம் - ஜபமாலை, புஸ்தகம், வரதமுத்ரை, அபயமுத்ரை, இவை களையுடைய கராப்ஜங்களுடையதுமான, தவ ரூபதேயம் - உன்னு டைய ரூபமானது, ஐயதி - ஸர்வோத்கர்ஷமாக விளங்குகிறது. இதில் அம்பிகையின் த்ரிபுரா என்ற ரூப விசேஷமானது வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரூபத்தைப்பற்றி "ப்ரபஞ்ச ஸாரத்தில்'' சொல்லப்பட்டிருப்பது பின்வருமாறு:'ஆதாம்ரார்க்காயுதாபாம் கலித சசிகலா ரஞ்சிதப்தாம் த்ரிநேத்ராம் தேவீம் பூர்ணேந்து வக்த்ராம் வித்ருத ஜபவடீ புஸ்தகாபீத்ய பீஷ்டாம் । பீநோத்துங்க ஸ்தநார்த்தாம் வலிலஸித விலக்நாமஸ்ரூக் பங்கராஜந் முண்டஸ்ரங் மண்டிதாங்கீம் அருணதரதுகூலாஙலேபாம் நமாமி!। कनकमणि कलितमूषां कालायस कलहशीलकान्तिकलाम् । कामाक्षि शीलये त्वां कपालशूलाभिरामकरकमलाम् ॥ ९४ ॥ கநக மணி கலித பூஷாம் காலாய்ஸ கல்ஹ சீல காந்திகலாம் । காமாக்ஷி சீலயே த்வாம் கபால சூலாபிராம கரகமலாம் ॥ ஆர்யா சதகம் 89 காமாக்ஷி - ஹே காமாக்ஷி! காகமணி கலித பூஷாம் - தங் கம், ரத்னங்கள் இவையாலான ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவளும், காலாய்ஸ் கலஹசீல - எஃகுடன் சண்டை செய்யக் கூடிய (அதாவது, எஃகின் நிறத்தைத் தோற்கடிக்கும்), காந்தி கலாம் - காந்தியை உடையவளும், கபால சூலாபிராம கரகமலாம் கபாலம், சூலம் இவற்றுடனிருக்கும் காகமலங்களையுடையவளு மாக, த்வாம் சீலயே - உன்னை த்யானிக்கிறேன். இதில் அம்பிகையின் ப்ரத்யங்கிரா ரூபமானது வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பத்ரகாளிக்கு ப்ரத்யங்கிரா என்று பெயர். लोहितिमपुञ्जमध्ये मोहितभुवनं मुद्रा निरीक्षन्ते । वदनं तव कुचयुगलं काञ्चीसीमां च केऽपि कामाक्षि ॥ ९५ ॥ லோஹிதிம புஞ்ஜ மத்யே மோஹித புவநம் முதா நிரீக்ஷந்தே வதநம் தவ குசயுகளம் காஞ்சீஸீமாம் ச கேபி காமாக்ஷி! !! காமாக்ஷி - ஹே காமாக்ஷி!, லோஹிதிம புஞ்ஜ மத்யேசிகப்பின் ராசிபோன்றதான அநாஹத சக்ரத்தில் (அதாவது, மனதில்) மோஹித புவனம் - உலகத்தை மோஹிக்கச் செய்யும், தவ - உன்னுடைய, வதனம் - முகத்தையும், குசயுகளம் - இரு ஸ்தனங்களையும், காஞ்சீ ஸீமாம் ச - காஞ்சீ ப்ரதேசத்தையும், கேரபி - சில புண்யவான்கள் மட்டும்,முதா-ஆனந்தத்துடன், நிரீக்ஷந்தே - பார்க்கிறார்கள். ரு 1. இதில் அம்பிகையின் காமகலாரூபம் வர்ணிக்கப்பட்டி ருக்கிறது. அது மிகவும் ரஹஸ்யானதாய் இருந்தபோதிலும் சில விபரங்கள் கீழே சொல்லப்படுகின்றன. அதிகமாகத் தெரிந்து கொள்வதானால் ஸேதுபந்தம், காமகலா விலாஸம், ஆர் தர் ஏவலனுடைய கிரந்தங்கள் இவற்றைப் பார்ப்பதோடு குருமுக மாகவும் தெரிந்து கொள்ளவேண்டியது அவச்யம். 2. இந்த ரூபமானது துரீயஸ்வர ரூபமானது. அதில் முகத்தை ஒரு பிந்துவாகவும், இருஸ்தனங்களை இரண்டு பிந்துக் களாகவும் அவற்றிற்குக் கீழாக குஹ்யப்ரதேசத்தையும் த்யா னிக்க வேண்டும். அவற்றை இங்கு முறையே வதனம், குசயு களம், காஞ்சீஸீமா என்று சொல்லியிருக்கிறது. A. 12 90 மூகபஞ்சசதீ 'பிந்துனா முகம்,பிந்துத்வயேன குசௌ க்ருத்வா காமகலாம் இதி த்யாத்வா । (பரசுராம கல்பஸுத்ரம்) 'முகம் பிந்தும் க்ருத்வா குசயுகம் அதஸ்தஸ்ய தததோ ஹரார்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம் !" (ஸௌந்தர்யலஹரீ) ஸபரார்த்தேந யோனிம் 3. காஞ்சீஸீமா என்றால் காஞ்சியை (மேகலை, ஒட்டியாணம்) தரிக்குமிடம், அதாவது யோனி ப்ரதேசம் என்று அர்த்தம். இதேமாதிரி யோனியை ரசனாஸ்பதமென்று கீழேகண்ட காம கலாத்தியானத்திலும் சொல்லியிருக்கிறது. 'அக்ரபிந்து பரிகல்பிதாநநாம் அந்யபிந்து ரசிதஸ்தநத்வயீம் । நாதபிந்து ரசநாகுணாஸ்பதாம் 4. இம்மூன்று பிந்துக்களின் ஸமஷ்டியான காமகலாரூபி ணியாக அம்பிகையை த்யானிக்கும் பக்தனே லோகங்களை எல் லாம் மோஹிக்கச் செய்பவனாகச் சொல்லப்பட்டிருக்கிறான். 'ஸ ஸத்ய: ஸங்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு த்ரிலோகீமப்யாசு ப்ரமயதி ரவீந்துஸ்தனயுகாம் ॥' (ஸௌந்தர்யலஹரீ) ஆகவே அம்பிகையின் காமகலா ரூபத்தை 'மோஹித புவ னம்' என்று இங்கு சொல்லப்பட்டதின் காரணம் சொல்லத் தேவையில்லை. நௌமி தே பரசிவே பராம் கலாம் !!' जलधिद्विगुणितहुतवहदिशादिनेश्वरकलाश्विनेयदलैः । नलिनैर्महेशी गच्छसि सर्वोत्तरकरकमलदलममलम् ॥ ९६ ॥ ஜலதி த்விகுணித ஹுதவஹு திசா திநேச்வர கலாச்விநேயதளை:/ நளிநைர் மஹேசி கச்சஸி ஸர்வோத்தர கர கமலதளம் அமலம் ।I மஹேசி - மஹேச்வரியாகிய ஹே காமாக்ஷி! ஜலதி, த்வி குணித ஹுதவஹ, திசா, தினேச்வா,கலா, (ஆ) ச்விளேய தளை :- முறையே 4, 6, 10, 12, 16, 2 தளங்களுடைய,நளினை:கமலங்கள் (சக்கங்கள்) மூலமாக, அமலம் - பரிசுத்தமானதும், ஆர்யா சதகம் ஸர்வோத்தர - எல்லாவற்றிற்கும் மேல்பட்டதுமான், காகமல தளம் - ஸஹஸ்ரதள கமலத்தை, கச்சஸி - அடைகிறாய். 1. இங்கு குண்டலினீ ரூபிணியான அம்பிகையானவள் ஷட்சக்ர பேதநம் செய்து ஸஹஸ்ரார கமலத்திற்குப் போவது சொல்லப்பட்டது. இதைப்பற்றி ஸ்ரீ மதாசார்யாள் 'ஸௌந்தர்ய லஹரி"யில், 'மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் ஸ்திதம் ஸ்வாதிஷ்டாநே ஹ்ருதி மருதமாகாசமுபரி । மநோ zபி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம் ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே !!' 91 என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த வரிசையை அனுஸரித்து ஷட் சக்ரங்கள் (அவற்றின் தளங்களுடைய கணக்கைச்சொல்லி) இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. 2. இந்த (ஷட்) சக்கங்களை கமலங்களென்றும் சொல்லு வது வழக்கம். அப்படிச் சொல்லுகையில் மூலாதாரத்திற்கு நான்கும், மணிபூரகத்திற்கு ஆறும், ஸ்வாதிஷ்டானத்திற்குப் பத்தும், அனாஹதத்திற்கு பனிரெண்டும், விசுத்திக்கு பதினாறும் ஆக்ஞாவுக்கு இரண்டும், தளங்களிருப்பதாகச் சொல்லப்படும். 3. ஜலதியென்றால் ஸமுத்ரம் என்று அர்த்தம். ஸமுத்ரங் களை ஸாதாரணமாக (சதுஸ்ஸாகர,சதுஸ்ஸமுத்ர என்று நான்கு என்று சொல்லப்படுவதால்) ஜலதி என்பது நான்கைக்குறிக்கும். ஹுதவஹு -அக்னி. அக்னியானது கார்ஹபத்யம், ஆஹவ நீயம் தக்ஷிணாக்னி என்று மூன்றாகையால், ஹு தவஹம் என் பது மூன்றைக் குறிக்கும். அதை தவிகுணிதமாகச் செய்தால் (இரண்டால் பெருக்கினால்) ஆறு. திக்குகள் பத்து என்று சொல்லப்படுவதால் திசா என்ற பதமானது பத்தைக் குறிக்கும். தினேசர்கள் (ஸுபர்யர்கள், ஆதித்யர்கள்) பன்னிரெண்டு பெயர் ளன்று சொல்லப்படுவதால் தினேச என்ற பதமானது பன்னி ரெண்டைக் குறிக்கும். அச்வினீ தேவர்கள் இருவர்களாகையால் ஆச்வினேய என்ற பதமானது இரண்டைக்குறிக்கும். "aat 48னாகாரதயு என்றும் பாடம். 1 सत्कृतदेखि त्वरणा: सचीजनिर्बीजयोगिनिश्रेण्या । अपवर्गसौधवलभिमा रोहन्त्यम्च कोऽपि तव कृपया ॥ ९७ ॥ 92 மூகபஞ்சசதீ ஸத்க்ருத தேசிக சரணா: ஸபீஜ நிர்பீஜ யோக நிச்ரேண்யா । அபவர்க ஸௌத வலபிம் ஆரோஹந்த்யம்ப கேzபி தவக்ருபயா 11 அம்ப - ஜகன் மாதாவே! ஸத்க்ருத தேசிக சரணா: குருநாத ருடைய பாதங்களைப் பூஜித்தவர்களான, கே அபி - சில பாக்கிய சாலிகள், ஸபீஜ நிர்பீஜாயோகநிச்ரேண்யா- ஸபீஜயோகம், நிர்பீஜ யோகம் என்ற மாடிப்படிகள் வழியாக, அபவர்க ஸௌதவலபிம்மோக்ஷமென்ற மாளிகையின் உச்சிமாடிக்கு, தவ க்ருபயா - உன் னுடைய அனுக்ரஹத்தினால், ஆரோஹந்தி - ஏறுகிறார்கள். 1. இதில் பக்தர்கள் யோகாப்யாஸத்தின் மூலமாக அம்பி கையை உபாஸித்து பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையடைவ தாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்யமான ஒத்தாசையானது குருவின் உபதேசமாதலால் அது இங்கு இங்கு 'ஸத்க்ருத தேசிக சரணா:' என்று சொல்லப்பட்டது. மோக்ஷ 2.ஸௌதமென்றால் பலமாடிகளையுடைய மாளிகை யென் றர்த்தம். வலபீ என்றால் அப்பேர்ப்பட்ட மாளிகையின் மாடி கள் எல்லாவற்றிற்கும் மேலான மாடியென்றர்த்தம். மானது பல மாடிகளுடைய ய மாளின கையாக 'அபவர்கஸௌத மென்று இங்கு சொல்லப்பட்டது. மோக்ஷமென்பது ஸாலோக் யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம், கைவல்யம் என்று மெம்மேலான ஐந்து மாடிகளில் எல்லாவற்றிற்கும் மேலானதான கைவல்ய மோக்ஷம் "அபவர்கஸௌ தவலபி" என்று இங்கு சொல்லப்பட்டது. . 3. இப்பேர்ப்பட்ட மாளிகையிலுள்ள மாடிகளை ஏறுவதற் காக ஏற்பட்ட (நிச்ரேணீ) மாடிப்படிகளாக யோகம் சொல்லப் பட்டது. யோகமானது ஸோபானக்ரமமானதாக (படிப்படியான தாக) சொல்லப்படும். அப்படி படிப்படியாக ஏறிவரும்போது முடிவாக ஸ்பீஜயோகமென்ற ஸம்ப்ரக்ஞாத ஸமாதியானது ஏற் படுகிறது. பீஜமென்பதினால் பூர்வ கர்மாக்களின் ஸம்ஸ்கார வசத்தால் ஏற்படும் விருத்தியானது குறிப்பிடப்பட்டது. இது ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகாலத்திலுமிருப்பதால் அதை ஸ்பீஜயோக மென்று சொல்லப்பட்டது. அதற்கு மேலாக அவ்விதமான வருத்தியும் அற்றுப்போய், கர்ம ஸம்ஸ்காரங்கள் இருந்ததும் ஆர்யா சதகம் மனதானது நிராலம்பனமானதாகவும், நிர்விகல்பமாகவும் இருப் பதானது அஸம்ப்ரக்ஞாத ஸமாதியென்றும், நிர்பீஜயோகமென் றும் சொல்லப்படும். இந்த நிலையில் தான் கைவல்ய முக்தியேற் படுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. (இந்த விஷயங்களை பற்றி அறியவேண்டுமானால் பதஞ்ஜலிமஹர்ஷியின் யோகஸூத்ரங் களையும், ராஜயோகத்தைப்பற்றிய புஸ்தகங்களையும் பார்க்கவும்.) 4. இப்படி யோகாப்யாஸத்தினால் எவ்வளவு முயன்றாலும் மோக்ஷம் கிடைப்பதானது அம்பிகையின் அனுக்ரஹத்தைப் பொருத்ததாக இருப்பதால் அதையும் இங்கு 'தவக்ருபயா' என்று குறிக்கப்பட்டது. अन्तरपि बहिरपि त्वं जन्तुल्तेरन्तकान्तक्क्रुद्रहन्ते । चिन्तितसन्तानवतां सन्ततनपि तन्तनीषि महिमानम् ॥९८॥ அந்தரபி பஹிரபி த்வம் ஜந்துததேரந்தகாந்த க்ருதஹந்தே। சிந்தித ஸந்தா நவதாம் ஸந்ததமபி தந்தநீஷி மஹிமா நம் ! 93 அந்தகாந்தக்ருத் - அந்தகனுக்கு (யமனுக்கு) அந்தத்தை (மரணத்தை) உண்டு பண்ணின (அதாவது, மார்க்கண்டேயருக் காகக்காலனை ஸம்ஹாரம் செய்த) பரமசிவனுடைய, அஹந்தே அஹங்கார ரூபிணியாயிருக்கும், த்வம் -நீ, ஜந்துததே:- ஸகல பிராணிகளுக்கும், அந்தரபி - உள்ளிலும், பஹிரபி-வெளியிலும், இருந்துகொண்டு, சிந்தித ஸந்தானவதாம் - இடைவிடாத த்யா த்தையுடைய பக்தர்களுக்கு, ஸந்ததமபி - எப்போதும்,மஹி மானம் - மேன்மையை, தந்தநீஷி - அதிகரிக்கச் செய்கிறாய். 1. நிருபாதிக ஸம்வித் ரூபமாயிருக்கும் பரப்ரம்ஹத்திற்கு அத்துடன் அபின்னமாயிருக்கும் சக்தியினால்தான் அஹம் என்ற உணர்ச்சியானது ஏற்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. காச ரூபமானது விமர்ச ரூபமான கண்ணாடியில் தன் ப்ரதிபிம் பத்தைப் பார்த்தவுடன் அது யாரென்ற ஸந்தேஹம் தோன்றி தான் தான் (அஹமஹம்) என்ற உணர்ச்சியானது ஏற்படுகிறது. 'பரசிவ ரவிகரநிகரே ப்ரதிபலதி விமர்சதர்பணேவிசதே। F (காமகலாவிலாஸம்) இதிலிருந்துதான் ஜகத் ஸ்ருஷ்டி ஏற்படுவதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மூகபஞ்சசதீ 'ஸதேவ ஸௌம்யேதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் ப்ரம்ஹ ததைக்ஷத, ஸேயம் தேவதைக்ஷத ப்ரம்ஹ வா இதமக்ர ஆஸீத் ததாத்மான மேவ வேதாஹம் ப்ரம்ஹாஸ்மீதி ஸ ஈக்ஷத இமான் லோகான் ஸ்ருஜே .2. இப்படி ஸகல ஜகத் ஸ்ருஷ்டிக்கும் காரணமான சிவனுடைய அஹம்பாவத்திற்கு அம்பிகை காரணமாயிருப்பதால் அம்பிகையை அவருடைய அஹந்தா ரூபிணியென்றும் அஹங் கார ரூபிணியென்றும் சொல்வது வழக்கம். 'புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிதுராஹோ புருஷிகா । 94 (ச்ருதி) (ஸௌந்தர்யலஹரீ) பரம . 'அஹம்தாம் ஆலம்பே த்ருடதரம் அஹந்தாம் பசுபதே: । ' (நீலகண்டவிஜயம்) कलमञ्जुलवागनुमित-गलपञ्जरशुकग्रहौत्कण्ठयात् । अम्ब रदनाम्बरं ते बिम्बफलं शम्बरारिणा न्यस्तम् ॥ ९९ ॥ கலமஞ்ஜுள வாகநுமித் கலபஞ்ஜர சுகக்ரஹௌத்கண்ட்யாத்। அம்ப ரதநாம்பரம் தே பிம்ப பலம் சம்பராரிணா ந்யஸ்தம் ।! அம்ப- தாயே! கல மஞ்ஜு ள - அத்யந்தம் இனிமையான வாக் - குரலிலிருந்து, அனுமித - ஊஹிக்கப்பட்ட, கள பஞ்ஜ. கழுத்தாகிற கூட்டிலிருக்கும், சுக - கிளியை, க்ரஹெளக்கண்ட் யாத் - பிடிக்கவேண்டுமென்கிற ஆசையினால், சம்பராரிணா மன்மதனால், ந்யஸ்தம் - வைக்கப்பட்ட, பிம்பலம் - கோவைப் பழம் போல், த உன்னுடைய, ரதனாம்பரம் தடு (தோன்றுகிறது). > 1. அம்பிகையின் உதடானது கோவைப்பழம் போலிருப் பதை இதில் வெகு அழகாக வர்ணித்திருக்கிறது. அம்பிகையின் குரலானது அவளுடைய கழுத்திலிருந்து வெளிவருவதைக் கேட்ட மன்மதனானவன் அந்தக் கழுத்தாகிற கூண்டிற்குள் ஒரு கிளி இருந்து பேசுவதாக நினைக்கலானான். அதன்பேரில் அதைப் பிடிக்கவேண்டுமென்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. வாதா ஆர்யா சதகம் 95 ரணமாக கிளிகளைப் பிடிப்பதற்கு அவற்றிற்குப் பிரியமுள்ள ஒரு ஸாமானை அவற்றினெதிரில் வைத்து அதைத்தின்ன அவைவரும் போது பிடிப்பது வழக்கம். கிளிகளுக்கு கோவைப்பழத்தில் ப்ரியமதிகமென்று மன்மதனுக்குத் தெரியுமாகையால் அம்பிகை யின் உதடாகிற கோவைப்பழத்தை வைத்து அந்தக் கிளியைப் பிடிக்க மன்மதன் ஏற்பாடு செய்ததாக இங்கு வர்ணிக்கப்பட்டது அம்பிகையின் கழுத்து கிளிக்கூட்டுக்கும், குரல் கிளியின் குரலுக் கும், அதரம் கோவைக்கனிக்கும் உபமிக்கப்பட்டிருக்கின்றன. 2. சம்பராஸுரன் என்ற மிகவும் மாயாவியான அஸூ மரனை ஸம்ஹாரம் செய்ததால் மன்மதனுக்குச் சம்பராரியென்று பெயர். இப்படி எல்லாரையும் விட மாயாவியாயும் ஸகல ஜனங்களுடைய மனதையும் மயக்கிக் கலக்குகிறவனுமான மன்மதனே அம்பாளு டைய குரலின் இனிமையைப்பார்த்து மயக்கமடைந்தானென்றால் அதைப்பற்றி அதிகமாக வர்ணிக்கவேண்டியது அனாவச்யம். மேலும், அப்பேர்ப்பட்டவன் வைக்கும் கோவைப்பழமானது ஸாமான்யமானதாக இருக்கக்கூடியதல்லவாகையால் அம்பிகையின் அதரத்தினழகைப்பற்றியும் அதிகம் சொல்லத்தேவையில்லை. 3.ரதனம் என்றால் பல். அதற்கு ஆடையாக இருப்பது கதநாரம்பம் உதடு. 4. அம்பிகையின் கழுத்து, குரல், அதரம் இவற்றின் அழகைப்பற்றி ஸ்ரீமதாசார்யாளும் மிகவும் விசேஷமாக 'ஸௌர் தர்யலஹரீ'யில் வர்ணித்திருப்பதையும் பார்க்கவும். जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते । जय जय महेशदयिते जय जय चिगनकौमुदीधारे ॥ १०० ॥ ஜய ஜய ஐகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்ரிஸுதே। ஜய ஜய மஹேச தயிதே ஜட ஜய சித்ககந கௌமுதி தாரே ॥ ஜகதம்ப - ஜகன்மாதாவே! சிவே - பரமசிவனுடைய பத்னியே ஜயஜய - ஸர்வோத்கர்ஷமாக (என்முன்) விளங்கிக்கொண்டிருக் கவும், காமாக்ஷி -ஹே காமாக்ஷி! அத்ரிஸுதே -பர்வதராஜன் பெண்ணே! (ஜயஜய) மஹேசதயிதே -பரமேச்வரனுடைய மூகபஞ்சசதீ பத்னியானவளே! (ஐயஜய), சித்தகன கௌமுதீதாரே என்ற ஆகாசத்திலிருந்து பெருகும் நிலவின் தாரையாயிருப்ப வளே! (ஐயஜ்ய) 96 எப் இதுவரையில் அம்பிகையைப்பற்றிப் பலவிதமாக வர்ணித் திருந்தும் த்ருப்தியடையாத கவியானவர் அம்பிகையைப் பல பெயர்களாலழைத்துத் தன்னை அனுக்கஹிக்கவேண்டி, போதும் தன் முன்பாக ஜயத்துடன் விளங்கிக்கொண்டிருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறார்.['ஜயஜய' என்று அம்பிகை யை ஜயத்தோடிருக்க வேண்டுமென்று ஆசிர்வதிப்பதானது ஸ்தோத்ரம் செய்வதில் ஒருவிதம்.] இத்துடன் சதகம் முடிந்தது. அடுத்த சலோகமானது பல ச்ருதியை (இதைச் சொல்வதினால் உண்டாகும் அம்பிகையின் அனுக்கஹத்தை) சொல்லுகிறது. आर्याशतक भक्तया पठतामार्याकटाक्षेण । निःसरति वदनकमलाद्वाणी पियूषधोरणी दिव्या ॥ १०१ ॥ ஆர்யா சதகம் பக்த்யா படதாம் ஆர்யா கடாக்ஷேண । நிஸ்ஸரதி வதநகமலாத் வாணீ பீயூஷதோரணீ திவ்யா ॥ பக்த்யா - பக்தியுடன், ஆர்யாசதம் - இந்த ஆர்யாசதகத்தை படதாம் - வாசிப்பவர்களுக்கு, ஆர்யா கடாக்ஷேண - ஜகதம் பிகையின் கடாக்ஷத்தினால் (அனுக்ரஹத்தினால்). வதனகமலாத்அவர்களுடைய முகார விந்தங்களிலிருந்து, திவ்யா வாணி- தில் யமான (மிகவும் உயர்ந்த) வாக்கானது, பீயூஷதோரணீ -அம்ருத தாரை போல், நிஸ்ஸரதி - வெளிவருகிறது (ப்ரவஹிக்கிறது). " மூகபஞ்சசதீ முதல் பாகம் ஆர்யா சதகம் முற்றிற்று. சுபம்! 5)